Dinamalar

சீறியது பெல்ஜியம்...சிதறியது பிரேசில் ,  
 

சீறியது பெல்ஜியம்...சிதறியது பிரேசில்

கசான்: உலக கோப்பை கால்பந்து தொடரிலிருந்து பிரேசில் அணி வெளியேறி அதிர்ச்சி அளித்தது. பரபரப்பான காலிறுதியில் 1-2 என, பெல்ஜியத்திடம் வீழ்ந்தது.

ரஷ்யாவில், 'பிபா' உலக கோப்பை கால்பந்து தொடருக்கான காலிறுதி போட்டிகள் நடக்கின்றன. நேற்று, கசான் நகரில் நடந்த காலிறுதியில் 5 முறை சாம்பியன் பட்டம் வென்றுள்ள உலகின் 'நம்பர்-2' அணியான பிரேசில், பெல்ஜியத்தை (3வது இடம்) எதிர் கொண்டது.

துவக்கம் முதலே பெல்ஜியம் வீரர்கள் பிரேசில் 'கோல்போஸ்ட்டை' படை எடுத்தனர். ஆட்டத்தின் 13வது நிமிடத்தில், பெல்ஜியம் அணிக்கு 'கார்னர்' வாய்ப்பு கிடைத்தது. இதில், சக வீரர் துாக்கி அடித்த பந்தை வின்சன்ட் அந்தரத்தில் பறந்து தலையால் முட்டி கோல் அடிக்க முயற்சித்தார். ஆனால் இதை தடுக்க முற்பட்ட பிரேசில் வீரர் பெர்னாண்டோவின் வலது முழங்கை பகுதியில் பட்டு பந்து வலைக்குள் செல்ல 'சேம் சைடு' கோலானது. இந்த சோகத்திலிருந்த பிரேசில் வீரர்கள் மீள்வதற்குள் அடுத்த அதிர்ச்சி காத்திருந்தது.

கெவின் அசத்தல்

ஆட்டத்தின் 31வது நிமிடத்தில் லுகாகு எதிரணியினரின் தடுப்பை மீறி பந்தை துல்லியமாக கடத்தி வந்தார். பந்தை சக வீரர் கெவின் டி புரூய்னிக்கு 'பாஸ்' செய்தார். பந்தை பெற்ற இவர், 18 மீ., துாரத்திலிருந்து உதைத்து, பெல்ஜியம் அணிக்கு இரண்டாவது கோல் அடித்தார். முதல் பாதியில் பிரேசில் 0-2 என பின்தங்கியது. ஆட்டத்தின் 76வது நிமிடத்தில் கவுடின்கோ தந்த பந்தை பெற்ற, அகஸ்டோ தலையால் முட்டி பிரேசிலுக்கு முதல் கோல் அடித்தார். பின், நெய்மர் உள்ளிட்ட நட்சத்திர வீரர்கள் போராடியபோதும் கூடுதலாக கோல் அடிக்க முடியவில்லை. முடிவில், பெல்ஜியம் அணி 2-1 என்ற கணக்கில் வெற்றி பெற்றது.

11

இப்போட்டியில், பிரேசில் வீரர் பெர்னாண்டோ 'சேம் சைடு' கோல் அடித்தார். இது, இத்தொடரில் 11வது 'சேம் சைடு' கோலாக அமைந்தது. இதன்மூலம், அதிக 'சேம்சைடு' கோல் பதிவான தொடர்களின் வரிசையில் தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கிறது.

2

உலக கோப்பை தொடரில் 'சேம் சைடு' அடித்த 2வது பிரேசில் வீரரானார் பெர்னாண்டோ. இதற்கு முன், 2014ல் மார்செலோ இந்த முறையில் கோல் அடித்திருந்தார்.



Advertisement
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login

forgot password? Enter yourpassword
(Press Ctrl+g or click this to toggle between English and Tamil)
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
விடிய விடிய கொண்டாடிய பிரான்ஸ்

விடிய விடிய கொண்டாடிய பிரான்ஸ்

ஜூலை 16,2018 பாரிஸ்: உலக கோப்பை வென்ற பிரான்ஸ் அணிக்கு பல தரப்பில் இருந்தும் பாராட்டுகள் குவிகின்றன. நேற்றிரவு பாரிஸ் சென்ற வீரர்கள் திறந்த பஸ் மூலம் ஊர்வலமாக அழைத்து வரப்பட்டு, ...
அர்ஜென்டினா பயிற்சியாளர் விலகல்

அர்ஜென்டினா பயிற்சியாளர் விலகல்

ஜூலை 16,2018 மாஸ்கோ: அர்ஜென்டினா கால்பந்து பயிற்சியாளர் பதவியில் இருந்து சாம்பாவோலி விலகினார். அர்ஜென்டினா அணி 1993ல் கோபா அமெரிக்க தொடரில் கோப்பை வென்றது. இதன் பின் பெரிய ...
‘கோல்டன் பால்’ யாருக்கு

‘கோல்டன் பால்’ யாருக்கு

ஜூலை 16,2018 இந்த சீசனில் தொடர் நாயகன் விருதை குரோஷிய கேப்டன் மாட்ரிச் கைப்பற்றினார். இதனையடுத்து இவருக்கு சிறந்த வீரருக்கான 'கோல்டன் பால்' விருது வழங்கப்பட்டது. ஹாரி கேன் ...