E-paper| Mobile Apps

iPad

iPad E-paper

iPhone

Android

Android Tablet

Windows

Windows 8

Blackberry

bbicon OS 10

Mobile Election

| Get Font | Site Map |  RSS Feed
Advertisement
ஆமை வேகத்தில் நடக்கும் பணிகள்: உள்விளையாட்டு அரங்கத்தில் அவலம்
Advertisement
 
 
Advertisement
 
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

07 ஏப்
2013
02:26

புதுச்சேரி:ராஜிவ்காந்தி உள் விளையாட்டு அரங்கத்துக்கு, "ஏசி' வசதி செய்யும் பணி ஆமை வேகத்தில் நடந்து வருகிறது.உப்பளத்தில் உள்ள இந்திராகாந்தி விளையாட்டு அரங்கத்தில், ராஜிவ்காந்தி உள் விளையாட்டு அரங்கம் அமைந்துள்ளது. இந்த உள் விளையாட்டு அரங்கத்தை, தினமும் நூற்றுக்கணக்கான விளையாட்டு வீரர்கள் பயன்படுத்தி வந்தனர்.முறையான பராமரிப்பு இல்லாதது உள்ளிட்ட காரணங்களால், உள்விளையாட்டு அரங்கம் பழுதடைந்தது. மழை பெய்தால், அரங்கத்தின் உள்ளே தண்ணீர் ஒழுகி, வெள்ளமாகப் பெருக்கெடுக்கும் அவலம் அரங்கேறியது. கழிவறைகள், பயிற்சி அறைகள் பயன்படுத்த முடியாத அளவிற்கு சேதமடைந்தன.இருந்தபோதும், உள்விளையாட்டு அரங்கத்தைப் புதுப்பிக்க, விரைவான நடவடிக்கைகளை அரசு எடுக்கவில்லை. விளையாட்டு வீரர்கள் மற்றும் பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கைகளைத் தொடர்ந்து, உள்விளையாட்டு அரங்கத்தைப் புதுப்பிக்கும் பணிகள் இரண்டரை ஆண்டுகளுக்கு முன் துவங்கின.ஆனால், ஆமையை மிஞ்சும் வேகத்தில், பணிகள் மெதுவாக நடந்து வருகின்றன. ஒருவழியாக, உள்விளையாட்டு அரங்கத்தின் மேற்கூரையைப் புதுப்பிக்கும் பணிகள் முடிந்து, அரங்கத்தில் உள்ள ஜன்னல்கள் மாற்றப்பட்டு விட்டன. "ஏசி' வசதி செய்யும் பணிகள், கடந்தாண்டு துவங்கியது. ஆமை வேகத்தில் பணிகள் மெதுவாகவே நடந்து வருகிறது. இப்பணிகள் முடிந்து, உள்விளையாட்டு அரங்கம், பயன்பாட்டுக்கு வருவதற்கு, இன்னும் பல மாதங்களாகி விடும் என தெரிகிறது.

பணிகளை தரமாகவும், விரைவாகவும் செய்து முடித்து, உள்விளையாட்டு அரங்கத்தைப் பயன்பாட்டுக்கு திறந்து விடுவதற்கு, அதிகாரிகள் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.23 எம்.எல்.ஏ.,க்கள் கவனிப்பார்களாஒரே ஒரு தொகுதியாக திகழும் மாகி, ஏனாமில், பல கோடி ரூபாயை தண்ணீராக செலவழித்து, முழுவதும் "ஏசி' வசதியுடன், சர்வதேச தரத்தில் உள்விளையாட்டு அரங்கங்கள் கட்டப்பட்டுள்ளன.
மாநிலத்தின் தலைநகராகவும், 23 தொகுதிகளை உள்ளடக்கிய பெரிய பகுதியாகவும் திகழும் புதுச்சேரியில் அமைந்துள்ள உள்விளையாட்டு அரங்கம் படுமோசமான நிலையில் உள்ளது. உள்ளூர் விளையாட்டு போட்டிகளைக்கூட நடத்த முடியாத அளவிற்கு, தேவையான உள்கட்டமைப்பு வசதிகள் இல்லாமல் பரிதாபமாக, பாழடைந்த பங்களாபோல காட்சியளிக்கிறது. தலைநகரில் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்வர், சபாநாயகர், அமைச்சர்கள் உள் ளிட்ட 23 தொகுதிகளின் எம்.எல்.ஏ.,க்கள், இனியாவது கவனம் செலுத்துவார்களா...

 

மேலும் புதுச்சேரி செய்திகள் :


Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
( OR )Login with
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.