குற்­றங்­களை தடுக்க வீடு வீடாக துண்டு பிர­சுரம்...வினி­யோகம் கூட்டம் நடத்­தியும் பய­னில்­லா­ததால் புது முயற்சி
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

11 செப்
2013
00:55

தாம்­பரம்:புற­ந­கரில் குற்ற சம்­ப­வங்­களை தடுக்க, விழிப்­பு­ணர்வு கூட்­டங்களை நடத்­தியும், பய­னில்­லாத கார­ணத்தால், துண்டு பிர­சு­ரங்­களை அச்­ச­டித்து, வீடு வீடாக வினியோகம் செய்யும் முயற்­சியில் போலீசார் ஈடு­பட்­டுள்­ளனர்.
புற­நகர் பகு­தி­களில், சமீ­ப­கா­ல­மாக கொள்ளை, திருட்டு, செயின் பறிப்பு, வழிப்­பறி உள்­ளிட்ட சம்­ப­வங்கள் அதி­கரித்துள்­ளன.
போலீ­சாரின் கண்­கா­ணிப்­பையும் மீறி, இந்த சம்­ப­வங்கள் நடந்து வரு­கின்­றன. இதை­ய­டுத்து, புற­நகர் பகு­தி­வா­சிகள் மத்­தியில், தொடர்ந்து விழிப்­பு­ணர்வை ஏற்­ப­டுத்தி, அதன்­மூலம் குற்ற செயல்­களை கட்­டுப்­ப­டுத்த போலீசார் முயன்று வரு­கின்­றனர்.
பொது நலச்­சங்கம் மற்றும் குடி­யி­ருப்போர் நலச் சங்கங்களை அழைத்து, கூட்­டங்கள் நடத்­தப்­பட்­டாலும், அதில், பெரும்­பா­லானோர் கலந்து கொள்­வ­தில்லை என்­பதால், அது
பய­னில்­லாமல் போய்­வி­டு­கி­றது.
அதனால், புது முயற்­சி­யாக, ‘பொது மக்­களே சிந்­திப்பீர், செயல்­ப­டுவீர்’ என்ற தலைப்பில், உதவி கமி­ஷனர், இன்ஸ்­பெக்டர், காவல் நிலையம் ஆகி­யோரின் அலை­பேசி எண்
­க­ளுடன் துண்‌டு பிர­சு­ரங்­களை அச்­ச­டித்து,
வீடு வீடாக வினி­யோ­கித்து வரு­கின்­றனர்.
அதில், குறிப்­பி­டப்­பட்டு உள்­ள­தா­வது;
= காஸ், அலை­பேசி, குளிர் சாதன பெட்­டி­களை பழுது பார்க்க வருவோர், வங்கி கடன் தொடர்­பாக வருவோர், மெழுகு, வீட்டு உப­யோக பொருட்­களை விற்­பனை செய்ய வரு­வோரை வீட்­டினுள் அனு­ம­திக்க கூடாது.
= வங்கி, ஏ.டி.எம்., பத்­தி­ரப் பதிவு அலு­வ­லகம், நகை, அடகு மற்றும் ‘டாஸ்மாக்’ கடை­களில் உங்­க­ளது கவ­னத்தை திசை திருப்பி, திருட முயலும் நபர்­க­ளிடம்
கவ­ன­மாக இருக்க வேண்டும்.
= தங்க நகை­களை அணிந்து செல்லும் பெண்கள், செயின் பறிப்பு திரு­டர்கள், நகை­களை பறித்து செல்­லாத அள­விற்கு பாது­காப்­புடன் செல்ல வேண்டும்.
= வீடு வாட­கைக்கு விடுவோர், குடி­புக வரு­வோரின் முழு விவ­ரங்­களை தெரிந்து கொண்ட பின்­னரே வாடகைக்‌கு அமர்த்த வேண்டும்.
= அடுக்­கு­மாடி குடி­யி­ருப்­பு­களில் அறி­மு­க­மான காவலர் களை மட்­டுமே நிய­மிக்க வேண்டும்.
= வெளியில் செல்லும் முன், பணம், நகை திருடு போகாத வகையில் பாது­காப்பு ஏற்­பாடு செய்ய வேண்டும்.
இவ்­வாறு அந்த பிர­சு­ரத்தில் தெரி­விக்­கப்­பட்­டு உள்­ளது.
இது­கு­றித்து, போலீஸ் அதி­காரி ஒருவர்
கூறி­ய­தா­வது:
அவ்­வப்­போது, பகு­தி­வா­சி­களை ஒன்று திரட்டி, விழிப்­பு­ணர்வு கூட்­டங்­களை நடத்தி வரு­கிறோம். அதில், பெரும்­பா­லானோர் கலந்து கொள்­வ­தில்லை.
கலந்­து­கொள்­வோரும், நாங்கள் கூறு­வதை கடைப் பிடிப்­ப­தில்லை. அதனால், அடுத்த கட்ட முயற்­சி­யாக துண்டு பிர­சு­ரங்­களை
அச்­ச­டித்து வீடு வீடாக வினி­யோ­கித்து
வரு­கின்றோம்.
செய்தித் தாள்­களில் வைத்து அனுப்­பும்­போது, 90 சத­வீத மக்­களை கவர முடியும். அதில், கூறப்­பட்­டுள்ள குறிப்­பு­களை கடைப்­பி­டித்து, எங்­க­ளுக்கு ஒத்­து­ழைப்பு கொடுத்தால் குற்ற சம்­ப­வங்­களை கட்­டுப்­ப­டுத்த முடியும்.
இவ்­வாறு அவர் கூறினார்.

 

Advertisement
மேலும் சென்னை மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.