E-paper| Mobile Apps

iPad

iPad E-paper

iPhone

Android

Android Tablet

Windows

Windows 8

Blackberry

bbicon OS 10

Mobile Election

| Get Font | Site Map |  RSS Feed
Advertisement
பிரெஞ்சு பாரம்பரிய கட்டட புகைப்பட கண்காட்சி துவக்கம்
Advertisement
 
 
Advertisement
 
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

06 ஏப்
2013
01:54

புதுச்சேரி: புதுச்சேரி மேசோன் கொலம்பானியில் பிரெஞ்சு பாரம்பரிய கட்டடங்கள் குறித்த புகைப்பட கண்காட்சி நேற்று துவங்கியது. பிரெஞ்சு ஆதிக்கத்தின் கீழ் இருந்த இந்தியாவில் சில பகுதிகளில் பிரெஞ்சு கலாசாரமும் கட்டடங்களும் இன்றளவும் பேணி பாதுகாக்கப்பட்டு வருகிறது. இதனையொட்டி, இரு நாடுகளுக்கு இடையே கலை, கலாசார பரிமாற்றம் நிகழ்ச்சிகள் கடந்த 1985 ஆண்டு முதல் நடந்து வருகிறது.


பிரெஞ்சு நாட்டில் "நமஸ்தே பிரான்ஸ்' என்ற பெயரிலும், இந்தியாவில் "போன்ஜோர் இந்தியா' என்ற பெயரிலும் இந்த கலை விழா கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டுக்கான போன்ஜோர் இந்தியா கலை விழா இந்தியாவில் 16 இடங்களில் கடந்த ஜனவரி மாதம் துவங்கி, மார்ச் மாதம் வரை நடந்தது. இதில் பிரெஞ்சு நாட்டினரின் கலை, இலக்கியங்கள், இசைகள் குறித்து இந்திய மக்களுக்கு அறிமுகம் செய்யப்பட்டது. இறுதி நிகழ்ச்சியாக பிரெஞ்சு பாரம்பரிய கட்டடங்களில் உள்ளரங்க அழகு குறித்த புகைப்பட கண்காட்சி டில்லி, அகமதாபாத், ஹைதராபாத், சென்னை ஆகிய இடங்களில் நடந்தது. புதுச்சேரியில் மேசோன் கொலம்பானியில் இந்த புகைப்பட கண்காட்சி துவக்க விழா நேற்று நடந்தது. புதுச்சேரிக்கான பிரெஞ்சு நாட்டு தூதர் பியர் புர்னியர் முன்னிலையில் அமைச்சர் ராஜவேலு, கண்காட்சியைத் துவக்கி வைத்து பார்வையிட்டார். இந்நிகழ்ச்சியில், அலை யான்ஸ் பிரான்சேஸ் நிறுவன தலைவர் ஆனந்தவடிவேலு, இயக்குனர் பப்ரிஸ் மோன்ழியா, நவயுகா கன்சல்டன்சி நிறுவன மேலாண் இயக்குனர் மோகன்தாஸ் உள்பட பலர் கலந்து கொண்டனர். வரும் 13 ம்தேதி வரை நடக்கும் இந்த புகைப்பட கண்காட்சியில் பிரபல புகைப்பட கலைஞர்கள் அனி மோ, ழிழி ஸ்காலா, ரிசி சிங்கால், செரானா சோப்ரா, இசபெல், ஜாம்பியர் ஆகியோர் இந்தியாவில் பல்வேறு பகுதிகளில் எடுத்த 55 அரிய பிரெஞ்சு பாரம்பரிய கட்டடங்கள் குறித்த புகைப்படங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது. இவற்றின் உள்ளரங்க சிறப்புகள் குறித்து ஒளிபட கண்காட்சி வாயிலாக விளக்கப்படுகிறது.


 



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
( OR )Login with
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.