அபாயம்! ஆபத்தான நிலையில் பள்ளி கட்டடங்கள்...ஆய்வு நடந்து ஓராண்டு ஆகியும் பலனில்லை
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

26 மார்
2013
05:38

செங்குன்றம்:வடகரை உள்ளிட்ட நான்கு இடங்களில், இடிந்து விழும் நிலையில், மாணவ, மாணவியரையும், ஆசிரியர்களையும் அச்சுறுத்தி கொண்டிருக்கும் அபாயகரமான பள்ளி கட்டடங்கள்,
இந்த கோடை விடுமுறையிலாவது அகற்றப்படுமா என, பெற்றோர் கேள்வி எழுப்பியுள்ளனர்.
வடகரையில்...
செங்குன்றம் அடுத்த வடகரையில், அரசு ஆதி திராவிட நல துறை ஆண்கள் மேல்நிலை பள்ளி இயங்கி வருகிறது. இங்கு, 6ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை, 1,200க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர்.
புதிய கட்டடங்கள் இருந்தாலும்,
கல்நார் (ஆஸ்பெஸ்டாஸ்) மற்றும்
மங்களூர் ஓடு வேய்ந்த சேதமடைந்த, இரண்டு பழைய கட்டடங்கள் அபாய நிலையில் உள்ளன.
புழல் ஊராட்சியில்...
அந்த பள்ளிக்கு அருகில் உள்ள, புழல் ஊராட்சி ஒன்றிய அரசு ஆதி திராவிட நலத்துறை ஆரம்ப பள்ளியில் உள்ள, இரண்டு பழைய கட்டடங்கள் மிக
மோசமான நிலையில் உள்ளன.
இங்கு, 170க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் படித்து வருகின்றனர். அவை பயன்பாட்டில் இல்லை என்றாலும், யாரும் அங்கு செல்வதற்கு அனுமதி மறுக்கப்படவில்லை என்பதால், எல்லாரையும் அச்சுறுத்தி கொண்டு இருக்கின்றன.
கிராண்ட் லைனில்...
வடகரை ஊராட்சிக்கு அடுத்துள்ள, கிராண்ட்லைன் ஊராட்சி மன்றத்திற்கு எதிரில், புழல் ஊராட்சி ஒன்றிய அரசு ஆரம்ப பள்ளி இயங்கி வருகிறது. இங்கு, 110 மாணவ, மாணவியர் படித்து வருகின்றனர்.
இந்த பள்ளி மாதவரம் நெடுஞ்சாலையை ஒட்டி அமைந்துள்ளது. வாகனங்களின் அதிர்வு காரணமாக, பள்ளி முன்புற சுற்றுச்சுவரின் ஒரு பகுதி இடிந்து விழுந்துள்ளது. இந்த பள்ளியின் வளாகத்தில் உள்ள, ஒரு பழைய கட்டடம் சேதம் அடைந்த நிலையில் உள்ளது.
நெடுஞ்சாலையை ஒட்டி பள்ளி இருப்ப தால், விபத்தை தவிர்க்கும் வகையில் காலை, மாலை நேரங்களில் போக்குவரத்து போலீசாரை பணியமர்த்த வேண்டும் என, பெற்றோர் எதிர்பார்க்கின்றனர்.
கதிர்வேடு, சூரப்பட்டு
அதே போன்று புழல் அடுத்த கதிர்வேடு பகுதியில் உள்ள, புழல் ஊராட்சி ஒன்றிய ஆரம்ப பள்ளியில், 50க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் படித்து வருகின்றனர். இங்குள்ள ஒரு கட்டடமும் சேதமடைந்துள்ளது.
அந்த கட்டடம் பயன்படுத்தப்படவில்லை. அதேநேரம், பள்ளிக்கூரை மற்றும் ஜன்னல்களை, விஷமிகள்
சிலர் அவ்வப்போது உடைத்து
சேதப்படுத்துகின்றனர்.
மாதவரம் மண்டலம் 24வது வார்டு, சூரப்பட்டு ஊராட்சியில் உள்ள நடுநிலை பள்ளியில், சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த, 300க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் படித்து வருகின்றனர். இங்கு, மேற்கூரை அகற்றப்பட்ட சேதமடைந்த கட்டடம், கடந்த இரண்டு ஆண்டுகளாக அகற்றப்படாமல் உள்ளது.
இளம் கன்று பயமறியாது என்பதால், பள்ளி மாணவ, மாணவியர் சேதமடைந்த கட்டடத்திற்கு அருகில் தான் விளையாடுகின்றனர். ஆசிரியர்கள், மாணவர்களின் பாதுகாப்பு கருதி, அவ்வப்போது அவர்களை அங்கிருந்து
செல்லும்படி அறிவுறுத்துகின்றனர்.
வடகரை அரசு ஆதி திராவிட
நலத்துறை மேல்நிலை பள்ளி குறித்து, கடந்தாண்டு ஜனவரி மாதம், "தினமலர்' நாளிதழில் படத்துடன் விரிவான செய்தி வெளியானது.
ஓராண்டு ஆகியும்...
இதையடுத்து, அப்போதைய
ஆதி திராவிட நலத்துறை கமிஷனர் சிவசங்கரன், திருவள்ளூர் மாவட்ட ஆதிதிராவிட நலத்துறை அலுவலர் ஆகியோர் நேரில் ஆய்வு செய்தனர்.
அப்போது, அங்கு சேதமடைந்த,
13 அபாய கட்டடங்கள் இருப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து, அந்த கட்டடங்களை அகற்றி விட்டு, சுற்றுச்சுவர் அமைக்க மதிப்பீடு தயாரிக்கவும், குடிநீர் வசதியை முறைப்படுத்தவும் பள்ளி
நிர்வாகத்திற்கு உத்தரவிடப்பட்டது.
"இந்த பணிகளுக்காக, மத்திய சிறப்பு நிதி ஒதுக்கப்படும். அதன் மூலம் ஆண்டு தேர்வு முடிந்ததும் கோடை விடுமுறையில், மேற்கண்ட பணிகள் நிறைவேறும்' என, அதிகாரிகள் தரப்பில் கூறப்பட்டது.
ஆனால், இன்று வரை, அதற்கான பணிகள் செயல்படுத்தப்படவே இல்லை என்பதுதான் உண்மை.
கோரிக்கை
அதே போன்று வடகரை, கிராண்ட்லைன், கதிர்வேடு பகுதிகளில் உள்ள, புழல் ஊராட்சி ஒன்றிய ஆரம்ப பள்ளி கட்டடங்களின் அபாய நிலை குறித்து, ஒன்றிய அதிகாரிகள், விவரம் பெற்று சென்றதாக கூறப்படுகிறது.
தங்கள் பிள்ளைகளின் கல்வி, பாதுகாப்பு, எதிர்காலம் கருதி மேற்கண்ட பள்ளிகளின் நிலையை மேம்படுத்த, அச்சுறுத்தும் அபாய கட்டடங்களை, வரும் கோடை விடுமுறையிலாவது அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பெற்றோர் மற்றும் ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.இந்த பணிகளுக்காக,
மத்திய சிறப்பு நிதி ஒதுக்கப்படும். கோடை விடுமுறையில், மேற்கண்ட பணிகள்
நிறைவேறும் என, அதிகாரிகள் தரப்பில் கூறப்பட்டது

