ரயில்வே பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட பாலக்காடு-கோவை-ஈரோடு புறநகர் ரயில்!
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

23 ஏப்
2013
00:36

கோவை: கடந்த ஆண்டு ரயில்வே பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட கோவை வழியிலான பாலக்காடு-ஈரோடு புறநகர் பயணிகள் ரயில், இதுவரை இயக்கப்படவில்லை; ஆனால், அட்டவணையில் மட்டும் இதற்கான எண் மற்றும் நேரம் அச்சிடப்பட்டுள்ளது.


ஒவ்வொரு ஆண்டும், ரயில்வே பட்ஜெட்டில் அறிவிக்கப்படும் புதிய ரயில்கள், பல மாதங்களுக்குப் பின்பே இயக்கப்படுகின்றன; சில நேரங்களில், அடுத்த பட்ஜெட் வந்தாலும், முந்தைய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட ரயில்கள் இயக்கப்படாத கொடுமையும் நடக்கிறது. கடந்த 2009 பட்ஜெட்டில், லாலு பிரசாத் தாக்கல் செய்த பட்ஜெட்டில், கோவையிலிருந்து ஜோத்பூருக்கு புதிய ரயில் அறிவிக்கப்பட்டபோது, இங்குள்ள வட மாநில மக்கள் பெரிதும் மகிழ்ச்சி அடைந்தனர். ஆனால், அடுத்த ரயில்வே அமைச்சராக மம்தா வந்ததும், "அது இடைக்கால பட்ஜெட் அறிவிப்பு' என்று கூறி, அந்த ரயில் கைவிடப்பட்டது. அதேபோல, கடந்த 2012-2013 ரயில்வே பட்ஜெட்டில், பாலக்காட்டிலிருந்து கோவை ரயில்வே ஸ்டேஷன் வழியாக ஈரோடுக்கு புறநகர் பயணிகள் ரயில் (மெமு-மெயின் எலக்ட்ரிக் மல்டிபிள் யூனிட்) இயக்கப்படுமென்று அறிவிக்கப்பட்டது. இதனால், கோவையிலுள்ள கேரள மக்களும், இங்கிருந்து தொழில் மற்றும் பணி நிமித்தமாக பாலக்காடு மற்றும் ஈரோடு நகரங்களுக்குச் செல்லும் பல ஆயிரம் பேரும், பெரிதும் மகிழ்ச்சியடைந்தனர். ஆனால், அடுத்த ரயில்வே பட்ஜெட், கடந்த மாதம் தாக்கல் செய்யப்பட்டு விட்ட நிலையில், இன்று வரையிலும் அந்த "மெமு' ரயில் இயக்கப்படவில்லை. இதற்கு ரயில் பெட்டிகள் பற்றாக்குறையே காரணமென்று கூறப்படுகிறது. ஆனால், அதே பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட திருச்சூர்-எர்ணாகுளம் இடையிலான புறநகர் பயணிகள் ரயில் (மெமு), சில மாதங்களிலேயே இயக்கப்பட்டு விட்டது. கேரளாவுக்குள் இயக்கப்படும் புதிய ரயிலுக்கு உடனடியாக பெட்டிகள் கிடைக்கிறது; கேரளாவிலிருந்து தமிழகத்துக்கு இயக்கப்படும் ரயிலுக்கு மட்டும் பெட்டிகள் கிடைக்காமல் போவதன் மர்மம், புரியாத புதிராகவுள்ளது. இதில், மிகப்பெரிய கொடுமை என்னவென்றால், இந்த ரயிலுக்கு எண்கள் அறிவிக்கப்பட்டு, தற்போது நடைமுறையில் உள்ள தெற்கு ரயில்வே கால அட்டவணையில் நேரமும் அச்சிடப்பட்டுள்ளது என்பதுதான். இந்த ரயிலுக்கு 66608/09 என்று எண் தரப்பட்டுள்ளதுடன், அட்டவணையில் 36 மற்றும் 37வது பிரிவுகளில் நேரமும் குறிப்பிடப்பட்டுள்ளது. ஓடாத ரயிலுக்கு எண்ணும், நேரமும் கொடுத்திருப்பதன் மூலமாக, இந்த ரயில் இயக்கப்படுகிறது என்ற மாயத்தோற்றத்தை ஏற்படுத்த மறைமுக முயற்சி நடக்கிறதோ என்ற சந்தேகமும் எழுகிறது. ஏற்கனவே, கோவை ரயில்வே ஸ்டேஷனைப் புறக்கணித்து போத்தனூர் வழியாக கேரளாவுக்குச் செல்லும் 13 ரயில்களை, கோவை நகருக்குள் திருப்புவதற்காக பல வித போராட்டங்களையும், முயற்சிகளையும் மேற்கொண்ட பின்னும் இன்று வரை 4 ரயில்கள் மட்டுமே திருப்பப்பட்டுள்ளன; மீதமுள்ள ரயில்களில், யஷ்வந்த்பூர்- கண்ணனூர் உள்ளிட்ட மேலும் சில ரயில்களையும் திருப்ப வேண்டுமென்ற கோரிக்கை, ஆண்டுக்கணக்கில் கிடப்பில் போடப்பட்டுள்ளது. இந்நிலையில், அறிவித்த ரயிலையும் இயக்காமல் இருப்பது, கோவை மீதான தெற்கு ரயில்வேயின் புறக்கணிப்பை ஊர்ஜிதம் செய்வதாகவுள்ளது. ரயில்களில் தொடர்ந்து பயணம் செய்வோருக்கு, 3 மாதங்களுக்கு ஒரு முறை தரப்படும் சீசன் டிக்கெட்டை, தற்போது ஓராண்டு மற்றும் அரையாண்டு கால சீசன் டிக்கெட் ஆக ரயில்வே வழங்கி வருகிறது. இதனால், ஆண்டுக்கு 4 முறை, நீண்ட வரிசையில் நின்று ரயில் டிக்கெட்டைப் புதுப்பிக்க வேண்டிய அவசியமில்லை. இந்த ரயிலை இயக்கினால், கோவையிலிருந்து திருப்பூர் மற்றும் ஈரோடு செல்லும் பல ஆயிரம் பேர், சீசன் டிக்கெட் வாங்கும் வாய்ப்புள்ளது. எனவே, இந்த ரயிலை விரைவாக இயக்க வேண்டுமென்பதே கோவையிலுள்ள பல ஆயிரம் மக்களின் எதிர்பார்ப்பு.


இன்று வருகிறார் பொது மேலாளர்: தெற்கு ரயில்வே பொது மேலாளராக ராகேஷ் சர்மா பொறுப்பேற்ற பின், முதல் முறையாக இன்று கோவைக்கு வருகை தருகிறார். கோவை ரயில்வே ஸ்டேஷனில், இன்று மாலை 5.00 மணிக்கு வரும் அவர், மல்டி லெவல் கார் பார்க்கிங், இரண்டாவது சுரங்க நடைபாதை, தாமஸ் கிளப் வழியிலான மற்றொரு நுழைவாயில் ஆகியவை அமைப்பது தொடர்பாக ஆய்வு செய்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. அவரிடம் கோவையின் ரயில்வே தேவைகளை நேரில் விளக்குவதற்கு ரயில்வே போராட்டக்குழு மற்றும் தொழில் அமைப்புகள் தயாராகவுள்ளன.


 

Advertisement
மேலும் கோயம்புத்தூர் மாவட்ட  செய்திகள் :


Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.