Advertisement
Advertisement
Advertisement
பட்டப்பகலில் ரவுடி கொலை; வியாசர்பாடியில் வெறியாட்டம்
ஜூன் 23,2017

சென்னை : சென்னை வியாசர்பாடியில், பட்டப்பகலில், பிரபல ரவுடி வெட்டிக்கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.மாதவரம், திருவள்ளுவர் தெருவை சேர்ந்தவன் தியாகராஜன், 37; பிரபல ரவுடி. ரியல் எஸ்டேட் தொழிலும் செய்து வந்தான். ...

 • கோட்டை முற்றுகை போராட்டம்; கரும்பு விவசாயிகளால் பரபரப்பு

  ஜூன் 23,2017

  சென்னை : கரும்பு நிலுவைத் தொகை பெற்றுத் தர வலியுறுத்தி, கோட்டையை முற்றுகையிட பேரணியாக சென்ற விவசாயிகளால் பரபரப்பு ஏற்பட்டது.தனியார் சர்க்கரை ஆலைகளிடம் இருந்து, கரும்புக்கான நிலுவைத் தொகையை, அரசு பெற்றுத் தர வலியுறுத்தி, சென்னை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை முன், தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் ...

  மேலும்

 • ரூ. 1 கோடி பறிமுதல் இரண்டு பேர் கைது

  ஜூன் 23,2017

  கீழ்ப்பாக்கம் : கீழ்ப்பாக்கத்தில், தனியார் டிராவல்ஸ் நிறுவனத்திலிருந்து, செல்லாத, ஒரு கோடி ரூபாய் நோட்டுகளை பறிமுதல் செய்த போலீசார், ஊழியர்கள் இருவரை கைது செய்தனர்.கீழ்ப்பாக்கம் திவான்ராமா சாலையில், ஐய்யனார் டிராவல்ஸ் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இங்கு, செல்லாத ரூபாய் நோட்டு பதுக்கி ...

  மேலும்

 • 'காலா' பட அரங்கில் விபத்து; மின்சாரம் பாய்ந்து ஊழியர் பலி

  ஜூன் 23,2017

  பூந்தமல்லி : ரஜினி நடிக்கும், காலா படத்திற்கு, பூந்தமல்லி அருகே பிரம்மாண்ட, 'செட்' அமைக்கும்போது, மின்சாரம் பாய்ந்து, படுகாயமடைந்த நபர், சிகிச்சை பலனின்றி இறந்தார்.பா.ரஞ்சித் இயக்கத்தில், ரஜினி நடிப்பில் காலா திரைப்படம் உருவாகி வருகிறது. பூந்தமல்லியை அடுத்த பழஞ்சூர் பகுதியில், புதிதாக திறந்து ...

  மேலும்

 • ஆணவ படுகொலை தடுக்க தனி சட்டம்: 250 பேர் கைது

  ஜூன் 23,2017

  தாம்பரம் : ஜாதி ஆணவ படுகொலைகளை தடுக்க, சட்டசபை கூட்ட தொடரில் தனி சிறப்பு சட்டம் இயற்ற கோரி, நடைபயணம் மேற்கொண்டோரை போலீசார் கைது செய்தனர்.தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி தமிழ் மாநில குழு சார்பில், சேலம் முதல், சென்னை வரை, 360 கி.மீ., துாரம் நடைபயணம் மேற்கொள்ளப்பட்டது. அவர்கள், ஜாதி ஆணவ படுகொலைகளை ...

  மேலும்

 • முதியோரிடம் நகை கொள்ளை; அல்வா கொடுத்த திருடர்கள்

  ஜூன் 23,2017

  துரைப்பாக்கம் : கலவரம் நடப்பதாக கூறி, முதியோரிடம் நுாதன முறையில் நகை பறித்த இரண்டு பேரை, போலீசார் தேடுகின்றனர்.அடையாறு, இந்திரா நகரைச் சேர்ந்தவர் முருகேசன், 69. இவர், துரைப்பாக்கம், பல்லவன் குடியிருப்பில் உள்ள மருமகன் வீட்டுக்கு, நேற்று புறப்பட்டார்.பல்லவன் குடியிருப்பு பேருந்து நிலையத்தில் ...

  மேலும்

 • சாலையில் நின்ற சரக்கு லாரி மீது மணல் லாரி மோதி இருவர் பலி

  ஜூன் 23,2017

  செங்குன்றம் : சாலையில் நின்ற சரக்கு லாரி மீது, வேகமாக சென்ற மணல் லாரி மோதிய விபத்தில், ஓட்டுனர் மற்றும் கிளீனர் சம்பவ இடத்தில் பலியாகினர்.சென்னை துறைமுகத்தில் இருந்து, நேற்று அதிகாலை, 1:00 மணி அளவில், கோதுமை ஏற்றிய சரக்கு லாரி, ராஜஸ்தான் மாநிலத்திற்கு சென்று கொண்டிருந்தது. செங்குன்றம் அடுத்த ...

