E-paper| Mobile Apps

iPad

iPad E-paper

iPhone

Android

Android Tablet

Windows

Windows 8

Blackberry

bbicon OS 10

Mobile Election

| Get Font | Site Map |  RSS Feed
Advertisement
கூட்டுறவு சங்கங்களுக்கு முதல் கட்டத் தேர்தல்: மாவட்டத்தில் 10 சங்கங்களுக்கு ஓட்டுப்பதிவு
Advertisement
 
 
Advertisement
 
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

06 ஏப்
2013
00:03

கடலூர்: கூட்டுறவு சங்கங்களில் நேற்று கடலூர் மாவட்டத்தில் 10 சங்கங்களில் முதல்கட்ட ஓட்டுப்பதிவு அமைதியான முறையில் நடந்தது.


கடலூர் மாவட்டத்தில் கூட்டுறவுத் துறை பதிவா ளரின் கட்டுப்பாட்டில் 268 கூட்டுறவு சங்கங்களும், செயல் பதிவாளர்களின் கட்டுப்பாட்டில் 553 கூட்டு றவு சங்கங்கள் என மொத்தம் 821 கூட்டுறவு சங்கங்கள் இயங்கி வருகின்றன. இந்த சங்கங்களில் 7,388 உறுப்பினர் பதவிக்கான தேர்தல் நான்கு கட்டமாக நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. அதில், முதல் கட்டமாக பதிவாளர் கட்டுப்பாட்டில் உள்ள 63 சங்கங்கள் மற்றும் செயல் பதிவாளர் கட்டுப்பாட்டில் உள்ள 112 சங்கங்கள் என மொத்தம் 175 சங்கங்களின் தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் கடந்த 29ம் தேதி நடந்தது. மறுநாள் மனுக்கள் வாபஸ் பெறப்பட்டதில், 164 சங்கங்களுக்கான இயக் குனர்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர். மீதமுள்ள 11 சங்கங்களுக்கு நேற்று தேர்தல் நடத்த அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்ட நிலை யில், சிதம்பரம், திருவக்குளம் கூட்டுறவு வீடு கட்டும் சங்கத்திற்கான தேர்தல் நேற்று காலை திடீரென ரத்து செய்யப்பட்டது. எஞ்சிய 10 சங்கங்களுக்கான தேர்தல் நடந்தது. காலை 8:00 மணிக்கு ஓட்டுப்பதிவு துவங்கியதுமே சங்க உறுப்பினர்கள் ஆர்வத்துடன் வரிசையில் நின்று ஓட்டு போட்டனர். 11:00 மணிக்குப் பிறகு தொய்வடைந்த ஓட்டுப்பதிவு, மாலை 3:00 மணிக்கு மீண்டும் சுறுசுறுப்பாக நடைபெற்றது. மாலை 5:00 மணிக்கு ஓட்டுப்பதிவு முடிந்ததும், ஓட்டு பெட்டிகள் சீல் வைத்து, அந்தந்த சங்க அலுவலகத்தில் போலீஸ் பாதுகாப்பில் வைக்கப்பட் டது. வரும் 9ம் தேதி ஓட்டுகள் எண்ணி முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது. இரண்டாம் கட்ட தேர்தலில் மாவட்டத்தில் 189 சங்கங்களுக்கு தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. அதில் 19 சங்கங்கள் இயங்காத நிலையில் உள் ளதால், எஞ்சிய 170 சங்கங்களுக்கு மட்டும் நேற்று முன்தினம் வேட்பு மனு தாக்கல் செய்யப்பட்டது. நேற்று மனுக்கள் வாபஸ் பெறப்பட்டதைத் தொடர்ந்து 156 சங்கங்களுக்கான இயக்குனர்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர். எஞ்சிய 14 சங்கங்களுக்கு பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.


 

மேலும் கடலூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.