Dinamalar

ஆக்டோபஸ் விற்பனை ,  
 

ஆக்டோபஸ் விற்பனை

ஜப்பான் அணி பங்கேற்ற உலக கோப்பை போட்டியின் முதல் இரு முடிவுகளை துல்லியமாக கணித்தது ராபியட் என்ற ஆக்டோபஸ். இதனால் ஜப்பானில் ராபியட் பிரபலம் ஆனது. இருப்பினும் இணையதளத்தில் 'வைரல்' என்பதை விட தனக்கு பணம் தான் முக்கியம் என முடிவு செய்த உரிமையாளர் கிமியோ அபே, கறிக்காக விற்று விட்டார். அவர் கூறுகையில்,' அடுத்த ராபியட் போட்டி முடிவுகளை கணிக்கும்,'' என்றார்.

பிரேசிலின் 'இந்திய' ரசிகர்

உலக கோப்பை 'ரவுண்டு-16' போட்டியில் பிரேசில் அணி, மெக்சிகோவை வீழ்த்தியது. இந்த வெற்றியை ரஷ்யாவில் உள்ள பிரேசில் ரசிகர்கள் கொண்டாடினர். அதில் ஒரு ரசிகர் மட்டும் இந்திய கால்பந்து வீரர்கள் அணியும் 'ஜெர்சி' அணிந்து ஆடிக் கொண்டிருந்தார். இந்த வீடியோ இணையதளங்களில் வைரல் ஆகியுள்ளது.

மன்னித்து விடு மனைவி

உலக கோப்பை பார்க்கச் சென்ற பெல்ஜியம் ரசிகருக்கு ரஷ்யா அதிகம் பிடித்து போய் விட்டது போல. அவர் கூறுகையில்,'' ஜப்பானுக்கு எதிரான போட்டியில் பெல்ஜியம் அணி மீண்டும் வரும் என நம்பினோம். அடுத்து காலிறுதி போட்டிக்காக கசான் நகருக்கு செல்கிறோம். தவிர ரஷ்யாவும் பிடித்துள்ளதால், எனது மனைவி மன்னிக்க வேண்டும். இங்கேயே இருக்கப் போகிறேன்,'' என்றார்.



பைனலுக்கு அப்புறம் வாங்க

சுவீடன் கால்பந்து அணி கேப்டன் ஆன்ட்ரியாஸ் கிரான்விஸ்ட். 'ரவுண்டு-16' சுற்றில் சுவிட்சர்லாந்தை வீழ்த்தி, காலிறுதியில் நாளை இங்கிலாந்தை சந்திக்கிறது. இதனால் இன்னும் இரு வாரம் ரஷ்யாவில் தங்கிக் கொள்ள ஆன்ட்ரியாஸ் மனைவி அனுமதி தந்தார். விரைவில் இரண்டாவது குழந்தைக்கு அம்மா ஆகப் போகிற அவர் வெளியிட்ட செய்தியில்,'சிறப்பாக செயல்படும் நீங்கள், பைனலுக்கு அப்புறம் வாருங்கள். அதுவரை காத்திருக்கிறோம்,'' என்றார்.

நானும் 'நெய்மர்' தான்

பிரேசில் நட்சத்திர வீரர் நெய்மர், போட்டியின் போது இவர் காயம் பட்டது போல நடிப்பதாக விமர்சிக்கப்படுகின்றன. இதனிடையே பிரேசில் ரசிகர் ஒருவர் தனது வீட்டில் வளர்க்கும் பூனைக்கு, பிரேசில் 'ஜெர்சியை' அணிவித்து, நெய்மரைப் போல கீழே விழ பயிற்சி கொடுத்துள்ளது வரவேற்பை பெற்றுள்ளது.



Advertisement
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login

forgot password? Enter yourpassword
(Press Ctrl+g or click this to toggle between English and Tamil)
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
இங்கிலாந்து சிறுவன் ஆசை நிறைவேறுமா

இங்கிலாந்து சிறுவன் ஆசை நிறைவேறுமா

ஜூலை 09,2018 லண்டன்: இங்கிலாந்தை சேர்ந்த ஐந்து வயது சிறுவன் பென் வில்லியம்ஸ். மூளை புற்று நோயினால் பாதிக்கப்பட்டு பர்மிங்காமில் உள்ள குயின் எலிசபெத் மருத்துவமனையில் சிகிச்சை ...
உலக கோப்பை பார்த்த 4 கோடி பேர்

உலக கோப்பை பார்த்த 4 கோடி பேர்

ஜூலை 05,2018 மாஸ்கோ: உலக கோப்பை கால்பந்து போட்டிகளை மைதானத்தில் பார்த்து ரசித்த ரசிகர்கள் எண்ணிக்கை 4 கோடியை எட்டியது. சர்வதேச கால்பந்து கூட்டமைப்பு ('பிபா') சார்பில் உலக ...
மெஸ்சி, ரொனால்டோ... ‘டைவர்ஸ்’

மெஸ்சி, ரொனால்டோ... ‘டைவர்ஸ்’

ஜூலை 05,2018 செல்யபின்ஸ்க்: மெஸ்சி, ரொனால்டோ என இருவரில் யார் சிறந்தவர் என்ற பிரச்னை காரணமாக ரஷ்ய தம்பதிகள் விவாகரத்து செய்ய உள்ளனர். ரஷ்யாவின் செல்யபின்ஸ்க் நகரை சேர்ந்த ...