Advertisement
Advertisement
Advertisement
லாரி கவிழ்ந்து குடிநீர் வீண்!
ஏப்ரல் 29,2016

அண்ணா சதுக்கம் : தண்ணீர் லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், ஓட்டுனர், கிளீனர் பலத்த காயமடைந்தனர்.மேடவாக்கத்தில் இருந்து, பாரிமுனை நோக்கி நேற்று அதிகாலை சென்ற தண்ணீர் லாரி, கலங்கரை விளக்கம் அருகே சாலை தடுப்பில் மோதி, ...

 • கோட்டையில் குடிநீர் இல்லை; தாகம் தீர்க்க போலீசார் தவிப்பு

  ஏப்ரல் 27,2016

  தலைமை செயலகத்தில், பாதுகாப்பு பணியில் உள்ள போலீசார், குடிநீர் கிடைக்காமல் அவதிப்படுகின்றனர்.சென்னை, செயின்ட் ஜார்ஜ் கோட்டையில், சட்டசபை வளாக கட்டடம், நாமக்கல் கவிஞர் மாளிகை என, இரண்டு கட்டடங்கள் உள்ளன. நாமக்கல் கவிஞர் மாளிகை, சமீபத்தில், பல கோடி ரூபாய் மதிப்பில் புதுப்பிக்கப்பட்டது. குடிநீர் ...

  மேலும்

 • செங்குன்றத்தில் மின்வெட்டால் பரிதவிப்பு

  ஏப்ரல் 25,2016

  செங்குன்றம் : காலை முதல் மாலை வரை, பலமுறை ஏற்பட்ட அறிவிக்கப்படாத மின்வெட்டால், பகுதிவாசிகள் தவிப்பிற்குள்ளாகினர்.சென்னை செங்குன்றம், காமராஜ் நகர், ஆர்.ஜி.என்., காலனி உள்ளிட்ட பகுதிகளில், நேற்று காலை, 7:00 முதல் மாலை, 4:00 மணி வரை, எட்டு முறைக்கு மேல், மின்வெட்டு ஏற்பட்டது. ஒவ்வொரு முறையும், 20 நிமிடம் முதல், ...

  மேலும்

 • ஜி.எஸ்.டி., சாலையில் விபத்து அபாயம்

  ஏப்ரல் 21,2016

  தாம்பரம் : இரும்புலியூர் ஜி.எஸ்.டி., சாலையில், மின்விளக்குகள் எரியாததால், விபத்து அபாயம் நிலவுகிறது.தாம்பரம் - பெருங்களத்துார், ஜி.எஸ்.டி., சாலையில், இரும்புலியூரில், சாலை குறுகலாக இருந்தது. அதனால், ஏராளமான விபத்துகள் நடந்தன. அதையடுத்து, சாலை விரிவாக்கம் செய்யும் பணிகள் நடந்து முடிந்தன. புதிய ...

  மேலும்

 • நான்கு மாதங்களாக சிக்னல் பழுது

  ஏப்ரல் 18,2016

  பெரியமேடு : பழுதடைந்த சிக்னலை, நான்கு மாதங்களாக சீரமைக்காததால், வாகன ஓட்டிகள், விபத்தில் சிக்கி வருகின்றனர்.பூந்தமல்லி நெடுஞ்சாலை - முத்தையா சாலை சந்திப்பில் உள்ள, சிக்னல் கடந்த நான்கு மாதங்களுக்கு முன் பழுதடைந்தது. இதனால், அந்த பகுதியில், தினமும் சிறுசிறு விபத்துகளும், அவ்வப்போது போக்குவரத்து ...

  மேலும்

 • நங்கநல்லூரில் தொடரும் மின்வெட்டு

  ஏப்ரல் 18,2016

  நங்கநல்லுார் : நங்கநல்லுாரில், அறிவிக்கப்படாத மின்வெட்டு தொடர்வதால், பகுதிவாசிகள் பல்வேறு சிரமங்களுக்கு உள்ளாகின்றனர்.நங்கநல்லுார், பழவந்தாங்கல் பகுதிகளில், கடந்த இரு நாட்களாக, அரை மணிநேரம் முதல், 2 மணிநேரம் வரை, அறிவிக்கப்படாத மின்வெட்டு நிலவுகிறது. அதேபோல், தில்லை கங்காநகர், ஆதம்பாக்கம், ...

  மேலும்

 • செம்பாக்கத்தில் மின்தடை பகுதிவாசிகள் கடும் அவதி

  ஏப்ரல் 11,2016

  செம்பாக்கம் : செம்பாக்கத்தில் இரவில் ஏற்படும் அறிவிக்கப்படாத மின்தடையால், பகுதிவாசிகள் அவதியடைந்தனர்.செம்பாக்கம் நகராட்சியின், மாடம்பாக்கம் பிரதான சாலையில் உள்ள, வி.ஜி.பி., பொன் நகர், வி.ஜி.பி., சீனிவாசா நகர், அருள்நெறி நகர், டல்லஸ் அவென்யூ பேஸ் - 1 உள்ளிட்ட பகுதிகளில், பகல், 12:15 முதல் 1:40 வரையும், மாலை, 5:40 ...

  மேலும்

 • பள்ளி பஸ் விதிமுறைகள் அமலாவதில் என்ன பிரச்னை?

  ஏப்ரல் 08,2016

  சென்னை: பள்ளி பஸ்களுக்காக கொண்டு வரப்பட்ட விதிமுறைகளை அமல்படுத்துவதில் உள்ள பிரச்னைகள், அதற்கான தீர்வு என்ன என்பதை, பள்ளிகள் தெரிவிக்கும்படி, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.சென்னை, தாம்பரம் அருகே சேலையூரில் உள்ள சியோன் பள்ளி பஸ்சில் உள்ள ஓட்டை வழியாக, சிறுமி கீழே விழுந்து பலியான ...

