பள்ளிக்கரணையில் நிலத்தடி நீர் தொடர் திருட்டு : தடுக்க கோரி பகுதிவாசிகள் திடீர் மறியல்
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
எழுத்தின் அளவு:
Advertisement

மாற்றம் செய்த நாள்

29 மார்
2013
07:11
பதிவு செய்த நாள்
மார் 28,2013 21:01

பள்ளிக்கரணை:புறநகர் பகுதிகளில் உள்ள பல ராட்சத கிணறுகளிலிருந்து "டேங்கர்' லாரிகள் தினசரி லட்சக்கணக்கான லிட்டர் தண்ணீரை விற்பனைக்கு எடுத்து செல்வதால், நிலத்தடி நீர்மட்டம் வெகுவேகமாக குறைந்து வருகிறது. இதை கண்டித்து, நேற்று பள்ளிக்கரணையில் பகுதிவாசிகள், திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.சென்னையில், பல பகுதிகளில் தண்ணீர் தட்டுப்பாடு உருவெடுத்து வருவதால், புறநகர் பகுதிகளில் இருந்து, விற்பனைக்காக, சட்டவிரோதமாக தண்ணீர் எடுக்கும் தொழிலும் களைகட்ட துவங்கி உள்ளது. நீர் முதலாளிகள்
தற்போது, சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பள்ளிக்கரணை பகுதி, ஒரு காலத்தில் விவசாயத்தை நம்பிய கிராமமாக இருந்தது. அப்போது, இந்த பகுதியில் உள்ள நீர் நிலைகள் அருகில், விவசாயத்திற்காக ஏறத்தாழ 15 ராட்சத கிணறுகள் வெட்டப்பட்டன. ஏரி, குளம் போன்ற நீர் நிலைகளின் அருகில் இவை அமைந்து இருந்ததால், கடுமையான கோடையிலும் வற்றாத தன்மை கொண்டிருந்தன. கடந்த 20 ஆண்டுகளில், விவசாய நிலங்கள் குடியிருப்புகளுக்காக விற்கப்பட்டன. ஆனால், நில உரிமையாளர்கள், கிணறுகள் உள்ள இடங்களை மட்டும் விற்கவில்லை. சென்னையில் குடிநீர் பற்றாக்குறை ஏற்படும் நேரங்களில், தனியார் நீர் வினியோக நிறுவனங்கள், வீடுகள், ஓட்டல் களுக்கு, இவர்கள், கிணற்று நீரை விற்று வருகின்றனர்.1.2 லட்சம் லிட்டர் கடந்த 10 ஆண்டுகளாக, அமோகமாக நடந்து வரும் இந்த தொழிலால், இந்த நீர் முதலாளிகள் மாதம் லட்சம் ரூபாய் வரை வருமானம் பார்ப்பதாக கூறப்படுகிறது.
ஒவ்வொரு கிணற்றில் இருந்தும், தினமும், 12 நடை நீர் விற்கப்படுகிறது. ஒரு நடை என்பது 10 ஆயிரம் லிட்டர் கொண்ட ஒரு "லோடு'. அதாவது, தினமும், 1.2 லட்சம் லிட்டர் நீர் ஒவ்வொரு கிணற்றில் இருந்தும் உறிஞ்சப்படுகிறது.
முதலில் 50 ரூபாய்க்கு விற்கப்பட்ட ஒரு நடை, தற்போது, 400 முதல் 600 ரூபாய்க்கு விற்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
கட்டுப்பாடற்ற உறிஞ்சலால், பள்ளிக்கரணை பகுதியின் நிலத்தடி நீர் மட்டம் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது. பகுதிவாசிகள் போராட்டத்தில் குதித்தாலும், இந்த "லாபகரமான' பிரச்னை குறித்து, அதிகாரிகள் எந்த நடவடிக்கையையும் எடுப்பதில்லை.
சாலை மறியல்
இந்த நிலையில், பள்ளிக்கரணை சிட்டிபாபு நகர் மற்றும் அம்பாள் நகரில் நிலத்தடி நீர் வெகுவாக குறைந்து விட்டது. இங்குள்ள பெரும்பாலான வீட்டு கிணறுகள் மற்றும் ஆழ்துளை கிணறுகள் வற்றி போய்விட்டன.
