Advertisement
கால்நடைத்துறை நிலம் ஆக்கிரமிப்பு; வீணாகும் அறுவை சிகிச்சை கூடம்
Advertisement
 
 
Advertisement
 
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

14 ஏப்
2013
22:11

திருப்பூர்:படியூரில் ரூ.24.6 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள, கால்நடைகளுக்கான அறுவை சிகிச்சை கூடம் திறக்கப்படாமல் உள்ளது. அப்பகுதியில் கால்நடைத் துறைக்கு சொந்தமான இடத்தை ஆக்கிரமித்து ஒருவர் வீடு கட்டியுள்ளதால், அறுவை சிகிச்சை கூடம் பயன்படுத்த முடியாத சூழல் உள்ளது.
படியூர், தம்புரெட்டிபாளையம், பாலசமுத்திரபுதூர், கணபதிபாளையம் ஆகிய ஊராட்சிகளுக்கு உட்பட்டு 30 கிராமங்கள் உள்ளன. 10 ஆண்டுகளுக்கு முன், சிவன்மலை, அலகுமலையை ஒட்டி காட்டுப்பகுதிகளாக இருந்ததால், கால்நடை வளர்ப்பு செழிப்பாக இருந்தது. 300க்கும் மேற்பட்ட மாடுகள் வளர்க்கப்பட்டு வந்தன. இதை யடுத்து, படியூரில் கால்நடை கிளை மருந்தகம் கட்டடப்பட்டது.
ஓட்டுக்கட்டடத்தில் இயங்கிய அம்மருந்தகத்தை விரிவுபடுத்த வேண்டும் என்றும், அறுவை சிகிச்சை கூடம் கட்ட வேண்டும் என்றும், விவசாயிகள், கால்நடை வளர்ப்பாளர்கள் கோரிக்கை விடுத்தனர். கடந்த 2011ல் 24.6 லட்சம் மதிப்பீட்டில் விரிவுபடுத்தப்பட்ட மருந்தகம், அறுவை சிகிச்சை கூடம் கட்டும் பணி துவங்கியது; கடந்த டிசம்பரில் பணி முடிந்தது. அறுவை சிகிச்சை கூடத்துக்கு முன்புறம் உள்ள கால்நடைத்துறை இடத்தை ஆக்கிர மித்து ஒருவர் வீடு கட்டியுள்ளார். இதனால், கட்டுமான பணி முடிந்தும் அறுவை சிகிச்சை கூடம் பயன்படுத்தப்படாமல் உள்ளது.
படியூர் பகுதி மக்கள் கூறுகையில், "கால்நடைத்துறைக்கு சொந்தமான இடம் 22.5 சென்ட். இதில், இரண்டு சென்ட் இடத்தை ஆக்கிரமித்துள்ளனர். அந்த வீடும் பல மாதங்களாக திறக்கப்படாமல் பூட்டிக் கிடக்கிறது. ஆக்கிரமிப்பை அகற்றி விட்டால், விரிவுபடுத்தப்பட்ட கால்நடை மருந்தகம் மற்றும் அறுவை சிகிச்சை கூடத்தை திறக்க ஏதுவாக இருக்கும். இவ்விஷயத்தில், மாவட்ட நிர்வாகம் தலையிட்டு
நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என்றனர்.
கால்நடைத்துறை அதிகாரிகளிடம் கேட்ட போது, "கால்நடைத்துறை இடத்தை ஆக்கிரமிப்பு செய்துள்ளவரிடம் பலமுறை எச்சரிக்கை விடுத்து விட்டோம்; ஆக்கிரமிப்பை அகற்றாமல் மெத்தனம் காட்டி வருகிறார். இதுதொடர்பாக, கலெக்டரிடம் தெரிவிக்கப்படும்,' என்றனர்.

 

மேலும் திருப்பூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
( OR )Login with
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.