  மேலும்

 • ஆட்டோ பர்மிட் நிறுத்தம் தொழிலாளர்கள் தவிப்பு

  ஏப்ரல் 07,2016

  தேர்தல் நடத்தை விதிமுறையை காரணம் காட்டி, சென்னையில் ஆட்டோக்களுக்கான, 'பர்மிட்' நிறுத்தப்பட்டதை, நீக்க வேண்டுமென தொழிலாளர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.இது குறித்து, மெட்ராஸ் மெட்ரோ ஆட்டோ ஓட்டுனர்கள் சங்கம் (ஏ.ஐ.டி.யூ.சி.,) பொது செயலர் ஜெ. சேஷசயனம் கூறியதாவது:கடந்த, 2014ம் ஆண்டு முதல், சென்னையில் ...

  மேலும்

 • 5 மணிநேரம் மின்வெட்டு கே.கே.நகர் வாசிகள் அவதி

  ஏப்ரல் 02,2016

  கே.கே., நகர் : கே.கே., நகர் பகுதியில், தினமும் ஐந்து மணி நேரம், மின்வெட்டு ஏற்படுவதால், பகுதிவாசிகள் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். கே.கே., நகர் பகுதியில், கடந்த ஒரு வாரமாக, தினமும், பகல் மற்றும் இரவு வேளைகளில், ஐந்து மணி நேரம் மின்வெட்டு ஏற்படுகிறது. அந்த அறிவிக்கப்படாத மின்வெட்டால், பகுதிவாசிகள் ...

  மேலும்

 • இன்ஜின் பழுதால் ரயில் சேவை பாதிப்பு

  மார்ச் 31,2016

  கோட்டூர்புரம் : இன்ஜின் பழுதாகி ரயில் நின்றதால், கடற்கரை - வேளச்சேரி மார்க்கத்தில், ரயில் சேவை பாதிக்கப்பட்டது.நேற்று பிற்பகல், 2:00 மணிக்கு, கடற்கரையில் இருந்து, வேளச்சேரி நோக்கி சென்ற மேம்பால ரயில், கஸ்துாரிபாய் நகர் ரயில் நிலையத்தில், இன்ஜின் பழுதால் நின்றது. அதனால், அதன் பின்னால் வந்த ரயில்கள் ...

  மேலும்

 • புதுப்பேட்டையில் மின்தடை பகுதிவாசிகள் கடும் அவதி

  மார்ச் 31,2016

  புதுப்பேட்டை செல்லும் மின் வழித்தடம் பழுது ஆனதால், பல மணிநேரம், மின்தடை ஏற்பட்டதால், பகுதிவாசிகள் பாதிக்கப்பட்டனர்.சென்னை, அண்ணா சாலையில், 33/11 கிலோவோல்ட் திறன் கொண்ட துணைமின் நிலையம் உள்ளது. அந்த மின் நிலையத்திற்கு, சிந்தாதிரிப்பேட்டையில் உள்ள, 110 கி.வோ., மின் நிலையத்தில் இருந்து, மின்சாரம் ...

  மேலும்

 • அதிகாரிகள் அலட்சியத்தால் 20 நாட்களாக வீணாகும் குடிநீர்

  மார்ச் 31,2016

  எண்ணுார் : எண்ணுார் அடுத்த, எர்ணாவூர் நெடுஞ்சாலையில், குடிநீர் குழாய் உடைந்து, 20 நாட்களாக, குடிநீர் வீணாகி வருகிறது.எர்ணாவூர் பகுதியில், தெருவீதியம்மன் கோவில் நகர், எர்ணீஸ்வரர் நகர், பஜனை கோவில் நகர் உள்ளிட்ட, 10க்கும் மேற்பட்ட நகர்கள் உள்ளன. அவற்றில், 10,௦௦௦க்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். அந்த ...

  மேலும்

 • கோயம்பேடு சி.எம்.டி.ஏ., அலுவலகத்தில் மின் திருட்டு

  மார்ச் 30,2016

  கோயம்பேடு அங்காடி வளாகத்தில் சீரமைப்பு பணிகளை மேற்கொள்ளும் ஒப்பந்ததாரர், சி.எம்.டி.ஏ., அலுவலகத்தில் மின்சாரத்தை திருடுவதாக புகார் எழுந்து உள்ளது.கோயம்பேடு மார்க்கெட்டில், சாலைகள், இரும்பு கதவுகள், மழைநீர் வடிகால்கள் சீரமைப்புக்கு, 33 கோடி ரூபாய் செலவிடப்பட்டதில் முறைகேடுகள் நடந்ததாக புகார் ...

  மேலும்

 • ஆதம்பாக்கத்தில் சிறுத்தை? பீதியில் பகுதிவாசிகள்

  மார்ச் 24,2016

  ஆதம்பாக்கம் : ஆதம்பாக்கம் பகுதியில், சிறுத்தை புகுந்ததாக தகவல்கள் பரவியதால், பகுதிவாசிகள் பீதியடைந்தனர்.ஆதம்பாக்கம், ராமகிருஷ்ணபுரம் 2வது தெருவை சேர்ந்தவர் சுந்தர்ராஜன், 60; அவர் மனைவி, நீலாவதி, 54; நேற்று அதிகாலை 3:௦௦ மணிக்கு, அவர்களது வீட்டின் அருகே சத்தம் கேட்டுள்ளது. இருவரும், வெளியே வந்து ...

  மேலும்