மேலும், தினசரி 150க்கும் மேற்பட்ட லாரிகள் தண்ணீர் எடுக்க வருவதால் சாலைகளும் படுமோசமாகிவிட்டன. இந்த பிரச்சனைகளை கண்டித்து, குறிப்பாக நிலத்தடி நீர் திருட்டை தடுக்க கோரி, நேற்று தாம்பரம் - வேளச்சேரி சாலையில் பகுதிவாசிகள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இதனால், அந்த சாலையில், அரைமணிநேரத்திற்கு மேல் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. பள்ளிக்கரணை போலீசார், போராட்டத்தில் ஈடுபட்டவர்களை சமாதானப்படுத்த முயன்றனர். சோழிங்கநல்லூர் துணை தாசில்தார் வில்பிரட், நேரில் வந்து மறியலில் ஈடுபட்டோரிடம், பேச்சு வார்த்தை நடத்தினார்.
இந்த பிரச்னைக்கு உடனடியாக தீர்வு காண்பதாக உறுதியளித்து, ராட்சத கிணறுகள் உள்ள இடத்தை அவர்களுடன் சென்று பார்வையிட்டார்.
பின், அங்கு தண்ணீர் எடுக்க லாரிகள் செல்ல முடியாத வகையில் தடுப்பு நடவடிக்கை எடுப்பதாக உறுதி கூறினார். இதையடுத்து, போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர்.
நோட்டீஸ்
இதுகுறித்து, சோழிங்கநல்லூர் துணை தாசில்தார் வில்பிரட் கூறியதாவது:
சோழிங்கநல்லூர் வட்டாட்சியர் எல்லைக்கு உட்பட்ட பல இடங்களில் விவசாய நில கிணறுகளில், அரசின் இலவச மின் இணைப்பு பெற்று நிலத்தடி நீர் டேங்கர் லாரிகளுக்கு விற்பனை செய்யப்படுகிறது. இதனால், பல பகுதிகளில் நிலத்தடி நீர் குறைந்து வருவது உண்மைதான்.
மாவட்ட கலெக்டர் சித்திரசேனன் உத்தரவினை பெற்று, நிலத்தடி நீர் திருடி விற்பனை செய்யும் நில உரிமையாளர்களுக்கு முறைப்படி நோட்டீஸ் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.
மேலும், விவசாயம் நடக்காத பகுதிகளில் உள்ள மின் இணைப்பையும் துண்டிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
குரோம்பேட்டையில்...
கோடை துவங்கிய ஒரு சில வாரங்களிலேயே குரோம்பேட்டை கிழக்கு, ஜமீன் பல்லாவரம், பம்மல் பகுதிகளில் வீட்டு கிணறுகளில் நீர் வற்றி விட்டது. அக்னி நட்சத்திரம் துவங்குவதற்குள், தண்ணீருக்கு கடும் பற்றாக்குறை ஏற்படும் என, பகுதிவாசிகள் அச்சம் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து, இந்த பகுதிவாசிகள் கூறுகையில், "உள்ளாட்சி நிர்வாகத்தினர் இனியும் காலம் தாழ்த்தாமல், தங்கள் பகுதிகளில் உள்ள நீர்நிலைகளை தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றனர்.
அனுமதி இல்லை
சென்னை குடிநீர் வாரிய அதிகாரி ஒருவர் கூறியதாவது:
சென்னையில், 1997-98ம் ஆண்டுகள் வரை, குடிநீருக்காக நிலத்தடி நீர் எடுக்க அனுமதி வழங்கப்பட்டது. கடந்த, 15 ஆண்டுகளாக, நிலத்தடி நீர் எடுக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
சென்னை புறநகர் பகுதிகளான, பள்ளிக்கரணை, மாத்தூர், மஞ்சம்பாக்கம் போன்ற பகுதிகளில் தண்ணீர் எடுப்பதாக புகார்கள் உள்ளன. இந்த பகுதிகளில், வருவாய் துறை மூலம் நடவடிக்கை எடுக்கப்படுகிறது. கடந்த ஆண்டுகளில், 20க்கும் மேற்பட்ட லாரிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
இவ்வாறு அவர் கூறினார்.
சட்ட ரீதியாக என்ன நடவடிக்கை?
சென்னை பெருநகர நிலத்தடிநீர் ஒழுங்குபடுத்தும் சட்டத்தின் கீழ், திருட்டில் ஈடுபடும் லாரிகள் பறிமுதல் செய்யப்படும்.
முதல் முறை லாரி சிக்கினால், ரூ.2,000
இரண்டாம் முறை சிக்கினால் ரூ.5,000
மூன்றாம் முறை சிக்கினால், தவறு செய்ய துவங்கிய நாளில் இருந்து, தினசரி ரூ.1,000 அபராதம் விதிக்கப்படும்.
அபராத தொகையை, சென்னை குடிநீர் வாரியத்துக்கு செலுத்திய பின், லாரிகள் விடுவிக்கப்படும்.

