E-paper| Mobile Apps

iPad

iPad E-paper

iPhone

Android

Android Tablet

Windows

Windows 8

Blackberry

bbicon OS 10

Mobile Election

| Get Font | Site Map |  RSS Feed
Advertisement
"செல்வம் சேமிக்க திட்டமிடல் மிக அவசியம்'
Advertisement
 
 
Advertisement
 
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

06 ஏப்
2013
22:59

சென்னை:""மழைநீர் போல பணத்தையும் சிறுக சிறுக சேமித்தால், எதிர்காலம் நிம்மதியாக கழியும். நம் தேவை பூர்த்தியாகிவிட்டால் ஓய்வு பெறலாம். செல்வம் சேமிக்க திட்டமிடல் அவசியம்,'' என, "தினமலர்' நாளிதழ் நடத்திய பொதுமக்களுக்கான நிதி ஆலோசனை குறித்த நிகழ்ச்சியில், நிதி ஆலோசர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
தமிழக மக்களின் நலனில் அக்கறை கொண்ட, "தினமலர்' நாளிதழ் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர், வேலை வாய்ப்பு தேடும் இளைஞர்கள், தொழில்முனைவோர், மூத்த குடிமகன்கள் உள்ளிட்டோருக்கு என, பல நிகழ்ச்சிகளை, சமூக சிந்தனையோடு நடத்தி வருகிறது.
அதன் ஒரு பகுதியாக, "தினமலர்' நாளிதழ், கரூர் வைஸ்யா வங்கியுடன் இணைந்து, நடுத்தர வர்க்கத்தினர், ஓய்வுக்கு பிறகு நிம்மதியான வாழ்க்கை வாழ்வது என்படி என்பது குறித்த சூநிதி ஆலோசனை 2013' என்ற நிகழ்ச்சியை, நேற்று, தி.நகர், வாணிமகாலில் நடத்தியது.
இந்நிகழ்ச்சியில், நிதித் துறையில் பழுத்த அனுபவம் பெற்ற நிதி ஆலோசகர்களான, சோம.வள்ளியப்பன், புகழேந்தி மற்றும் நாகப்பன் ஆகியோர் கூறியதாவது:
இன்றைய நடுத்தர வர்க்கத்தினருக்கு மருத்துவ காப்பீடு என்பது மிக அவசியம்.
எதிர்காலத் தேவை, அனைவருக்கும் உள்ளது. மழைக் காலத்தில் மழைநீரை சிறுக சிறுக சேமிப்பது எவ்வளவு அவசியமோ, அது போல, வருமானத்தையும் சிறுக சிறுக சேமிப்பது மிக அவசியம். வரும் காலத்தில், தண்ணீர் கூட மிகப் பெரிய விலைப் பொருளாக மாறும். அது கூட, வருமானத்திற்கு வழி செய்யும்.
உங்கள் வருமானத்தில் சேமிக்கும் தொகையை, சரியான இடத்தில் முதலீடு செய்யுங்கள். ஷேர் மார்க்கெட்டில் பணம் சம்பாதித்தவர்களை விட, தொலைத்தவர்கள்தான் அதிகம். அது ஒரு மாய மான். சிரமப்பட்டு சம்பாதிக்கும் பணத்தை, தெரியாத இடத்தில் முதலீடு செய்யாதீர். பழக்கப்பட்டதை செய்வது உத்தமம். பேராசைப்படுவதால், அழிவு தான் ஏற்படும். பணத்தை மதித்தால் உங்களிடம் சேரும், அதை அலட்சியப்படுத்தினால் விலகும்.
நம் ஒவ்வொருவர் வாழ்க்கையின் நோக்கம், உழைப்பு, குடும்பத்தை காப்பாற்றுவது, பிள்ளைகளை படிக்க வைப்பது, வீடு கட்டுவது, இறுதியாக, நம்மால் முடிந்த உதவிகளை, பிறருக்கு செய்வது தான். இதற்கு முக்கிய தேவை நிதி. இன்றை முதலீட்டால் நாளைய வளமான வாழ்வு கிடைக்கும்.
நம் தேவைகள் பூர்த்தியாகி விட்டால், நிதி தேடல் என்பதில் இருந்து நாம், ஓய்வு பெற்றுக் கொள்ளலாம். 30 வயதிலேயே தேவையான நிதி கிடைத்தால், அப்போது கூட ஓய்வு பெற்றுக் கொள்ளலாம்; அதில் தவறில்லை.
கடந்த, 1981ம் ஆண்டு, 100 ரூபாய் கொடுத்து, ஒரு பொருள் வாங்கியிருப்பீர்கள். அதே பொருளை, 2012ம் ஆண்டு, 785 ரூபாய் கொடுத்து வாங்க வேண்டிய நிலை ஏற்பட்டது.
வாழ்க்கை முறை மாற்றத்தால், இளைஞர்கள், வரவுக்கு மீறிய செலவு செய்கின்றனர். எதிர்காலத்தில் இது பாதிப்பை ஏற்படுத்தும். முதலீட்டில் குறைந்த அளவிலான ஆபத்து, மிதமான ஆபத்து, அதிக ஆபத்து என, மூன்று வகை உள்ளன. பலருக்கு, எது ஆபத்து என்றே தெரிவதில்லை.
உதாரணமாக, பிறந்த ஒரு வயது குழந்தையின் பெயரில், 10 ஆயிரம் ரூபாயை, கவனமாக முதலீடு செய்தால் அக்குழந்தைக்கு, 60 வயதாகும்போது, அந்த முதலீடு, 1.12 கோடி ரூபாய் ஆகும். நல்ல முதலீட்டிற்கு கடன் வாங்குவதில் தவறில்லை. செல்வம் சேர்க்க திட்டமிடல் என்பது மிக அவசியம்.
இவ்வாறு நிதி ஆலோசகர்கள் கூறினர்.

 

மேலும் சென்னை மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
சம்பவம்


Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
( OR )Login with
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.