அண்ணா பல்கலை முன் போராட்டம்: 131 பேர் கைது
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

05 அக்
2010
00:41

சென்னை: நாமக்கல் மாணவி தற்கொலை வழக்கில், சி.பி.சி.ஐ.டி., விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி, அண்ணா பல்கலையை முற்றுகையிட்டு, உள்ளே நுழைய முயன்ற ஆதிதமிழர் பேரவையைச் சேர்ந்த 131 பேர் கைது செய்யப்பட்டனர். நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் தாலுகா முள்ளுக்குறிச்சியைச் சேர்ந்தவர் ஜோதி(18). பிளஸ் 2 முடித்திருந்த இவர், அண்ணா பல்கலையில் முதலாண்டு படித்து வந்தார். கடந்த ஆகஸ்ட் 30ம் தேதி பல்கலை விடுதியில் விடுப்பு எடுத்துச் சென்ற இவர், தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.  அண்ணா பல்கலை மாணவர்களின், "ராகிங்' கொடுமையே ஜோதியின் தற்கொலைக்கு காரணம் என, ஜோதியின் உறவினர்கள், ராசிபுரம் போலீசில் புகார் அளித்தனர். தொடர்ந்து, நாமக்கல் போலீசார், அண்ணா பல்கலைக்கழகம் வந்து மாணவர்கள், ஆசிரியர்கள், விடுதியில் விசாரணை நடத்திச் சென்றனர். இடையிடையே இந்த விவகாரம் தொடர்பாக பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் போராட்டம் நடத்தினர். இந்நிலையில், நேற்று காலை ஆதித் தமிழர் பேரவையின் தலைவர் அதியமான் தலைமையில், நூற்றுக்கும் மேற்பட்டவர்கள், காந்தி மண்டபம் அருகில் இருந்து ஊர்வலமாக, அண்ணா பல்கலையை முற்றுகையிடுவதற்காக சென்றனர். இதைத் தொடர்ந்து, பல்கலை வாயிற்கதவுகள் பூட்டப்பட்டு, போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. பல்கலை வாயில் முன்பு வந்த ஆதித்தமிழர் பேரவையினர், மாணவி ஜோதியின் தற்கொலை வழக்கை சி.பி.சி.ஐ.டி.,க்கு மாற்ற வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர். தொடர்ந்து, வாயிற் கதவை தள்ளி திறந்து உள்ளே செல்ல முயன்றனர். போலீசார் அவர்களை தடுத்த போது, இருதரப்பினரிடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. தொடர்ந்து, ஆர்ப்பாட்டம் நடத்திய 131 பேரையும் போலீசார் கைது செய்தனர். இதனால், அண்ணா பல்கலை வளாகத்தில் நேற்று காலை மிகுந்த பரபரப்பு ஏற்பட்டது.


 

மேலும் சென்னை மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X