காலம் காலமாக நடக்கும் இந்த நிலத்தடி நீர் திருட்டுக்கு, உள்ளூர் தலைவர்கள், அதிகாரிகள் உடந்தை. விவசாயம் நடக்காத இடங்களில் உள்ள கிணறுகளை மூட
வேண்டும். அவற்றுக்கான மின் இணைப்பும் துண்டிக்கப்பட வேண்டும்.
வாசுதேவன்
அம்பாள் நகர், பள்ளிக்கரணை

ராட்சத கிணறுகளுக்கு தினசரி நூற்றுக்கும் மேற்பட்ட லாரிகள் வந்து செல்வதால், சாலைகள் மோசமாகி விடுகின்றன. அதிக நடை தண்ணீர் எடுக்க வேண்டும் என்பதால், அதிவேகமாக செல்லும் லாரிகளால்
விபத்துகளும் அதிகரிக்கின்றன.
கோமதி
சிட்டிபாபு நகர், பள்ளிக்கரணை

சென்னை புறநகரில் மட்டும் 150க்கும் மேற்பட்ட கிணறுகள் மூலம் நிலத்தடி நீர் திருடப்படுகிறது. நிலத்தடி நீரை பாதுகாக்கும் வகையில் ஏரிகள், குளங்கள் தூர்வாரி பாதுகாக்கப்பட வேண்டும். மழைநீர் சேகரிப்பு திட்டத்தையும் ஊக்கப்படுத்த வேண்டும்.
சத்யா
மயிலை பாலாஜி நகர், பள்ளிக்கரணை

 

Advertisement
மேலும் சென்னை மாவட்ட  செய்திகள் :


Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (1)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Ramasami Venkatesan - Chennai - now in Brisbane - Aus,இந்தியா
30-மார்-201306:28:20 IST Report Abuse
Ramasami Venkatesan மனிதனுக்கு தேவை உணவு, உடை, இடம் (வீடு). உணவு உற்பத்தி சீரழிந்துவிட்டது. விளை நிலங்களில் இப்போது வானளாவிய கட்டிடங்கள் நிற்கின்றன. உடையும் குறைந்துகொண்டே வருகிறது கண்கூடாக. வீடு மாத்திரம் ஏராளம். இப்படியும் ஒரு நிலை வரலாம் உணவு உடை இல்லாமல் வீட்டிலேயே முடங்கிக்கிடக்கும் நிலை. விளை நிலங்கள் உள்ள இடங்களில் நிலத்தடி தண்ணீர் ஏராளம் இயற்கையின் தாராளம். அதையும் திருடி விற்கும் நிலையில் நாம் இருக்கிறோம். எதிலும் வியாபாரம் - இன்றைய நம் நிலைமை. நிலத்தடி தண்ணீர் சொல்லி பிளாட்களை நல்ல விலைக்கு விற்று இன்று அந்த நிலத்தடி தண்ணீருக்கும் ஆபத்து. இதுவே பள்ளிக்கரணைவாசிகளின் துயரம் இன்று.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.