Dinamalar

இளமை... இங்கிலாந்து இனிமை: அரையிறுதிக்கு முன்னேறியது ,  
 

இளமை... இங்கிலாந்து இனிமை:  அரையிறுதிக்கு முன்னேறியது

சமரா: உலக கோப்பை கால்பந்து தொடரின் அரையிறுதிக்கு இங்கிலாந்து அணி ஜோராக முன்னேறியது. விறுவிறுப்பான காலிறுதியில் இளம் வீரர்களான மாகுரே, டெலி அலி தலா ஒரு கோலடித்து கைகொடுக்க 2-0 என வெற்றி பெற்றது. சுவீடன் அணி தோல்வியடைந்து வெளியேறியது.

ரஷ்யாவில், 21வது 'பிபா' உலக கோப்பை கால்பந்து தொடர் நடக்கிறது. நேற்று, சமரா நகரில் நடந்த காலிறுதியில் உலகின் 'நம்பர்-12' இங்கிலாந்து அணி, 24வது இடத்தில் உள்ள சுவீடனை எதிர்கொண்டது.

ஆட்டத்தின் 30வது நிமிடத்தில் இங்கிலாந்து அணிக்கு முதல் 'கார்னர்' வாய்ப்பு கிடைத்தது. இதில் ஆஷ்லே யங் துாக்கி அடித்த பந்தை 25 வயது வீரரான ஹாரி மாகுரே தலையால் முட்டி முதல் கோல் அடித்தார். முதல் பாதி முடிவில் இங்கிலாந்து அணி 1-0 என முன்னிலை வகித்திருந்தது.

இரண்டாவது பாதியின் 58வது நிமிடத்தில் லிங்கார்டு துாக்கி அடித்த பந்தை 22 வயதான இளம் டெலி அலி தலையால் முட்டி ஒரு கோல் அடிக்க, இங்கிலாந்து அணி 2-0 என முன்னிலை பெற்றது. ஆட்டத்தின் 72வது நிமிடத்தில் சுவீடனின் பெர்க் அடித்த பந்தை இங்கிலாந்து கோல்கீப்பர் பிக்போர்டு, 'கோல் போஸ்ட்டுக்கு' மேலே அனுப்பினார். பின் 90வது நிமிடத்தில் சுவீடனுக்கு கிடைத்த 'பிரீ கிக்' வீணடிக்கப்பட்டது.

கடைசி நிமிடம் வரை போராடிய சுவீடன் அணியினரால் ஒரு கோல் கூட அடிக்க முடியவில்லை. ஆட்டநேர முடிவில் இங்கிலாந்து அணி 2-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறியது.

11

ஹாரி மாகுரே, டெலி அலி தலா ஒரு கோல் அடித்ததன் மூலம் இம்முறை இங்கிலாந்து சார்பில் 11 கோல் பதிவானது. இதன்மூலம் 2வது முறையாக, ஒரு உலக கோப்பை தொடரில் இங்கிலாந்து அணி அதிகபட்சமாக 11 கோல் அடித்தது. ஏற்கனவே 1966ல் சொந்த மண்ணில் நடந்த தொடரில் 6 போட்டியில், 11 கோல் அடித்தது. தவிர, 1966ல் முதன்முறையாக கோப்பை வென்றது.

2

சுவீடனுக்கு எதிராக இங்கிலாந்தின் டெலி அலி (22 வயது) ஒரு கோல் அடித்தார். இதன்மூலம் உலக கோப்பை கால்பந்து அரங்கில் குறைந்த வயதில் கோலடித்த இங்கிலாந்து வீரர்கள் பட்டியலில் 2வது இடம் பிடித்தார். முதலிடத்தில் மைக்கேல் ஓவன் (18 ஆண்டு, 190 நாள், எதிர்: ருமேனியா, 1998) உள்ளார்.

3

காலிறுதியில் ஏமாற்றிய சுவீடன் அணி, உலக கோப்பை மற்றும் ஐரோப்பிய சாம்பியன்ஷிப் தொடர்களில் இங்கிலாந்திடம் தோல்வியடைந்து 3வது அணியானது. கடந்த 2012ல் நடந்த ஐரோப்பிய சாம்பியன்ஷிப் தொடரில் இங்கிலாந்து அணி 3-2 என, சுவீடனை வீழ்த்தியது. ஏற்கனவே ஜெர்மனி, சுவிட்சர்லாந்து அணிகள் இவ்விரு தொடர்களில் இங்கிலாந்திடம் வீழ்ந்தன.

28

சுவீடனை வீழ்த்திய இங்கிலாந்து அணி உலக கோப்பை கால்பந்து வரலாற்றில் 28 ஆண்டுகளுக்கு பின் அரையிறுதிக்கு முன்னேறியது. கடைசியாக 1990ல் அரையிறுதிக்கு முன்னேறியது.

* உலக கோப்பை தொடரில் 15வது முறையாக பங்கேற்கும் இங்கிலாந்து அணி, 3வது முறையாக அரையிறுதிக்குள் நுழைந்தது. இதற்கு முன் 1966 (சாம்பியன்), 1990 (4வது இடம்) அரையிறுதிக்கு முன்னேறியது.

2

சுவீடனுக்கு எதிராக இங்கிலாந்தின் டெலி அலி (22 வயது) ஒரு கோல் அடித்தார். இதன்மூலம் உலக கோப்பை கால்பந்து அரங்கில் குறைந்த வயதில் கோலடித்த இங்கிலாந்து வீரர்கள் பட்டியலில் 2வது இடம் பிடித்தார். முதலிடத்தில் மைக்கேல் ஓவன் (18 ஆண்டு, 190 நாள், எதிர்: ருமேனியா, 1998) உள்ளார்.

Advertisement
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login

forgot password? Enter yourpassword
(Press Ctrl+g or click this to toggle between English and Tamil)
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
விடிய விடிய கொண்டாடிய பிரான்ஸ்

விடிய விடிய கொண்டாடிய பிரான்ஸ்

ஜூலை 16,2018 பாரிஸ்: உலக கோப்பை வென்ற பிரான்ஸ் அணிக்கு பல தரப்பில் இருந்தும் பாராட்டுகள் குவிகின்றன. நேற்றிரவு பாரிஸ் சென்ற வீரர்கள் திறந்த பஸ் மூலம் ஊர்வலமாக அழைத்து வரப்பட்டு, ...
அர்ஜென்டினா பயிற்சியாளர் விலகல்

அர்ஜென்டினா பயிற்சியாளர் விலகல்

ஜூலை 16,2018 மாஸ்கோ: அர்ஜென்டினா கால்பந்து பயிற்சியாளர் பதவியில் இருந்து சாம்பாவோலி விலகினார். அர்ஜென்டினா அணி 1993ல் கோபா அமெரிக்க தொடரில் கோப்பை வென்றது. இதன் பின் பெரிய ...
‘கோல்டன் பால்’ யாருக்கு

‘கோல்டன் பால்’ யாருக்கு

ஜூலை 16,2018 இந்த சீசனில் தொடர் நாயகன் விருதை குரோஷிய கேப்டன் மாட்ரிச் கைப்பற்றினார். இதனையடுத்து இவருக்கு சிறந்த வீரருக்கான 'கோல்டன் பால்' விருது வழங்கப்பட்டது. ஹாரி கேன் ...