E-paper| Mobile Apps

iPad

iPad E-paper

iPhone

Android

Android Tablet

Windows

Windows 8

Blackberry

bbicon OS 10

Mobile Election

| Get Font | Site Map |  RSS Feed
Advertisement
ஆசிரியர்களால் மட்டுமே மாணவர்களை அறிவுப்பூர்வமாக மாற்ற முடியும்: எம்.எல்.ஏ.,
Advertisement
 
 
Advertisement
 
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

18 செப்
2013
07:09

ஆலங்குடி: ""மாணவர்களை அறிவுப்பூர்வமாக மாற்ற ஆசிரியர்களால் மட்டுமே முடியும்,'' என ஆலங்குடி எம்.எல்.ஏ., கு.ப.கிருஷ்ணன் பேசினார்.
புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகே நெடுவாசல் வடக்கு யூனியன் தொடக்கப்பள்ளியில், புதிய பள்ளி கட்டிடத்தில் மாணவர்கள் புகுவிழா மற்றும் மரக்கன்று நடும்விழா நடந்தது. விழாவுக்கு ஆலங்குடி தொகுதி எம்.எல்.ஏ., கு.ப.கிருஷ்ணன் தலைமை வகித்தார். உதவி தொடக்கக்கல்வி அலுவலர் மாரிக்கண்ணு, "பெல்' துணை பொது மேலாளர் கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
"பெல்' நிறுவனத்தின் இயக்குனர் கோபிநாத் சிறப்புரையாற்றினார். விழாவில் எம்.எல்.ஏ., கு.ப.கிருஷ்ணன் பேசியதாவது:
ஏழை மாணவர்களின் உணவுக்கும் கல்விக்கும் இப்போதுதான் உத்தரவாத நிலை ஏற்பட்டுள்ளது. பள்ளிக்கு வரும் பிள்ளைகளை, அறிவுப்பூர்வமான பிள்ளைகளாக மாற்ற ஆசிரியர்களால் மட்டுமே முடியும்.
பெற்றோர்களும், ஆசிரியர்களும் பிள்ளைகளின் படிப்பைப்பற்றி அக்கறை எடுத்துக் கொண்டால், பிள்ளைகளுக்கு நல்ல எதிர்காலம் உண்டு. காற்று, குடிநீர், ஒளி மாசுபடாமல் தடுக்க, இறைவன் கொடுத்த கொடை மரம்.
எனவே மாணவர்கள் தங்களது படிப்பின் போது இணைத்து, சமூகமும் நலம் பெற தகுந்த கடமைகளை செய்தால், இந்தியா எளிதில் வல்லரசாகும்.
இவ்வாறு அவர் பேசினார்.
"பெல்' நிறுவனத்தின் இயக்குனர் கோபிநாத் பேசுகையில், ""மனதில் உறுதி இருந்தால், எதையும் சாதிக்கலாம். வாழ்க்கை என்பது இந்த உலகத்தில் பிறந்து இறப்பது கிடையாது. சமுதாயத்திற்கு என்ன நல்லது செய்யலாம், எத்தனை பேரை வாழவைக்கலாம் என்பதுதான் வாழ்க்கைக்கு உதாரணம். நல்லப்பணியை கையில் எடுத்து செய்ய வேண்டும். தாய், தந்தை, ஆசிரியர் இவர்களே, ஒரு மனிதனின் வாழ்க்கையை நிர்ணயிக்கமுடியும். மாணவர்கள் நல்ல கல்வியை பெற்று, நாட்டுக்கு நல்லது நடக்க பாடுபட வேண்டும்,'' என்றார்.
விழாவில் பஞ்சாயத்து தலைவர்கள் கோவிந்தன். நெவளிநாதன், கனகராஜ் மற்றும் குமுல்சண்முகம் உட்பட பலர் பங்கேற்றனர். ஆசிரியை டெய்சி வரவேற்றார். சாந்தி நன்றி கூறினார்.

 

மேலும் புதுக்கோட்டை மாவட்ட  செய்திகள் :


Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (1)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Rockes Porte - Trichur,இந்தியா
18-செப்-201310:53:28 IST Report Abuse
Rockes Porte நல்ல பேச்சு MLA
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
( OR )Login with
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.