  மேலும்

 • விளையாட்டு ஆசிரியருக்கு கத்தி குத்து

  ஜூன் 23,2017

  ஐ.சி.எப். : ஐ.சி.எப்., அருகே, தனியார் பள்ளி விளையாட்டு ஆசிரியரை, நான்கு பேர் கொண்ட மர்ம கும்பல், கத்தியால் குத்திவிட்டு தப்பிச் சென்ற சம்பவம், பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.பெரம்பூர் சுப்பிரமணி மெயின் தெருவைச் சேர்ந்தவர் பெர்லின், 40; அண்ணாநகரில் உள்ள பிரபல தனியார் பள்ளியில், விளையாட்டு ஆசிரியராக ...

  மேலும்

 • 3 ரயில்வே ஊழியர்கள் 'சஸ்பெண்ட்'

  ஜூன் 23,2017

  சென்னை : ரயில்வே அதிகாரிக்கு மாலை போடுவதில் ஏற்பட்ட தகராறில், மூன்று ஊழியர்கள், 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டு உள்ளனர்.சென்னை பெரம்பூர் லோகோ ஒர்க்ஸில் நடந்த விழாவிற்கு, ரயில்வே வாரிய உறுப்பினர் ரவீந்தர் குப்தா வந்திருந்தார். அவரை வரவேற்று மாலை போடுவதில், இரண்டு, ரயில்வே சங்க ஊழியர்களுக்கு இடையே ...

  மேலும்

 • எண்ணுார் துறைமுகத்தில் முற்றுகை

  ஜூன் 23,2017

  சென்னை : எண்ணுார் துறைமுகத்தை தனியார் மயமாக்குவதை கண்டித்து, துறைமுக ஊழியர்கள், நேற்று கறுப்பு பேட்ச் அணிந்து, நுழைவாயில் முன், முற்றுகை போராட்டம் நடத்தினர்.முன்னாள் பிரதமர் வாஜ்பாயால், 2000ல் திறந்து வைக்கப்பட்ட எண்ணுார் காமராஜர் துறைமுகம், 15 ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்கு, மதிப்புமிக்கது. ...

  மேலும்

 • குழந்தைக்காக நாடகமாடிய பெண்

  ஜூன் 23,2017

  சென்னை : கணவனை ஏமாற்ற, மனைவி வைத்திருந்த குழந்தை யாருடையது என, போலீசார் விசாரித்து வருகின்றனர்.கீழ்ப்பாக்கத்தைச் சேர்ந்தவர் யோகேஷ்குமார், 29; வழக்கறிஞர். இவர், சேத்துப்பட்டு பகுதியைச் சேர்ந்த, பத்மினி, 26, என்ற, மென் பொறியாளரை காதலித்து உள்ளார். இவர்களுக்கு, 2016 பிப்ரவரியில் திருமணம் நடந்தது.கரு ...

  மேலும்

 • ரயிலில் மின் கம்பியை பிடித்து இளைஞர் தற்கொலை முயற்சி

  ஜூன் 23,2017

  பட்டாபிராம் : பட்டாபிராம் ரயில் நிலையத்தில், மின்சார ரயிலின் உயர்மின்னழுத்த கேபிள்களை பிடித்து, இளைஞர் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.ஆவடி அடுத்த பட்டாபிராம் ரயில் நிலையத்தில், 24 வயது மதிக்கத்தக்க இளைஞர், நேற்று இரவு, 8:00 மணியில் இருந்து, காத்திருந்தார். இரவு, 8.30 மணியளவில், ...

  மேலும்

 • கணினி பயிற்சியாளர்கள் 55 பேர் கைது

  ஜூன் 23,2017

  சென்னை : சட்டசபை கூட்டம் நடந்து கொண்டிருந்தபோது, தலைமைச் செயலகம் உள்ளே நுழைந்து, திடீர் போராட்டத்தில் ஈடுபட்ட, கணினி பயிற்சியாளர்கள், 55 பேரை, போலீசார் கைது செய்தனர்.கடந்த வாரத்தில் இருந்து, சட்டசபை கூட்டம் நடந்து வருகிறது. அதையொட்டி தலைமைச் செயலகத்தில், பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. ...

  மேலும்

 • விபத்தில் கால்களை இழந்த விவசாயி; இழப்பீட்டு தொகை உயர்த்தி உத்தரவு

  ஜூன் 23,2017

  சென்னை : சாலை விபத்தில் கால்களை இழந்த விவசாயிக்கு, கீழமை நீதிமன்றம் விதித்த இழப்பீட்டு தொகையில், 10 லட்சம் ரூபாயை உயர்த்தி வழங்கும்படி, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.சென்னையை சேர்ந்தவர் கோவிந்தராஜ்; விவசாயி. சாலை விபத்தில், இவரது இரண்டு கால்களும் துண்டிக்கப்பட்டன.இவரது வழக்கை ...

  மேலும்

 • மெட்ரோ பணி; வீட்டில் விரிசல்

  ஜூன் 23,2017

  சென்னை : மெட்ரோ ரயில் சுரங்கப்பாதை அமைக்கும் போது, வீடு ஒன்றில் விரிசல் ஏற்பட்டதால், பரபரப்பு ஏற்பட்டது.பழைய வண்ணாரப்பேட்டை - தியாகராஜர் கல்லுாரி இடையே மெட்ரோ ரயில் சுரங்கப்பாதை பணி நடந்து வருகிறது. இப்பாதையில், தியாகராஜர் கல்லுாரிக்கு அருகில் உள்ள மொட்டை தோட்டம் பகுதியில், சுரங்கப்பாதை ...

  மேலும்