Advertisement
வீணாகி வரும் ரூ.43 லட்சம் அழகர்கோவிலில் நந்தவனப் பூங்கா திறப்பு எப்போது?
Advertisement
 
 
Advertisement
 
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

21 ஏப்
2013
03:56

அழகர்கோவில்:மதுரை மாவட்டம் அழகர்கோவிலில் ரூ.43 லட்சம் செலவில் அமைக்கப்பட்ட பெரியாழ்வார் நந்தவனப்பூங்கா ஓராண்டாகியும் திறக்கப்படவில்லை.

அழகர்கோவிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள், சுற்றுலா பயணிகள் வருகின்றனர். அழகர்கோவில் அடிவாரத்தில் இருந்து மலை மீதுள்ள நூபுர கங்கை தீர்த்தத்திற்கு பக்தர்கள் செல்ல சாலை புதுப்பிக்கப்பட்டுள்ளது. மலைப்பாதையில் ஓய்வெடுக்க சலவை கற்கள் பதிக்கப்பட்டுள்ளன. அழகர்கோவிலின் பிரதான நுழைவு வாயில் புதிதாக அமைக்கப்பட்டுள்ளது.
மலைப்பாதை செல்லும் வழியில் 96 சென்ட் நிலத்தில் மாந்தோப்பு இருந்தது. அதை நந்தவனமாக மாற்ற நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. கோயில் நிர்வாகம் சார்பில் 50 சதவீதம் நிதி, சுற்றுலா மற்றும் பண்பாட்டுத்துறை, இந்து சமய அறநிலைய ஆட்சித்துறை சார்பில் 50 சதவீதம் நிதி, என ரூ.43 லட்சம் மதிப்பில் "பெரியாழ்வார் நந்தவனப்பூங்கா' அமைக்கப்பட்டது.
இப்பணி 2012 ஏப்., 30ல் முடிவடைந்தன. எனினும், ஓராண்டாகியும் பூங்கா திறக்கப்படவில்லை. வாட்ச்மேன் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார். தோட்டக்கலை ஊழியர்கள் நியமிக்கப்படவில்லை. இதனால், பூங்கா பாழாகி மக்கள் வரிப்பணம் வீணாகும் அபாயம் உள்ளது. பூங்காவை விரைவில் முறைப்படி திறந்து சிறுவர்கள் பயனடைய கோயில் நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

 

மேலும் மதுரை மாவட்ட  செய்திகள் :


Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
( OR )Login with
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.