கழிப்பறையை கூட கண்காணிக்கும் திறமையில்லை திருவிழாவிற்கு வருவோர் "உவ்வே'
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

23 ஏப்
2013
02:35

மதுரை:மதுரை மாட்டுத்தாவணி பஸ் ஸ்டாண்ட் கழிப்பறைகள் மூடப்பட்ட நிலையில், திறந்தவெளியில் சிறுநீர், மலம் கழித்து வருவதால், பயணிகள் நிற்க இடமின்றி தவிக்கின்றனர்.
சுத்தம், சுகாதாரம் உள்ளிட்டவற்றில் சிறந்து விளங்கியதால், மாட்டுத்தாவணி பஸ் ஸ்டாண்டிற்கு ஐ.எஸ்.ஓ., சான்றிதழ் வழங்கப்பட்டது. இன்று, அதற்கான தகுதியை அது இழந்துவிட்டது; இல்லை, "அதிகாரிகளால் இழக்க வைக்கப்பட்டுள்ளது'.
"பஸ் ஸ்டாண்ட் உள்ளே உள்ள 16 கட்டண கழிப்பறைகளை, இலவசமாக மாற்றுவதாக,' சில மாதங்களுக்கு முன் மாநகராட்சி கமிஷனர் நந்தகோபால் அறிவித்தார். புதிய ஏல இனத்தில், அவை தவிர பிற கழிப்பறைகள் ஏலம் விடப்பட்டன. ஏப்., முதல் பஸ் ஸ்டாண்ட் கழிப்பறைகள், மாநகராட்சி பராமரிப்பில் வந்தது.
ஆத்திரமடைந்த ஒப்பந்தகாரர்கள், மார்ச் இறுதியில், கழிப்பறைகளை உடைத்து துவம்சம் செய்தனர். பைப்புகள் அடித்து நொறுக்கப்பட்டன. இதனால், அனைத்து கழிப்பறைகளையும் பயன்படுத்த முடியாத சூழல் உருவானது. 20 நாட்களை கடந்த நிலையில், கழிப்பறைகளை செயல்பாட்டிற்கு கொண்டு வர மாநகராட்சி எந்த முயற்சியும் எடுக்கவில்லை.
சென்னை கோயம்பேடு பஸ் ஸ்டாண்டிற்கு அடுத்தபடியாக, மாட்டுத்தாவணி பஸ் ஸ்டாண்டில் தான் ஏராளமான பயணிகள் வருகின்றனர். வெளியூரிலிருந்து வருவோர், கழிப்பறை இல்லாமல் திறந்தவெளியை பயன்படுத்தி வருகின்றனர். ஓரிரு நாள் என்றால் பரவாயில்லை, 20 நாட்களுக்கு மேலாக இந்நிலை தொடர்வதால், பஸ் ஸ்டாண்டில் நுழைந்ததுமே துர்நாற்றம்.
எரிச்சலடைந்த டிரைவர்கள் மற்றும் பயணிகள், நேற்று பஸ் ஸ்டாண்டில் நடந்து சென்ற உதவிப்பொறியாளர் ஆறுமுகத்திடம் வாக்குவாதம் செய்தனர். சித்திரை திருவிழாவை காண ஏராளமானோர் மதுரைக்கு படையெடுத்து வரும் நிலையில், பஸ் ஸ்டாண்டில் இறங்கியதும், "உவ்வே...'யிலிருந்து யாரும் தப்பமுடியாது.
"ஐ.ஏ.எஸ்., அதிகாரி, நகர் பொறியாளர், உதவி பொறியாளர், கண்காணிப்பாளர்,' என, அதிகாரிகள் பட்டியலில் குறைச்சல் இல்லை; ஆனால், கழிப்பறையை கூட கண்காணிக்கும் திறமையில்லை என்றால், இத்தனை பேர் இருந்தும் என்ன பிரயோஜனம் கழிப்பறையை பயன்பாட்டிற்கு கொண்டு வரமுடியாத இவர்களால், தொலைநோக்கு திட்டங்களை எப்படி செயல்படுத்த முடியும்.
ஒரு கழிப்பறை ஒரு போட்டோ
இருபது நாட்களாக தொடரும் கழிப்பறை பிரச்னை குறித்து, தனிப்பிரிவுக்கு ஏராளமானோர் புகார் செய்து, முதல்வர் ஜெயலலிதாவின் கவனத்திற்கு சென்றது. அவர் உத்தரவுப்படி, நகராட்சிகளின் நிர்வாக இயக்குனர், நகர் பொறியாளர்(பொறுப்பு) மதுரத்தை நேற்று தொடர்பு கொண்டு, "உடனே கழிப்பறையை சரிசெய்ய' உத்தரவிட்டார். ஒரு கழிப்பறையில் பெண் ஒருவர் சுத்தம் செய்வது போல், போட்டோவை மட்டும் எடுத்துக் கொண்டு, பணியை நிறைவு செய்தது போல், மேலிடத்திற்கு தகவல் அனுப்பிய மாநகராட்சி அதிகாரிகள், பூட்டிய கழிப்பறைகளை திறக்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

 

Advertisement
மேலும் மதுரை மாவட்ட  செய்திகள் :


Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (2)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
SARGUNAM - SINGAPORE  ( Posted via: Dinamalar Android App )
24-ஏப்-201304:55:05 IST Report Abuse
SARGUNAM அடித்து உடைத்தவரகள் வேறு யாராக இருக்க முடியும் எல்லாம் ஆளும்கட்சி புண்ணியவான்கள் தான் இருக்கும் எல்லா காண்ட்ராக்டரையும் பிடித்து வந்து லாக்கபில் தள்ளி லாடம் கட்டி அவர்களிடம் சொத்து பறிமுதல் செய்து அந்த பணத்தி்ல் கழிப்பறை கட்டி தர வேண்டும் செய்ய முடியுமா
Rate this:
Share this comment
Cancel
தமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
23-ஏப்-201315:10:36 IST Report Abuse
தமிழ்வேல் // ஆத்திரமடைந்த ஒப்பந்தகாரர்கள், மார்ச் இறுதியில், கழிப்பறைகளை உடைத்து துவம்சம் செய்தனர். பைப்புகள் அடித்து நொறுக்கப்பட்டன. // அவர்களெல்லாம் இன்னும் வெளியில்தான் இருக்கின்றனரா ?
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.