E-paper| Mobile Apps

iPad

iPad E-paper

iPhone

Android

Android Tablet

Windows

Windows 8

Blackberry

bbicon OS 10

Mobile Election

| Get Font | Site Map |  RSS Feed
Advertisement
"வங்கிகள் தரும் முதியோர் பென்ஷனை அங்கன்வாடியிலேயே வழங்க ஏற்பாடு'
Advertisement
 
 
Advertisement
 
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

29 மார்
2013
02:05

புதுச்சேரி:முதியோர் மற்றும் ஊனமுற்றோர் உதவித் தொகை பெறுவதில் உள்ள சிக்கல்களைத் தீர்ப்பது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் நடந்தது.
மத்திய அரசின் "உங்கள் பணம் உங்கள் கையில்' என்ற திட்டம், புதுச்சேரி மாநிலத்தில் அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தின் கீழ் முதியோர் உதவித்தொகை, வங்கிகள் மூலம் நேரடியாக பயனாளி களுக்கு வழங்கப்படுகிறது.
ஏற்கனவே, உதவித் தொகை, அங்கன்வாடி மையங்களின் மூலம் வழங் கப்பட்டு வந்தது. தற்போதைய புதிய முறையால் முதியோர்களும், ஊனமுற் றோர்களும் உதவித்தொகை பெறுவதில் பல்வேறு சிரமங்களைச் சந்திப்பதாக புகார்கள் எழுந்துள்ளன.
பயனாளிகளின் சிரமத்தைக் குறைக்கும் வகையில், உருளையன்பேட்டை தொகுதிக்கு உட்பட்ட அனைத்து அங்கன்வாடி ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டத்துக்கு, அரசு கொறடா ஏற்பாடு செய்திருந்தார்.
மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறையில் நடந்த இந்தக் கூட்டத்திற்கு, அரசு கொறடா நேரு எம்.எல்.ஏ., தலைமை தாங்கி பேசினார். உதவித்தொகை பெறும் பயனாளிகளின் சிரமத்தைக் குறைப்பது தொடர்பாக ஆலோசனை நடத்தப்பட்டது. மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை அதிகாரிகள், அங்கான்வாடி ஆசிரியர்கள், ஊழியர்கள் கலந்து கொண்டனர்.
நேரு கூறும்போது, "உருளையன்பேட்டை தொகுதி முழுவதும் பென்ஷன் பெறுகின்றவர்களில், நடக்க முடியாத மற்றும் படி ஏற முடியாத முதியோர்கள், மாற்றுத் திறனாளிகள், படிப்பறிவு இல்லாதவர்கள் குறித்த விபரங்களைச் சேகரிக்குமாறு அங்கன்வாடி ஊழியர்களிடம் கூறியுள்ளேன்.
வங்கிகளுக்குச் சென்று, பென்ஷன் பெற முடியாத இந்தப் பயனாளிகளுக்கு, வங்கிகளின் உதவியுடன், அங்கன்வாடி மையங்களிலேயே பென்ஷன் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். அதாவது, வங்கிகளின் ஊழியர்கள், வங்கி செலான்களுடன் அங்கன்வாடிக்கு வருவார்கள்.
அங்கன்வாடி ஊழியர்களின் உதவியுடன், மேற்கண்ட பயனாளிகளின் விபரங்கள் வங்கி செலானில் பூர்த்தி செய்யப்பட்டு, அங்கன்வாடியிலேயே பென்ஷன் வழங்கப்படும். இதுதொடர்பாக, வங்கி அதிகாரிகளுடன் பேசி வருகிறேன்' என்றார்.



 

மேலும் புதுச்சேரி செய்திகள் :


Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
( OR )Login with
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.