Advertisement
உண்மை, அர்ப்பணிப்பு, கடும் உழைப்பு: ஐ.ஏ.எஸ்., ஆக இதுவே வாய்ப்பாடு'
Advertisement
 
 
Advertisement
 
 
எழுத்தின் அளவு:
Advertisement

மாற்றம் செய்த நாள்

21 ஏப்
2013
05:30
பதிவு செய்த நாள்
ஏப் 21,2013 05:07

கோவை:""உண்மை, அர்ப்பணிப்பு மற்றும் கடுமையான உழைப்பு ஆகிய மூன்றும் சிவில் சர்வீசஸ் தேர்வில் வெற்றி பெறும் வாய்ப்பாடு,'' என, பொருளாதார குற்றப்பிரிவு போலீஸ் டி.எஸ்.பி., பேசினார்.
குமரகுரு தொழில்நுட்ப கல்லூரியில் "சக்தி யுகம்' எனும் உற்சாகப் பேச்சு நிகழ்ச்சி நேற்று நடந்தது. கல்லூரி முதல்வர் ராமச்சந்திரன் முன்னிலை வகித்தார். பொருளாதார குற்றப்பிரிவு போலீஸ் டி.எஸ்.பி., பாலாஜி சரவணன் "சிவில் சர்வீசஸ்' எனும் தலைப்பில் பேசியதாவது:
சிவில் சர்வீசஸ் துறை சமுதாயத்துக்கு சேவை செய்யும் வாய்ப்பையும், ஓர் அங்கீகாரத்தையும் அளிக்கிறது. நிம்மதியான வாழ்க்கை என்பது மனதில் உருவாகும் திருப்தியை பொறுத்தது; அது சமுதாயத்துக்கு செய்யும் சேவையின் அடிப்படையில் அமையும். இத்துறையானது, பொறுப்புகளை அதிகரித்து உயரிய அந்தஸ்தை வழங்குகிறது.இளைஞர்கள் விடா முயற்சியுடன், கடுமையாக உழைத்தால் எளிதில் ஐ.ஏ.எஸ்., அதிகாரியாக உருவாகலாம். வாழ்வில் வெற்றி, இலக்கில் வெற்றி என இரண்டு வகை உள்ளன. வாழ்வில் வெற்றி என்பதைவிட இலக்கில் வெற்றி என்பதே சுவாரசியமானது. உண்மை, அர்ப்பணிப்பு, கடுமையான உழைப்பு இவையே சிவில் சர்வீசஸ் தேர்வுக்கான வாய்ப்பாடு.
நாள்தோறும் பத்திரிகைகளையும், 6-10 ம் வகுப்பு வரையுள்ள சி.பி.எஸ்.இ., பாட புத்தகங்களையும் படிப்பது நல்லது. கிராமப்புற மாணவர்கள், தொலைதூர கல்வி பயிலும் மாணவர்களும் இத்துறையில் புகுந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. விடா முயற்சி மற்றும் தன்னம்பிக்கையுடன் செயல்பட்டால் வெற்றி நிச்சயம்.இவ்வாறு, அவர் பேசினார்.
ஊக்குவிப்பு, தொழில்முனைவோர் உள்ளிட்ட தலைப்புகளில் கருத்துகள் தெரிவிக்கப்பட்டன. கல்லூரி இணை தாளாளர் சங்கர் வாணவராயர், பேராசிரியர்கள், மாணவர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.

 

மேலும் கோயம்புத்தூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
( OR )Login with
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.