E-paper| Mobile Apps

iPad

iPad E-paper

iPhone

Android

Android Tablet

Windows

Windows 8

Blackberry

bbicon OS 10

Mobile Election

| Get Font | Site Map |  RSS Feed
Advertisement
அதிகரிக்கிறது வறட்சி: உயர்கிறது காய்கறி விலை
Advertisement
 
 
Advertisement
 
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

14 ஏப்
2013
23:09

கோவை:வறட்சி, வரத்து குறைவு உள்ளிட்ட காரணங்களால், கோவையில் காய்கறிகளின் விலை அபரிமிதமாக அதிகரித்து விட்டது.
தியாகி குமரன் மார்க்கெட், மொத்த காய்கறி வியாபாரிகள் சங்கப் பொருளாளர் கார்த்திகேயன் கூறியதாவது:
கடும் வறட்சி காரணமாக காய்கறி வரத்து குறைந்து விட்டது. கர்நாடகாவில் இருந்து, கோவைக்கு தக்காளி வருகிறது. யுகாதி பண்டிகையையொட்டி, தக்காளி வரவில்லை. உள்ளூர் பகுதிகளில் இருந்து கொண்டு வரப்படும் தக்காளிதான், மார்க்கெட்டில் விற்பனையானது. தேவைக்கும் குறைவாக இருந்ததால், குறைந்திருந்த தக்காளி விலை, கிலோ 30 ரூபாய் வரை உயர்ந்துவிட்டது.
பீன்ஸ் விளைச்சல் இல்லாததால், குறைவான அளவே வருகிறது. இதனால் ஊட்டி பீன்ஸ் கொள்முதல் விலை அதிகரித்துவிட்டது. மார்க்கெட்டில் கிலோ 140 ரூபாயை எட்டிவிடுகிறது. சில்லரைக் கடைகளில் விலை இன்னும் அதிகம். ஊட்டி பட்டாணி, அதிக விலைக்கு விற்கப்படுகிறது. தமிழ்ப் புத்தாண்டை முன்னிட்டு, தேவைக்கேற்ப காய்கறிகளின் வரத்து இல்லாததால், விலை உயர்ந்து விட்டது.
இலங்கை பிரச்னைக்காக நாளை(இன்று) நடைபெறும் மொத்த காய்கறி வியாபாரிகள் கடையடைப்பில், தியாகி குமரன் மார்க்கெட் வியாபாரிகளும் பங்கேற்க உள்ளனர். இதனால், வரும் செவ்வாய்க்கிழமைக்கு மேல், விலை குறைய வாய்ப்புள்ளது.
இவ்வாறு, அவர் கூறினார்.
டி.கே.மொத்த மார்க்கெட்டில் காய்கறி விலை (கிலோ) விவரம்:
பீன்ஸ் 100-140 ரூபாய், தக்காளி 25-30, காரட் 40-50, காலிபிளவர் 20-30, பச்சை மிளகாய் 30-60, சின்ன வெங்காயம் 35-40, பெரிய வெங்காயம் 15-20, உருளைக்கிழங்கு 20-26, சேனை 16-20, கொத்தவரங்காய் 20-30, வெண்டைக்காய் 30-40, கத்தரிக்காய் 20-30, புடலை 20-28, முள்ளங்கி 16-20, பீட்ரூட் 20-36, முருங்கைக்காய் 16-25, பச்சைப்பட்டாணி 50-110, அவரைக்காய் 30-40 ரூபாய்.
இன்று கடையடைப்பு: மாவட்ட மொத்த அனைத்து காய்கனி வியாபாரிகள் சங்கத் தலைவர் பழனிசாமி, செயலாளர் அப்துல் அஜீஸ் கூறியிருப்பதாவது:
இலங்கையில் நடைபெற்ற இனப்படுகொலையை கண்டித்து, இன்று எம்.ஜி.ஆர். மார்க்கெட், அண்ணா மார்க்கெட், காந்திபுரம்,மேட்டுப்பாளையம், நாச்சிபாளையம், கிணத்துக்கடவு, பூலுவப்பட்டி, தொண்டாமுத்தூர், காளம்பாளையம் ஆகிய இடங்களில் இயங்கும் மொத்த காய்கனி வியாபாரிகள் இன்று, ஒரு நாள் கடையடைப்பு நடத்துகின்றனர்.
இவ்வாறு, கூறியுள்ளனர்.

 

மேலும் கோயம்புத்தூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.