 

Advertisement
மேலும் சென்னை மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (1)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Yoga Kannan - Al Buraidh,சவுதி அரேபியா
26-மார்-201311:11:22 IST Report Abuse
Yoga Kannan மரியாதைக்குரிய தமிழக அரசே,,,,, இலவசங்களை வாரி இரைக்கிறீர்களே,,,,, maththiya அரசு நிதி ஒதுக்கித்தான் செய்கிறீர்களா ,,,,,மலரினுடைய அறிவிப்பை பார்த்ததும்,,, எனக்குக்கு இந்த நினைவு தான் வந்தது,,, கல்விக்கு கண் தந்த கர்ம வீரர் காமராஜரிடம் நெருங்கிய நண்பர் சொன்னாராம் இரண்டு லட்சம் தயார் செய்தல் வரும் தேர்தலில் ஒரு படம் எடுத்து நாம் வெற்றி பெற்று விடலாம் என்று,,,,, antha பணம் இருந்தால் நான் இரண்டு பள்ளி கூடங்களை கட்டுவேன் என்றாராம் காமராஜர்,,,, இது தெளிந்த நீரோடை ,,,,,, இப்போது உள்ளவை அனைத்தும் சாக்கடையாயகத்தான் நினைக்கத்தோன்றுகிறது,,, விழலுக்கு இறைத்த நீராக செலவிடப்படும் மக்கள் வரிப்பணம் ,,,,,,என்று இது போன்ற பயனுள்ள பள்ளி கட்டிடங்களுக்கு பயன்படப்போகிறதோ,,,,,,, திட்டங்கள் தீட்டினால் மட்டும் போதாது,,,, அவை முறையாக செயல் படுத்தப்படவேண்டும்.... அறிவிப்புகள் வேறு அறிவிப்புகளாக இருந்து என்ன பயன்,,,, சம்பந்தப்பட்ட துறை அலைச்சியம் செய்யாமல் துரித நடவடிக்கையில் இறங்க வேண்டும்,,, அசம்பாவிதங்களுக்கு முன்பு அணை போடவேண்டும்,,, அதுவே சாலச்சிறந்தது,,,,,
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.