Dinamalar

கவலை இல்லை: நெய்மர் உறுதி ,  
 

கவலை இல்லை: நெய்மர் உறுதி

சமரா: ''என்னைப்பற்றிய விமர்சனங்கள், பாராட்டுக்கள் குறித்து ஒருபோதும் கவலைப்பட மாட்டேன்,'' பிரேசில் வீரர் நெய்மர் தெரிவித்தார்.

பிரேசில் நட்சத்திர வீரர் நெய்மர், 26. வலது கணுக்கால் மற்றும் கால் விரல் காயம் காரணமாக ஆப்பரேஷன் செய்த இவர் மூன்றரை மாதங்களுக்குப் பின் மீண்டு வந்தார். உலக கோப்பை தொடரில் நெய்மரை அதிகமாக 'பவுல்' செய்து வருகின்றனர்.

அதேநேரம் இவர் வலிப்பது போல போலியாக நடிக்கிறார் என விமர்சனங்கள் எழுந்தன. 'ரவுண்டு-16' சுற்றில் விளையாடிய மெக்சிகோ அணி பயிற்சியாளர் பத்திரிகையாளர் சந்திப்பில் நெய்மர் நடிப்பதாக தெரிவித்தார். இதுகுறித்து நெய்மர் கூறியது:

என்னைப் பொறுத்தவரையில் என்மீதான விமர்சனங்கள், பாராட்டுக்கள் குறித்து கண்டுகொள்ள மாட்டேன். ஏனெனில் இது நமது அணுகுமுறையில் பாதிப்பை ஏற்படுத்தி விடும். கடந்த இரு போட்டிகள் குறித்து பத்திரிகையாளர்களில் எதுவும் பேசியது இல்லை.

ஏனெனில் இதற்கு விருப்பமும் இல்லை. போட்டியின் போது சக வீரர்கள் மற்றும் அணிக்கு கைகொடுப்பது தான் எனது முக்கிய வேலை.

இவ்வாறு அவர் கூறினார்.

தற்காப்பு வீரர் தியாகோ சில்வா கூறுகையில்,'' மூன்றரை மாதங்களாக போட்டிகளில் பங்கேற்காமல் இருந்தார் நெய்மர். தற்போது இவர் விளையாடுவதைப் பார்த்தால் எங்களுக்கு வியப்பாக உள்ளது,'' என்றார்.

Advertisement
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login

forgot password? Enter yourpassword
(Press Ctrl+g or click this to toggle between English and Tamil)
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
வரலாறு மாறும்: ராகிடிச் நம்பிக்கை

வரலாறு மாறும்: ராகிடிச் நம்பிக்கை

ஜூலை 09,2018 சோச்சி: ''உலக கோப்பை கால்பந்து தொடரில் இம்முறை குரோஷிய அணி பைனலுக்கு முன்னேறி புதிய வரலாறு படைக்கும்,'' என, இவான் ராகிடிச் நம்பிக்கை தெரிவித்துள்ளார். ரஷ்யாவில், ...
ரஷ்ய பெண்களுக்கு எச்சரிக்கை

ரஷ்ய பெண்களுக்கு எச்சரிக்கை

ஜூன் 15,2018 மாஸ்கோ: ''உலக கோப்பை தொடரைக் காண வரும் வேறு நாட்டு ரசிகர்களுடன் படுக்கையை பகிர்ந்து கொள்ளக் கூடாது,'' என ரஷ்யாவின் மூத்த எம்.பி., டமாரா, 70, எச்சரிக்கை ...
கால்பந்து படுத்தும் பாடு: நிலத்தை விற்ற வங்கதேச ரசிகர்

கால்பந்து படுத்தும் பாடு: நிலத்தை விற்ற வங்கதேச ரசிகர்

ஜூன் 15,2018 தாகா: ஜெர்மனி அணிக்காக தனது நிலத்தை விற்றுள்ளார் வங்கதேச கால்பந்து ரசிகர். வங்கதேசத்தின் மகுரா கிராமத்தை சேர்ந்தவர் அம்ஜத். ஜெர்மனி கால்பந்து அணியின் தீவிர ரசிகர். ...