Advertisement
விளைச்சலோ அமோகம்; விலைதான் இல்லை : சப்போட்டா விவசாயிகளின் புலம்பல் இது
Advertisement
 
 
Advertisement
 
 
எழுத்தின் அளவு:
Click the button to move down
Advertisement

பதிவு செய்த நாள்

15 ஏப்
2013
01:40

பண்ருட்டி : பண்ருட்டி பகுதியில் சப்போட்டா பழம் உற்பத்தி அதிகரித்தாலும் உரிய விலை கிடைக்காததால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர். பண்ருட்டி பகுதியில் ஒறையூர், மணம்தவிழ்ந்தபுத்தூர், பலாப்பட்டு, ஆனத்தூர், பண்டரக்கோட்டை பகுதிகளில் 50 ஏக்கர் பரப்பளவில் சப்போட்டா பழம் உற்பத்தியாகிறது. கடந்த 2011ம் ஆண்டு இறுதியில் வீசிய "தானே' புயலில் சப்போட்டா மரங்கள் முறிந்து சேதமடைந்ததால் போதிய அளவிற்கு விளைச்சல் இல்லை. ஆனால், இந்தாண்டு எதிர்பார்த்ததைவிட சப்போட்டா விளைச்சல் அதிகமாக உள்ளது. இப்பகுதியில் அறுவடை செய்யப்படும் சப்போட்டா பழங்களை விவசாயிகளே நேரடியாக விற்பனை செய்வதற்கு பண்ருட்டியில் சந்தை வசதி எதுவும் இல்லை. இதனால் நிலத்திற்கே நேரடியாக வரும் வியாபாரிகள், கிலோ 10 ரூபாயிற்கு சப்போட்டா பழங்களை கொள்முதல் செய்கின்றனர். ஆனால், இதே சப்போட்டா பழங்கள் வெளியில் கிலோ 30 ரூபாயிற்கு விற்பனை செய்யப்படுகிறது. கன்று நட்டு, உரம், தண்ணீர் வைத்து, மின்சாரம், இயற்கை சீற்றங்கள், ஆட்கள் பற்றாக்குறை இடையில் விவசாயிகளுக்கு உற்பத்திகேற்ற விலை கிடைக்காததால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர். பண்ருட்டி, அண்ணாகிராமம் வட்டாரத்தில் தோட்டக்கலை பயிர்களான மா, பலா, வாழை, தக்காளி,கத்திரி,வெண்டை, பாகற்காய், பீர்க்கன்காய், புடலை, கொய்யா, சப்போட்டா போன்ற காய்கறி மற்றும் பழங்கள் அதிகம் விளைவதால், அதனை விற்பனை செய்திட பண்ருட்டியில் சந்தை வசதி ஏற்படுத்தி தர வேண்டும் என இப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 

Advertisement
மேலும் கடலூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
சம்பவம்


Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.