E-paper| Mobile Apps

iPad

iPad E-paper

iPhone

Android

Android Tablet

Windows

Windows 8

Blackberry

bbicon OS 10

Mobile Election

| Get Font | Site Map |  RSS Feed
Advertisement
புதிய வாட் வரியை அமல்படுத்த வேண்டாம்:வர்த்தக சபையினர் முதல்வரிடம் கோரிக்கை
Advertisement
 
 
Advertisement
 
 
எழுத்தின் அளவு:
Advertisement

மாற்றம் செய்த நாள்

26 மார்
2013
05:29
பதிவு செய்த நாள்
மார் 26,2013 05:16

புதுச்சேரி:புதிய வாட் வரியை அமல்படுத்தாமல், பழைய வரியையே தொடர வேண்டும் என, வர்த்தக சபை சார்பில் முதல்வர் ரங்கசாமியிடம் கோரிக்கை வைக்கப்பட்டது.புதுச்சேரி வர்த்தக சபை தலைவர் செண்பகராஜன் தலைமையில், பல்வேறு வர்த்தக அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் முதல்வர் ரங்கசாமியிடம் நேற்று மனு அளித்தனர்.மனுவில், புதுச்சேரியில் கடந்த ஆண்டு ஜனவரி 1ம் தேதி முதல் புதிய வாட் வரி நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இதனால், பொது மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் பொருட்களின் விலை பன்மடங்கு உயர்ந்துள்ளது. ஏற்கெனவே பல்வேறு காரணங்களால் விலைவாசி உயர்ந்துள்ள நிலையில் வியாபாரம் மந்த நிலையில் உள்ளது.

இந்நிலையில், வாட் வரி உயர்வால், வெளி மாநிலத்தவர்கள், குறிப்பாக தமிழ் நாட்டிலிருந்து வருபவர்களின் எண்ணிக்கை வெகுவாகக் குறையும். வீட்டு உபயோகப் பொருட்கள் தமிழ்நாட்டை விட புதுச்சேரியில் விலை குறைவாக இருந்ததால், வியாபாரம் நன்றாக நடந்து, அரசுக்கும் விற்பனை வரி அதிகமாக கிடைத்தது.
புதிய வாட் வரியால், வியாபாரம் பாதிக்கப்பட்டால் புதுச்சேரி அரசுக்கு விற்பனை வரி மூலம் கிடைக்கும் வருவாயும் பாதிக்கும்.

சுற்றுலா வருபவர்களின் எண்ணிக்கையும் குறைந்து, அதைச் சார்ந்த தொழிலும் நலிவடைந்துள்ளது. போதிய வருமானமின்றி வியாபாரம் நலிவடைந்துள்ளதால், பலர் வேறு தொழிலுக்குச் செல்ல முடிவு செய்துள்ளனர்.எனவே, பொது மக்கள் மற்றும் வியாபாரிகள் நலன் கருதி, வாட் வரி உயர்வை மறு பரிசீலனை செய்யுமாறு கேட்டுக் கொள்கிறோம்.தானே புயல் வீசியதில் பல வர்த்தக நிறுவனங்கள் சேதமடைந்து பல கோடி ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் வீணாகி, பெரும் நஷ்டத்தை ஏற்படுத்தி உள்ளது.இந்தப் பாதிப்பிலிருந்து மீளாத வேளையில், வாட் வரி உயர்வு, புண்ணில் வேல் பாய்ச்சியது போல உள்ளது. எனவே, புதிய வாட் வரியை அமல்படுத்தாமல், பழைய வரியையே தொடர தாங்கள் ஆவன செய்ய வேண்டும், என கூறப்பட்டுள்ளது.

 

மேலும் புதுச்சேரி செய்திகள் :


Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
( OR )Login with
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.