தொழில் மறுமலர்ச்சி கருத்தரங்குஇன்று!:குடும்பத்துடன் பங்கற்க அழைப்பு
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

29 மார்
2013
00:38

திருப்பூர்:பனியன் உற்பத்தியாளர்களுக்கு பல்வேறு தொழில்நுட்ப அறிவுரைகளை வழங்கும் வகையில், "வெற்றிப்பாதையில் திருப்பூர்-2013' என்ற தொழில் மறுமலர்ச்சி கருத்தரங்கு, திருப்பூரில் இன்று மாலை 3.00 முதல் இரவு 7.00 மணி வரை நடைபெறுகிறது. தொழில் துறையினர் குடும்பத்துடன் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.கடந்த சில ஆண்டுகளில் பனியன் தொழிலுக்கு ஏற்பட்ட பல்வேறு சோர்வுகளை போக்கி, புத்துணர்ச்சி ஏற்படுத்தும் வகையில், நிப்ட்-டீ கல்லூரி சார்பில் கடந்தாண்டு, "வெற்றிப்பாதையில் திருப்பூர்' என்ற தலைப்பில், தொழில் மறுமலர்ச்சி கருத்தரங்கு நடத்தப்பட்டது.
வீண் விரயங்களை தவிர்ப்பது குறித்தும், உற்பத்தியை பெருக்குவது குறித்தும் தொழில்துறையினர் புதிய அனுபவம் பெற்றனர். குறிப்பாக, குறைந்த வட்டியில் வெளிநாட்டு பண மதிப்பில் வங்கி கடன் பெறுவது குறித்து விழிப்புணர்வு ஏற்பட்டது.அதன் தொடர்ச்சியாக, திருப்பூர் வேலாயுதசாமி கல்யாண மண்டபத்தில், "வெற்றிப்பாதையில் திருப்பூர்-2013' என்ற தொழில் மறுமலர்ச்சி கருத்தரங்கு இன்று நடத்தப்படுகிறது. சரியாக, மாலை 3.00 மணிக்கு துவங்கி, 7.00 மணி வரை நடக்கிறது.கலெக்டர் கோவிந்தராஜ் தலைமை வகிக்கிறார். கடலோர பாதுகாப்பு படை ஏ.டி.ஜி.பி., சைலேந்திர பாபு சிறப்புரையாற்றுகிறார். எஸ்.பி., அமித்குமார் சிங், ஐ.ஏ.எஸ்., அதிகாரி இறையன்பு ஆகியோர் பங்கேற்று, தொழில் துறையினருக்கு நம்பிக்கையூட்டும் வகையில் பேசுகின்றனர்.தொழிலாளர்களை சரியான முறையில் பயன்படுத்தி, பற்றாக்குறையை போக்கும் வகையில், மனிதவள மேலாண்மை மற்றும் திட்டமிடல் என்ற தலைப்பில், உற்பத்தி ஆலோசகர் மணிகண்டன் பேசுகிறார். டையிங், கேலண்டரிங், அயர்ன், நிட்டிங் ஆகிய பிரிவுகளில், நீராவி வீணடிப்பது குறித்தும், நீராவியை முறையாக பயன்படுத்துவது குறித்தும், கண்ணுக்கு தெரியாமல் வீணாகும் எரிசக்தி கட்டுப்பாடு குறித்தும், மின்சார சேமிப்பு குறித்தும் எரிசக்தி ஆய்வாளர் மணவாளன் பேச உள்ளார்.
தொழில் நிறுவனங்கள் சந்திக்கும் பிரச்னைகளை, தொழில் வாய்ப்புகளாக மாற்றுவது குறித்து, மதுரை தொழில் முனைவோர் முன்னேற்ற பயிற்சி மைய உறுப்பினர் செயலர் ஜெயராமன் பேசுகிறார். குஜராத் மாநிலத்தில் முதன்மை எரிசக்தி ஆலோசகர் ரங்கநாத், சூரிய சக்தியை திருப்பூர் தொழில் நிறுவனங்கள் பயன்படுத்துவது குறித்தும், நீராவி உற்பத்தி குறித்தும், அரசு மானியம் குறித்தும்," பசுமை முயற்சி மற்றும் பசுமை எரிசக்தி' என்ற தலைப்பில் பேசுகிறார்.பனியன் தொழிலில், தலைமுறை இடைவெளி பெரிய அளவில் வெற்றிடத்தை ஏற்படுத்தும் அபாயம் உள்ளது. அத்தகைய இடைவெளியை குடும்ப அங்கத்தினர் தாங்களாக முன்வந்து நிரப்ப வேண்டிய கட்டாயமாக மாறியுள்ளது.
தலைமுறை இடைவெளி பிரச்னை குறித்தும், அவற்றை சரிக்கட்டுவதற்கான வழி முறை குறித்தும், தொழில் முனைவோர் முன்னேற்ற பயிற்சி மைய செயலர் ஜெயராமன் பேசுகிறார்.அதனால், கருத்தரங்கில் குடும்ப பெண்களின் பங்களிப்பு மிகவும் அத்தியாவசியம் என்று கருதப்படுகிறது. "தலைமுறை இடைவெளியும், குடும்ப தொழில்கள் வெற்றியும்' என்ற முக்கிய தலைப்பில் கருத்துக்கள் பரிமாறப்பட உள்ளன. எனவே, தொழில் துறையினர் குடும்பத்துடன் பங்கேற்க வேண்டும், என, கல்லூரி தலைவர் ராஜா சண்முகம் தெரிவித்தார்.
மரக்கன்று வழங்க திட்டம்:"நிட்மா' தலைவர் ரத்தினசாமி கூறுகையில், "கடந்தாண்டு, மனதளவில் சோர்ந்திருந்த நேரத்தில், மறுமலர்ச்சி கருத்தரங்கு நடத்தப்பட்டது. அதனால், தொழில் மீது நம்பிக்கை பிறந்தது. "நிப்ட்-டீ' கல்லூரி இரண்டாவது முறையாக கருத்தரங்கு நடத்துவதால், உற்பத்தி பெருக்கம், செலவுகளை கட்டுப்படுத்துதல், தலைமுறை இடைவெளி நிரப்புதல் உள்ளிட்ட பயன்கள் தொழில்துறையினருக்கு கிடைக்கும்,'' என்றார்.தொழில் பாதுகாப்பு குழு ஒருங்கிணைப்பாளர் அண்ணாதுரை கூறுகையில், ""பல்வேறு பிரச்னைகள் காரணமாக, பனியன் தொழில் ஸ்தம்பித்திருந்தது.
கடந்த ஆறு மாதங்களாக மெதுவாக பயணித்துக் கொண்டிருக்கிறது. ஏற்றுமதியாளர்கள் உட்பட தொழில் துறையினர் மனரீதியாக சோர்ந்திருந்தனர். ""அந்நேரத்தில் நடத்தப்பட்ட கருத்தரங்கு மிகவும் ஊக்கமளிப்பதாகவும், உற்சாகம் ஏற்படுத்துவதாகவும் இருந்தது. இன்று நடக்கும் கருத்தரங்கிற்கு, தொழில் துறையினர் குடும்பத்துடன் பங்கேற்க வேண்டும். பங்கேற்கும் தொழில் துறையினருக்கு மரக்கன்று வழங்கப்படும்,'' என்றார்.

 

Advertisement
மேலும் திருப்பூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.