E-paper| Mobile Apps

iPad

iPad E-paper

iPhone

Android

Android Tablet

Windows

Windows 8

Blackberry

bbicon OS 10

Mobile Election

| Get Font | Site Map |  RSS Feed
Advertisement
மதுரையில் மழையின்றி கரும்பு சாகுபடி குறைந்ததுகேரளா செல்லும் "பச்சை வெல்லம்' விலை உயர்வு
Advertisement
 
 
Advertisement
 
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

04 ஏப்
2013
03:23

மதுரைநுமதுரையில் மழை இல்லாததால், கரும்பு சாகுபடி சொல்லும்படியாக இல்லை. கிணற்று பாசனம் மூலம் கரும்பு விவசாயம் ஓரளவு நடக்கிறது. இதனால், கேரளாவிற்கு செல்லும் "பச்சை வெல்லம்' விலை ஏறுமுகத்தில் உள்ளது.தனிச்சியம், செம்புக்குடிபட்டி, கொண்டையம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் பச்சை நிறம் கொண்ட பச்சை வெல்லம் தயாரிக்கும் சிறிய கொப்பரை ஆலைகள் உள்ளன. இங்கு, கேரளத்தினர் விரும்பி வாங்கும், பச்சை வெல்லம் தயாரிக்கின்றனர். கரும்பு கொடுத்தால் சாறு பிழிந்து, கூலிக்கு பச்சை வெல்லம் தயாரித்து கொடுக்கின்றனர். 350 லிட்டர் கரும்பு சாறை (ஒரு கொப்பரை) பச்சை வெல்லமாக தயாரிக்க ரூ.200 கூலி. இத்தொழிலில் காலை 6 முதல் மாலை 6 மணி வரை ஐந்து பேர் ஈடுபடுகின்றனர். நாள் ஒன்றுக்கு ஐந்து கொப்பரை அளவில் பச்சை வெல்லம் தயாரிக்கின்றனர். "மண்டை வெல்லம்' மவுசு: தமிழகத்தில் மண்டை வெல்லம், அச்சு வெல்லம் மஞ்சள் நிறத்தில் தயாரிக்கின்றனர். இதற்காக கரும்பு பால், கொப்பரையில் வேகும்போது சுண்ணாம்பு மற்றும் உணவு கலப்பட சட்டத்தின் கீழ் அனுமதிக்கப்பட்ட கலர் சாயம் சேர்க்கப்படுகிறது. இதனால், இவ்வெல்லம் மஞ்சள் நிறத்தில் பார்ப்பதற்கு அழகாகவும், சுவைப்பதற்கு அதிக இனிப்பாகவும் இருக்கும். பருத்திப்பால், கேழ்வரகு கழி, உளுந்துக்கழி, இனிப்பு பொங்கல், அச்சு வெல்லம் காப்பி தயாரிக்க மண்டை வெல்லம், அச்சு வெல்லம் பயன்படுத்தப்படுகிறது. கேரளாவில் "பச்சை வெல்லம்': தமிழக மக்கள் விரும்பும் மண்டை வெல்லம், அச்சு வெல்லத்தை கேரள மக்கள் அவ்வளவாக விரும்புவதில்லை. வெல்லத்தை பச்சை நிறத்தில் தயாரித்தால் மட்டுமே வாங்கி கொள்கின்றனர். பச்சை வெல்லம் தயாரிப்பில் மதுரை முன்மாதிரியாக திகழ்கிறது. இங்கிருந்து, நாள் ஒன்றுக்கு 1500 டன் எடையில், பச்சை வெல்லம் கேரளாவிற்கு அனுப்பப்படுகிறது. ஒட்டன்சத்திரம் வெல்ல மார்க்கெட் ஏஜன்ட்கள், கொப்பரை ஆலைகளுக்கு சென்று, பச்சை வெல்லத்தை கொள்முதல் செய்து குடோன்களில் பாதுகாக்கின்றனர். விலை ஏற்றத்தை பொறுத்து, லாரிகளில் கேரளாவிற்கு மொத்தமாக அனுப்புகின்றனர். சீனிக்கு பதிலாக பச்சை வெல்லம் கேரளாவில் அதிக விற்பனையாகிறது.பச்சை வெல்லம் விலை உயர்வு : செம்புக்குடிபட்டி கொப்பரை ஆலை உரிமையாளர் போஸ் கூறியதாவது: பத்து கிலோ (ஒரு மனு) பச்சை வெல்லம் இன்றைய விலை ரூ.350. பிப்ரவரியில் ரூ.270 என இருந்தது. மதுரையில் மழை பொய்த்ததால் கரும்பு விவசாயம் நலிவடைந்துள்ளது. ஆண்டு முழுவதும் பச்சை வெல்லம் தயாரித்து கொடுத்து வந்தோம். இரண்டு ஆண்டாக நிலைமை தலைகீழாகி விட்டது. கரும்பு கொண்டு வருபவர்கள் எண்ணிக்கை குறைந்து விட்டது. கரும்பு வரத்தை பொறுத்து வெல்லம் தயாரித்து கொடுக்கிறோம். இந்தாண்டை பொறுத்தமட்டில் பச்சை வெல்லம் விலை குறைய வாய்ப்பே இல்லை, என்றார்.

 



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
( OR )Login with
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.