E-paper| Mobile Apps

iPad

iPad E-paper

iPhone

Android

Android Tablet

Windows

Windows 8

Blackberry

bbicon OS 10

Mobile Election

| Get Font | Site Map |  RSS Feed
Advertisement
மதுரையில் "தினமலர்' வழிகாட்டி துவங்கியது முதல் நாளில் குவிந்த மாணவர்கள்
Advertisement
 
 
Advertisement
 
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

26 மார்
2013
06:45

மதுரை:மாணவர்கள் பிளஸ் 2க்கு பின், என்ன படிப்புக்களை தேர்வு செய்யலாம் என்பது குறித்து, "தினமலர்' மற்றும், சென் னை, டாக்டர் எம்.ஜி.ஆர். கல்வி, ஆராய்ச்சி நிறுவன பல்கலை இணைந்து, மதுரை தல்லாகுளம் லட்சுமி சுந்தரம் ஹாலில் நடத்தும், "வழிகாட்டி' நிகழ்ச்சி, நேற்று துவங்கியது.
முதல் நாள் நிகழ்ச்சியை, பல்கலை தலைவர், ஏ.சி.எஸ்.அருண்குமார், குத்து விளக்கேற்றி துவக்கினார்.
நூற்றுக்கும் மேற்பட்ட கல்வி நிறுவனங்களின் கண்காட்சி அரங்கை, மதுரை கலெக்டர் அன்சுல் மிஸ்ரா திறந்து வைத்தார். முதல் நாளிலேயே, ஆயிரக்கணக்கான மாணவ, மாணவியரின் கூட்டம் அலைமோதியது.
நிகழ்ச்சியில் கருத்தரங்கை துவக்கி வைத்து, பல்கலை திட்ட இயக்குனர் வாசுதேவன் பேசியதாவது:
பள்ளி படிப்பை முடித்த நீங்கள், எதிர்காலம் கருதி வேலை வாய்ப்புகளை தரும் படிப்புகளை தேர்வு செய்யும் கட்டாயத்தில் இருக்கிறீர்கள். இன்று நீங்கள் எடுக்கும் முடிவு, உங்கள் எதிர்காலத்தை நிர்ணயிக்கும். ஒரு திட்டத்தை வகுத்து, அதை நிறைவேற்றுவதற்கான செயலாக்கத்தை நோக்கி பயணிக்க வேண்டும்.
தடைகளை தகர்க்கலாம்
அவ்வாறு செல்லும்போது வரும் தடைகள், தகர்த்து வெற்றி பெறுவது குறித்தும், ஆய்வு செய்ய வேண்டும்.
பிளஸ் 2வில் நீங்கள் பெறும் மதிப்பெண் அடிப்படையில், தேர்வு செய்வது வேலைக்கு தகுந்த படிப்பாக இருக்க வேண்டும்.
பட்டப்படிப்புகள் படித்து வெளியேறும், 35 சதவீத மாணவர்களே, சிறப்பான வேலைக்கு செல்கின்றனர். படிக்கும்போதே, வேலைக்கான தகுதியை மாணவர்கள் வளர்த்துக் கொள்ள வேண்டும்.
இவ்வாறு, அவர் கூறினார்.
"சிவில் சர்வீஸ் தேர்வுகளில் வெற்றி பெறுவது எப்படி' என, தமிழக கடலோர காவற்படை ஏ.டி.ஜி.பி., சைலேந்திர பாபு பேசியதாவது:
ஒவ்வொரு மாணவருக்கும், பிளஸ் 2 தேர்ச்சி மற்றும் மதிப்பெண்கள், திருப்புமுனையை ஏற்படுத்துகிறது. நல்ல மதிப்பெண் பெற்றால், நல்ல கல்லூரியில் படிக்கும் வாய்ப்பு கிடைத்து, அதிக சம்பளத்தில், உடனடியாக வேலை கிடைக்கும்.
சாதிக்க ஆசைப்படுங்கள். அந்த ஆசை மனதில் இருந்தால் தான் விரைவில் அடைய முடியும். ஐ.ஏ.எஸ்.,-ஐ.பி.எஸ்., போன்ற பதவிகள், சமுதாயத்தில் நல்ல மரியாதை உள்ளவை.
திட்டமிட்டு, ஒரு நாளைக்கு, எட்டு மணி நேரம் படித்தால், நிச்சயம், ஐ.ஏ.எஸ்., - ஐ.பி.எஸ்., போன்ற, உயர் பதவிகளை அடைய முடியும். இதனால், சிறு வயதில் உயர்ந்த பதவி, சமுதாயத்தில் அங்கீகாரம், தலைமைப் பண்பு, பொறுபுக்கள் கிடைக்கும். இன்றைக்கு பொறியியல் படித்தவர்கள் அதிகம் பேர், இப்பதவிகளை வெல்கின்றனர்.
விடா முயற்சி செய்யுங்கள்
படித்தால் மகிழ்ச்சி தரக் கூடிய பாடங்களை தேர்வு செய்யுங்கள். மெயின் தேர்வு வரை, மொழிப் பாடங்களில் தேர்வு எழுதலாம்.
வினாக்கள் அமைப்பை தெரிந்து வைத்திருக்க வேண்டும். நேர்காணல் உட்பட, மொத்தம், 2,300க்கு, 1,300 மதிப்பெண் பெற்றால், நிச்சயம், ஐ.ஏ.எஸ்., தேர்ச்சி பெற்று விடலாம்.
எடுக்கும் மதிப்பெண்ணிற்கு ஏற்ப, 22 உயர் பதவிகளை, அடுத்தடுத்து தேர்வு செய்யலாம். மாணவர்கள் ஆங்கிலத்தில் பேச்சு மற்றும் எழுத்து திறமையை வளர்த்துக் கொள்ள வேண்டும். அதற்கு விடாமுயற்சி மற்றும் பயிற்சியும் அவசியம்.
இவ்வாறு, அவர் பேசினார்.


 

மேலும் மதுரை மாவட்ட  செய்திகள் :


Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
( OR )Login with
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.