Advertisement
பச்சை நிறமாக மாறிய ரேஸ்கோர்ஸ் நீச்சல் குளம்விளையாட்டு அலுவலர் சிறைவைப்பு
Advertisement
 
 
Advertisement
 
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

08 ஏப்
2013
04:47

மதுரை:மதுரை ரேஸ்கோர்ஸ் நீச்சல் குளத்தில் பாசம் படர்ந்து, சுத்தமில்லாத நீர் நிரப்பப்பட்டதால், கட்டணம் செலுத்தி நீச்சல் பயிற்சி பெற வந்த மாணவர்களின் பெற்றோர், மாவட்ட விளையாட்டு அலுவலர் முருகனைசிறை வைத்தனர்.இக்குளத்தில், சந்தா செலுத்தி, மாணவர்கள், இளைஞர்கள் நீச்சல் பயிற்சி பெறுகின்றனர். வழக்கம்போல், நேற்று காலை நீச்சல் பயிற்சிக்கு சென்றவர்கள், நீச்சல் குளத்தின் நீர், பச்சை நிறத்தில் பாசம் படர்ந்திருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர். இதுகுறித்து, பயிற்சியாளர்கள், பெற்றோர், மாவட்ட விளையாட்டு அலுவலர் முருகனிடம் புகார் தெரிவிக்க வாக்குவாதம் ஏற்பட்டது. ஆத்திரமடைந்த பெற்றோர், முருகனை நீச்சல் குளம் அருகே உள்ள அறையில் வைத்து பூட்டினர். ரேஸ்கோர்ஸ் ரோட்டில் மறியலில் ஈடுபட்டனர். தல்லாகுளம் போலீசார் சமாதானம் செய்தனர்.பெற்றோர்கள் கூறியதாவது:ஆண்டு சந்தாவாக ரூ.3000 கட்டணம் செலுத்துகிறோம். மேலும், 6 மாதங்களாக குளத்தில் தண்ணீர் நிரப்ப, ரூ.500ம் செலுத்துகிறோம். சில நாட்களாக தண்ணீர் சுத்தமின்றி இருந்ததால், நீச்சல் பயிற்சி பெற்ற வீட்டுக்கு வரும் குழந்தைகளுக்கு உடல் அரிப்பு, கண் எரிச்சல் ஏற்படுகிறது. தண்ணீரில் புழுக்கள், பூச்சிகள் மிதக்கின்றன. தண்ணீரை சுத்தப்படுத்தும் "பேக்வாஷ்' மோட்டார்களும் பழுதாகியுள்ளன. விளையாட்டு அலுவலர் முருகனிடம் தெரிவித்தால், மரியாதை இல்லாமல் பேசுகிறார். காலை, மாலை 5 மணி முதல் 8 மணி வரை பயிற்சி பெற்ற நிலையில், இப்போது இரவு 7 மணிக்கு மேல் அனுமதிக்க மறுக்கிறார். காலையில் குழந்தைகளை அழைத்து வந்தால், நீச்சல்குளம் அருகே மது பாட்டில்கள், சாப்பிட்ட உணவு பொட்டலங்கள், காண்டம் போன்றவை கிடக்கின்றன. இதுகுறித்து, விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உதவி இயக்குனர் மற்றும் தல்லாகுளம் போலீசில் புகார் தெரிவித்துள்ளோம், என்றனர்.விளையாட்டு அலுவலர் முருகன் கூறியதாவது: மின் மோட்டார் பழுதாகியுள்ளது. வெளியில் இருந்துதான் தண்ணீர் கொண்டுவந்து நிரப்பப்படுகிறது. அது பச்சை கலரில் தான் இருக்கும். அதை தொடர்ந்து சுத்தம் செய்தால்தான் கலர் மாறும். இதை புரியாமல், பெற்றோர் தகராறு செய்கின்றனர். யாரையும் மரியாதை இல்லாமல் பேசவில்லை. அவர்கள்தான் பேசினர். மதுபாட்டில் போன்றவை இருப்பதாக கூறுவது, பொய். பிரச்னையை திசை திருப்புவதற்காக கூறுகின்றனர். நீச்சல்குளம் சுத்தமாக தான் பராமரிக்கப்படுகிறது. தரக்குறைவாக பேசியது; ஸ்டேடியத்திற்குள் அத்துமீறி நுழைந்தது குறித்து, கலெக்டர் அன்சுல்மிஸ்ரா, போலீசிடம் புகார் செய்துள்ளேன், என்றார்.

 

மேலும் மதுரை மாவட்ட  செய்திகள் :


Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
( OR )Login with
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.