Advertisement
பள்ளி, கல்லூரிகளில் நன்கொடை கிடையாது டாக்டர் ஆர்.லட்சுமிபதி பேச்சு
Advertisement
 
 
Advertisement
 
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

15 ஏப்
2013
03:13

மதுரை:""பள்ளி, கல்லூரிகளில் மாணவர்களிடம் நன்கொடையாக ஒரு காசு கூட வாங்குவதில்லை,'' என, மதுரை அருப்புக்கோட்டை ரோடு, சுப்பலட்சுமி லட்சுமிபதி அறிவியல் கல்லூரித் தலைவர் டாக்டர் ஆர்.லட்சுமிபதி பேசினார்.இக்கல்லூரியில், நாகர்கோவில் ஸ்காட் கிறிஸ்டியன் கல்லூரியின் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சியில், கல்லூரித் தலைவரும், "ஸ்காட்' மதுரை கிளைத் தலைவருமான டாக்டர் ஆர். லட்சுமிபதி பேசியதாவது: எனது தந்தை மற்றும் சகோதரர்கள், "ஸ்காட்' கல்லூரியில்தான் படித்தனர். ஐம்பது ஆண்டுகளுக்கு முன், நான் கற்றுக் கொண்ட விஷயங்கள்தான், என்னை பன்முகத்திறன் பெற்ற
வனாக மாற்றியது. அந்த லட்சியத்தோடுதான், எங்களது பள்ளி மற்றும் கல்லூரிகளில் யாரிடமும் நன்கொடை பெறுவதில்லை. "கேபிடேஷன்' கட்டணமும் வசூலிப்பதில்லை. விரைவில் புற்றுநோய் இன்ஸ்டிடியூட் ஆரம்பிக்க வேண்டும் என்பதே என் ஆசை, என்றார்.மதுரை அமெரிக்கன் கல்லூரி பேராசிரியர் ஆல்பர்ட் கிறிஸ்டோபர் தாஸ் வரவேற்றார். கிளை பொருளாளர் மோகன்தாஸ் ஆண்டறிக்கை வாசித்தார். "ஸ்காட்' கல்லூரி முதல்வர் ஜேஸர் ஜெபனேசர், மதுரை கிளை செயலாளர் ஜேம்ஸ் பங்கேற்றனர். சமீபத்தில் இறந்த, கிளை முன்னாள் செயலர் மகாத்மன்ராவுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. புதிய செயலராக ஆகானந்த பிள்ளை தேர்வு செய்யப்பட்டார்.

 

மேலும் மதுரை மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (1)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Chenduraan - kayalpattanam,இந்தியா
15-ஏப்-201308:24:54 IST Report Abuse
Chenduraan உங்கள் நற்பணி தொடர வாழ்த்துக்கள்
Rate this:
0 members
0 members
1 members
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
( OR )Login with
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.