E-paper| Mobile Apps

iPad

iPad E-paper

iPhone

Android

Android Tablet

Windows

Windows 8

Blackberry

bbicon OS 10

Mobile Election

| Get Font | Site Map |  RSS Feed
Advertisement
தமிழகம், புதுச்சேரியில் மீன்பிடி தடை இன்று துவக்கம்
Advertisement
 
 
Advertisement
 
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

14 ஏப்
2013
23:55

சென்னை:தமிழகம், புதுச்சேரி, ஆந்திரா உள்ளிட்ட கிழக்கு கடல் பகுதியில், ஆழ்கடலில் மீன்பிடிக்க, 45 நாட்கள் விதிக்கப்படும் தடை, இன்று துவங்குவதால், கடலுக்கு சென்ற விசைப்படகுகள் கரை திரும்பின.
வளம் அதிகரிக்கும்
மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் ஆய்வு நடத்தியதில், தடை செய்யப்பட்ட வலைகள், இயந்திரம் பொருத்திய படகுகள் பயன்பாடு காரணமாக, கடல் உயிரின வளம் குறைந்து வருவது கண்டறியப்பட்டது. இதைக் கருத்தில் கொண்டு, இன விருத்தி காலங்களைக் கண்டறிந்து, அந்த நாட்களில் மீன்பிடிக்க தடை விதித்தால், மீன் வளம் அதிகரிக்கும் என, தெரிய வந்தது.
இதையடுத்து, ஒவ்வொரு கடல் பகுதிக்கும், 45 நாட்கள் தடை விதிக்கப்பட்டு வருகிறது. இது, கடல் பகுதிக்கு ஏற்ப மாறுபடுகிறது. இதன்படி, தமிழகம், புதுச்சேரி, ஆந்திரா உள்ளிட்ட கிழக்கு கடல் பகுதியில் (வங்கக்கடல்), ஏப்., 15 முதல், மே, 29ம் தேதி வரை, 45 நாட்களுக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது.
மீன்வளத் துறை சார்பில், தமிழக்தில் உள்ள, 13
கடலோர மாவட்ட மீனவ கிராமங்களுக்கும்,
"நோட்டீஸ்' தரப்பட்டுள் ளது. இந்த தடை, இன்று முதல் அமலுக்கு வருகிறது. இதன் காரணமாக, மீன்பிடி துறைமுகங்களில் இருந்து, மீன்பிடிக்கச் சென்ற விசைப்படகுகள் அனைத்தும், அவசரம் அவசரமாக நேற்று கரைக்கு திரும்பின.
பராமரிப்பு தீவிரம்
சென்னை காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில், 1,300 விசைப்படகுகளும், தமிழகம் முழுவதும், 15 ஆயிரம் விசைப்படகுகளும், மீன்பிடி தொழிலுக்குச் செல்லாமல், ஒன்றரை மாதம் ஓய்வெடுக்கும். இந்த காலங்களில், விசைப்படகுகளில், பராமரிப்புப் பணிகளை மேற்கொள்ள, மீனவர்கள்
தயராகி வருகின்றனர்.
விசைப்படகுகள் மூலம், மீன்பிடிக்க தடை விதிக்கப்பட்டிருந்தாலும், சிறு பைபர் படகுகள், கட்டுமரங்கள் மூலம் மீன்பிடிக்க தடையேதும் இல்லை. ஆனால், மக்களின் மீன் தேவையை பூர்த்தி செய்யும் அளவில், மீன்கள் கிடைக்காது என்றாலும், 20 சதவீத மீன்கள் மட்டுமே கிடைக்கும் என்பதால், ஒரு வாரத்தில் அசைவ பிரியர்களை அலற வைக்கும் வகையில் விலை எகிறும்.
அரசு நிவாரணம்
தமிழகம் முழுவதும், 13 கடலோர மாவட்டங்களில், மீன்பிடி தொழில் நடந்து வருகிறது.
மீன்பிடி தடையால், தொழிலை நேரடியாக நம்பியுள்ள, 1.5 லட்சம் பேரும், இதைச் சார்ந்துள்ள, 2.5 லட்சம் பேருக்கும் வருவாய் இழப்பு ஏற்பட்டு, பாதிக்கப்படுவர்.
இதைக் கருத்தில் கொண்டு, தடைக்காலத்தில் மீனவர்களுக்கு, தலா, 2,000 ரூபாயை அரசு நிவாரணம் வழங்கி வருகிறது.

 

மேலும் சென்னை மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்
பொழுது போக்கு


Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
( OR )Login with
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.