எம்.பி.ஏ., கல்வி நிறுவனங்களில் திருச்சி ஐ.ஐ.எம்.,க்கு 19வது இடம்
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

01 டிச
2013
01:24

திருச்சி: இந்தியாவில் எம்.பி.ஏ., பயிற்றுவிக்கும் சிறந்த கல்வி நிறுவனங்களின் பட்டியலில் திருச்சி ஐ.ஐ.எம்., 19வது இடத்தை பிடித்துள்ளது.
எம்.பி.ஏ., யுனிவர்ஸ் என்ற இணைய தள அமைப்பு ஆண்டுதோறும் இந்தியாவில் எம்.பி.ஏ., பயிற்றுவிக்கும் கல்வி நிறுவனங்கள் குறித்த சர்வே மேற்கொண்டு, சிறந்த கல்வி நிறுவனங்களின் பட்டியலை வெளியிட்டு வருகிறது.
இந்த வகையில், 2013-14ம் ஆண்டுக்கான பட்டியலை வெளியிடுவதற்கான சர்வே சமீபத்தில் நடந்தது. இந்தியாவில் இரண்டாண்டு கொண்ட முழு நேர எம்.பி.ஏ., பயிற்றுவிக்கும், 11 ஐ.ஐ.எம்.,கள், ஐ.ஐ.டி.,கள், 150க்கும் மேற்பட்ட பிஸ்னஸ் பள்ளிகள், உயர் தர வரிசையில் உள்ள பொது பல்கலைகள் உள்ளிட்டவை இந்த சர்வேயில் பங்கெடுத்தன. இந்த கல்வி நிறுவனங்களுக்கு, 15 பக்கங்கள் கொண்ட கேள்வி தாள் அனுப்பப்பட்டு பதில் பெறப்பட்டது. கல்வி நிறுவனங்களில் மேற்கொள்ளப்படும் ஆராய்ச்சி உள்ளிட்ட அம்சங்களின் அடிப்படையில் சர்வே நடத்தப்பட்டது.
அஹமதாபாத் ஐ.ஐ.எம்., முன்னாள் இயக்குனர் பகுல் தோலகியா தலைமையில், இந்த சர்வே நடத்தி முடிக்கப்பட்டு தர வரிசை பட்டியலை, எம்.பி.ஏ., யுனிவர்சல் அமைப்பு தனது இணையதளத்தில் வெளியிட்டுள்ளது.
இதில், ஆயிரம் மதிப்பெண் பெற்று அஹமதாபாத் ஐ.ஐ.எம்., முதலிடத்தையும், 972 மதிப்பெண் பெற்று பெங்களூரு ஐ.ஐ.எம்., இரண்டாம் இடத்தையும், 950 மதிப்பெண் பெற்று கொல்கத்தா ஐ.ஐ.எம்., மூன்றாம் இடத்தையும் பிடித்துள்ளது.
திருச்சி ஐ.ஐ.எம்., (இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் மேனேஜ்மென்ட்) 686 மதிப்பெண் பெற்று, 19வது இடத்தை பிடித்துள்ளது. 530 மதிப்பெண் பெற்று சென்னை லயோலா இன்ஸ்டிடியூட் ஆஃப் பிஸ்னஸ் அட்மினிஸ்டிரேஷன் 41வது இடத்தையும், 528 மதிப்பெண் பெற்று சென்னை இன்ஸ்டிடியூட் ஆஃப் ஃøபான்சியல் மே னேஜ்மென்ட் அண்டு ஆராய்ச்சி மையம், 43வது இடத்தை பிடித்து சாதனை படைத்துள்ளது.

 

Advertisement


Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.