E-paper| Mobile Apps

iPad

iPad E-paper

iPhone

Android

Android Tablet

Windows

Windows 8

Blackberry

bbicon OS 10

Mobile Election

| Get Font | Site Map |  RSS Feed
Advertisement
கிடைக்காத மின்சாரத்தை விரயமாக்கும் அவலம்
Advertisement
 
 
Advertisement
 
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

04 ஏப்
2013
03:49

கடலூர்;பலமணி நேரம் மின் வெட்டு நிலவி வரும் சூழலில், தெருவிளக்குகளை பகலில் எரியவிட்டு அரிதான மின்சாரத்தை விரயமாக்கப்பட்டு வருவது வேதனையளிக்கிறது.
தேவைக்கு ஏற்ப உற்பத்தி இல்லாத காரணத்தினால் தமிழகத்தில் கடந்த நான்கு ஆண்டுகளாக மின்வெட்டு தவிர்க்க முடியாத ஒன்றாகி விட்டது. நகரப் பகுதிகளில் 12 முதல் 14 மணி நேரமும், கிராமப்பகுதிகளில் 14 முதல் 18 மணி நேரம் மின் வெட்டு நிலவி வருகிறது.
நிலமையை சமாளிக்கும் பொருட்டு மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்துமாறு பல்வேறு வகைகளில் விளம்பரம் செய்யப்படுகிறது.
ஆனால், அரசு அலுவலகங்களில் தேவையில்லாத இடங்களில் மின் விளக்குகளை எரியவிட்டும், மின்விசிறிகளை சுழலவிட்டும் மின்சாரத்தை விரயமாக்கி வருகின்றனர். இவர்களுக்கு போட்டியாக உள்ளாட்சி பிரதிநிதிகள், தேவையில்லாத இடங்களில் எல்லாம் தெருவிளக்குகள் அமைக்கின்றனர்.
இந்த தெரு விளக்குகளை தினசரி மாலை நேரத்தில் எரிய வைக்கவும், மறுநாள் காலை 6:00 மணிக்கு நிறுத்துவதில்லை.
பல இடங்களில் தெருவிளக்குகளில் "சுவிட்ச் ஆப்' செய்யாததால் பகலிலும் தெருவிளக்குள் எரிந்து மின்சாரம் விரயமாக்கப்பட்டு வருகிறது.
இதனை கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டிய உள்ளாட்சி பிரதிநிதிகளும் இதனைக் கண்டு கொள்ளாததால், இன்றைய உலகில் அத்தியாவசிய தேவையாகி, அரிதாகிவிட்ட மின்சாரத்தை விரயமாக்கி வருவது வேதனையாக உள்ளது.
மின் சேமிப்பு என்பது, மின் உற்பத்திக்கு சமமானது. இதனை உணர்ந்து இனியேனும் தெரு விளக்குகளை இரவு நேரத்தில் மட்டும் எரிய வைக்கவும், காலை 6:00 மணிக்கு அனைத்து தெரு விளக்குகளையும் நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இதற்கு மாவட்ட நிர்வாகம், அனைத்து உள்ளாட்சி அமைப்புகளுக்கும் கடுமையான உத்தரவைப் பிறப்பிக்க வேண்டும்.
இதனை மீறி பகலில் தேவையின்றி தெருவிளக்குகள் எரிந்தால் சம்மந்தப்பட்ட உள்ளாட்சி நிர்வாக அலுவலர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

 

மேலும் கடலூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்
பொழுது போக்கு


Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (2)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
T.R.Rajendran - bangalore ,இந்தியா
06-ஏப்-201310:48:51 IST Report Abuse
T.R.Rajendran தெரு விளக்குகள் அனைத்தும் சூரிய ஒளிமின்தயாரிக்கும் கருவிகளோடு இணைத்து டைமர் எனப்படும் குறிப்பிட்ட நேரத்தில் விளக்குகள் எரியாவும் அணையவும் கட்டுப்படுத்தும் கருவியோடு இணைத்தால் மின்சாரத்தை சேமிக்க முடியும். தேவையான முதலீடுகளை அரசு பஞ்சாயத்து மற்றும் நகர நிர்வாகங்கள் பகிர்ந்து கொள்வதுடன் மத்திய மரபு சாரா எரிசக்தி துறையின் மானியத்தையும் பெறலாம். தமிழக அரசும் குறிப்பாக மின்துறை மற்றும் உள்ளாட்சி துறை அமைச்சர்கள் அதிகாரிகள் கவனித்தால் முடியும். முயல்வார்களா?
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
Cancel
Jayabalan Mavanna - Tiruvannamalai,இந்தியா
05-ஏப்-201308:43:38 IST Report Abuse
Jayabalan Mavanna கிட்டத்தட்ட எல்லா ஊர்களிலும் தெரு விளக்குகள் காலையில் அணைக்கப்படுவதே இல்லை. பின்னர் பகல் வெளிச்சத்தில் அவை எரிவது தெரிவதில்லை. இதைப்பற்றிய சிந்தனை அந்த பஞ்சாயத்து உறுப்பினர்களுக்கோ தலைவருக்கோ சிறிதும் இல்லை. ஒரு ஸ்விச்சை போடுவதும் நிறுத்துவதும் அவ்வூழிர்களால் முடிவில்லை என்றால் அதைக் கேட்க யாரும் முன்வருவதில்லை. மிகவும் கேவலமான நிலை.
Rate this:
0 members
0 members
1 members
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
( OR )Login with
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.