Dinamalar

வரலாறு மாறும்: ராகிடிச் நம்பிக்கை ,  
 

வரலாறு மாறும்: ராகிடிச் நம்பிக்கை

சோச்சி: ''உலக கோப்பை கால்பந்து தொடரில் இம்முறை குரோஷிய அணி பைனலுக்கு முன்னேறி புதிய வரலாறு படைக்கும்,'' என, இவான் ராகிடிச் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

ரஷ்யாவில், உலக கோப்பை கால்பந்து தொடர் நடக்கிறது. சமீபத்தில் சோச்சி நகரில் நடந்த காலிறுதியில் குரோஷிய அணி 4-3 என, 'பெனால்டி ஷூட் அவுட்' முறையில் ரஷ்யாவை வீழ்த்தியது. இப்போட்டியில், 'பெனால்டி ஷூட் அவுட்' கடைசி வாய்ப்பில் கோலடித்த இவான் ராகிடிச், குரோஷிய அணியை அரையிறுதிக்கு அழைத்துச் சென்றார். மாஸ்கோ நகரில் நாளை நடக்கவுள்ள அரையிறுதியில் குரோஷியா, இங்கிலாந்து அணிகள் மோதுகின்றன.

மாறுமா வரலாறு: கடந்த 1998ல் முதன்முறையாக அரையிறுதிக்கு முன்னேறிய குரோஷிய அணி, பிரான்சிடம் தோல்வியடைந்து பைனல் வாய்ப்பை இழந்தது. பின், 3வது இடத்துக்கான போட்டியில் நெதர்லாந்தை வீழ்த்தியது. இதுபோல இம்முறை நிகழாது என குரோஷிய வீரர் ராகிடிச் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து ராகிடிச் கூறுகையில், ''ரஷ்யாவுக்கு எதிரான காலிறுதி போட்டிக்கு சிறப்பான முறையில் தயாராகி இருந்தோம். இதனால் தான் 'பெனால்டி ஷூட் அவுட்' முறையில் சாதிக்க முடிந்தது. இதேபோல அரையிறுதியில் செயல்பட்டால் நிச்சயம் பைனலுக்கு முன்னேறலாம். இருபது ஆண்டுகளுக்கு முன், உலக கோப்பை அரையிறுதியில் எங்கள் குரோஷிய அணி தோல்வியடைந்தது. இதுபோல இம்முறை நிகழாது என நம்புகிறேன். ஏனெனில் அப்போது விளையாடிய வீரர்கள் சிலர் எங்களது ஹீரோக்களாக உள்ளனர்,'' என்றார்.

Advertisement
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login

forgot password? Enter yourpassword
(Press Ctrl+g or click this to toggle between English and Tamil)
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
கவலை இல்லை: நெய்மர் உறுதி

கவலை இல்லை: நெய்மர் உறுதி

ஜூலை 04,2018 சமரா: ''என்னைப்பற்றிய விமர்சனங்கள், பாராட்டுக்கள் குறித்து ஒருபோதும் கவலைப்பட மாட்டேன்,'' பிரேசில் வீரர் நெய்மர் தெரிவித்தார். பிரேசில் நட்சத்திர வீரர் ...
ரஷ்ய பெண்களுக்கு எச்சரிக்கை

ரஷ்ய பெண்களுக்கு எச்சரிக்கை

ஜூன் 15,2018 மாஸ்கோ: ''உலக கோப்பை தொடரைக் காண வரும் வேறு நாட்டு ரசிகர்களுடன் படுக்கையை பகிர்ந்து கொள்ளக் கூடாது,'' என ரஷ்யாவின் மூத்த எம்.பி., டமாரா, 70, எச்சரிக்கை ...
கால்பந்து படுத்தும் பாடு: நிலத்தை விற்ற வங்கதேச ரசிகர்

கால்பந்து படுத்தும் பாடு: நிலத்தை விற்ற வங்கதேச ரசிகர்

ஜூன் 15,2018 தாகா: ஜெர்மனி அணிக்காக தனது நிலத்தை விற்றுள்ளார் வங்கதேச கால்பந்து ரசிகர். வங்கதேசத்தின் மகுரா கிராமத்தை சேர்ந்தவர் அம்ஜத். ஜெர்மனி கால்பந்து அணியின் தீவிர ரசிகர். ...