ஆலங்குடி தாலுகா குளம், வாய்க்கால்களை...சீரமைக்கணும்! விவசாயம், குடிநீருக்காக மக்கள் கோரிக்கை
Advertisement
 
 
Advertisement
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

12 ஆக
2013
00:59

ஆலங்குடி: "விவசாயம் மற்றும் குடிநீர் தேவைக்காக, ஆலங்குடி மற்றும் வடகாடு பகுதியிலிலுள்ள குளம், வாய்க்கால்களை சீரமைக்கவேண்டும்' என, அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி தாலுகா முற்றிலும் விவசாயம் நிறைந்த பகுதியாகும். இப்பகுதியில் உள்ள நூற்றுக்கணக்கான குளங்களும், கால்வாய்களும் சீரமைக்கப்பட்டு வந்தபோது, குடிநீருக்கும், விவசாயத்துக்கும் ஆண்டு முழுவதும், குளத்து நீரையும், 60 அடி ஆழ கிணற்று நீரையுமே மக்கள் பயன்படுத்தினர்.
அதன்பின் குளம், கால்வாய்கள் அனைத்தும், அரசு ஆவணங்களில் அதே பெயரிலும், அதற்கான இடத்தை வேறு வழியிலும் மக்கள் பயன்படுத்த துவங்கினர். இதன் தாக்கமாக, நிலத்தடி நீர் மட்டும், 60 அடியை விட்டு கீழே சென்றதால், மாற்று வழியாக பல லட்சம் ரூபாய் செலவில், ஆழ்குழாய் கிணற்றில் நீர்மூழ்கி மோட்டார் அமைக்கும் பணியில் முனைப்பு காட்டினர்.
நிலத்தடி நீரை வெளிக்கொணர நாளுக்குநாள் ஆழ்குழாய் கிணறுகளின் எண்ணிக்கையும் அதிகரித்தது. 1990ல் வடகாடு பகுதியில் நிலத்தடி நீர், 150 அடியில் கிடைத்தது. ஆனால் தற்போது, 350 அடிக்குச் சென்றுவிட்டது. இதில், 300 அடிக்கும் குறைவாக துளையிடப்பட்ட ஆழ்குழாய் கிணறுகள், தற்போது பயன்பாட்டில் இல்லை.
இதில் அரசு குடிநீர் திட்டத்துக்காக அமைக்கப்பட்ட கிணறும் அடங்கும். அதே மாவட்டத்தில் வெண்ணாவல்குடி, மறமடக்கி, பரவாக்கோட்டை சுற்றுவட்டார பகுதிகளில், 1990ல், 300 அடி ஆழத்தில் கிடைத்த தண்ணீர், தற்போது, 700 அடியைக் தாண்டிவிட்டது. தண்ணீர் கிடைக்கும் தொலைவில் பாறை நிறைந்திருப்பதால், ஆழ்குழாய் கிணறு அமைக்க வசதியில்லாத நிலை ஏற்பட்டு, தற்போது குடிநீருக்கே திண்டாட்டம் ஏற்பட்டுள்ளது. இது மிகப்பெரிய ஆபத்தான விஷயமாகும்.
அதிலும் தொடக்கத்தில் வடகாடு பகுதியானது, விவசாயம் நிறைந்த பகுதி என்பதால், நாளொன்றுக்கு, 20 மணிநேரம் மும்முனை மின்சாரம் வழங்கிய தமிழக அரசின் உத்தரவு, தற்போது, மூன்று மணிநேரமாக சுருங்கியுள்ளது.
அவ்வாறு, மூன்று மணிநேரத்தில் இயக்கிய போதும் நிலத்தடி நீர் பற்றாக்குறை ஏற்பட்டதால், பயன்பாடற்ற ஆழ்குழாய் கிணறுகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதனால் அதற்குள் இயங்கிய நீர்மூழ்கி மோட்டார்கள் வெளியேற்றப்பட்டு வருகிறது.
தண்ணீர் தேவைக்காக நிலத்தடியில் இருந்த தண்ணீரை உறிஞ்சி எடுப்பதில் மக்களிடையே இருந்த ஆர்வம், மீண்டும் தண்ணீரை நிலத்தில் செறிவூட்டுவதில் இல்லை என்பதன் விளைவு, இதன் பின்னணியாக உள்ளது. இதன் தாக்கம், 30 முதல், 60 அடியில் கிடைத்த பகுதியின் நீர்மட்டம் தற்போது, 10 மடங்காக அதிகரித்துள்ளது.
ஆகையால் வருவாய்த்துறையின் ஆவணங்களில் இருக்கும் குளங்களையும், கால்வாய்களையும் உடனடியாக மீட்டு, சீரமைக்காவிட்டால், தண்ணீர் பஞ்சம் தலைதூக்குமென்பதே இப்பகுதியினரின் கவலையாகும்.
இத்தகைய நிலை ஆலங்குடி தாலுகா பகுதிக்கு மட்டும் ஏற்பட்டுள்ளதாக கருதாமல், இதை ஒரு உதாரணமாக எடுத்துக்கொண்டு, புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள குளம், கால்வாய்களை தொடர்ச்சியாக சீரமைத்து, இப்பகுதிக்கு கனமழை பெய்யும் வடகிழக்கு பருவமழை நீரை, வீணடிக்காமல் சேமித்து வைக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என்பதே மக்களின் கோரிக்கையாகும்.

 

Advertisement


Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (1)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Karuppu Samy - MRT,சிங்கப்பூர்
12-ஆக-201322:03:11 IST Report Abuse
Karuppu Samy ரொம்ப நாளுக்கு அப்புறம் விவசாயத்தின் அதிக தேவையை விரிவாக வெளியிட்டமைக்கு நன்றி.இப்பகுதி முற்றிலும் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு நீர்வரத்து குறைந்ததால் ஏற்பட்ட விபரீதமே இந்த நீர்மட்ட மாறுபாட்டிற்கு காரணம்.இதில் ஆலங்குடி வருவாய் துறை சீரிய கவனம் செலுத்தவேண்டும்.ஆள்குளார் கிணறுகள் பன்மநன்கு அதிகரித்துள்ளது இந்த வடகாடு ,மாங்காடு பகுதியில்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.