Dinamalar

மிரோஸ்லவ் குளோஸ் அபாரம் ,  
 

மிரோஸ்லவ் குளோஸ் அபாரம்

உலக கோப்பை அரங்கில் அதிக கோல் அடித்த வீரர்கள் வரிசையில் ஜெர்மனியின் மிரோஸ்லவ் குளோஸ் முதலிடத்தில் உள்ளார். கடந்த நான்கு (2002, 2006, 2010, 2014) உலக கோப்பை தொடரில் பங்கேற்ற இவர், மொத்தம் 16 கோல் (24 போட்டி) அடித்துள்ளார். இவரை அடுத்து பிரேசிலின் ரொனால்டோ (15 கோல், 19 போட்டி, 1998-2002-2006), ஜெர்மனியின் ஜெர்டு முல்லர் (14 கோல், 13 போட்டி, 1970-1974), பிரான்சின் ஜஸ்ட் பான்டைன் (13 கோல், 6 போட்டி, 1958), பிரேசிலின் பீலே (12 கோல், 14 போட்டி, 1958-1962-1966-1970), ஹங்கேரியின் சான்டோர் கோக்சிஸ் (11 கோல், 5 போட்டி, 1954), ஜெர்மனியின் ஜர்ஜன் கிளின்ஸ்மன் (11 கோல், 17 போட்டி, 1990-1994-1998) உள்ளனர்.

'ஹாட்ரிக்' கோல்

உலக கோப்பை கால்பந்தில், ஒரு போட்டியில், ஒரு வீரர் மூன்று முறை கோல் அடித்தால், அது 'ஹாட்ரிக்' கோலாக கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும். கடந்த 20 உலக கோப்பை தொடர்களில் இதுவரை 50 முறை இச்சாதனை நிகழ்த்தப்பட்டுள்ளன.

* முதன்முறையாக 1930ல் உருகுவேயில் நடந்த உலக கோப்பை தொடரில் அமெரிக்காவின் பெர்ட் படேனாட், பராகுவே அணிக்கு எதிராக 'ஹாட்ரிக்' கோல் அடித்தார்.

* கடைசியாக, 2014ல் பிரேசிலில் நடந்த உலக கோப்பை தொடரில் ஹோண்டுராஸ் அணிக்கு எதிராக சுவிட்சர்லாந்தின் ஷகிரி 'ஹாட்ரிக்' சாதனை படைத்தார்.

* கடந்த 2006ல் ஜெர்மனியில் நடந்த உலக கோப்பை தொடரில் ஒரு 'ஹாட்ரிக்' கோல் கூட பதிவாகவில்லை.

* கடந்த 1954ல் சுவிட்சர்லாந்தின் நடந்து உலக கோப்பை தொடரில் அதிகபட்சமாக 8 'ஹாட்ரிக்' கோல் அடிக்கப்பட்டன.

* ஜெர்மனி சார்பில் அதிகபட்சமாக 7 முறை 'ஹாட்ரிக்' கோல் அடிக்கப்பட்டது. அர்ஜென்டினா, ஹங்கேரி அணிகள் தலா 4 முறை இச்சாதனை படைத்தன.

* ஹங்கேரியின் சாண்டர் பீட்டர் கோசிஸ் (1954), பிரான்சின் ஜஸ்ட் பான்டைன் (1958), ஜெர்மனியின் ஜெர்டு முல்லர் (1970), அர்ஜென்டினாவின் காப்ரியல் பாடிஸ்டுடா (1994, 98) ஆகியோர் தலா 2 முறை 'ஹாட்ரிக்' சாதனை படைத்தனர்.

* இளம் வயதில் 'ஹாட்ரிக்' கோல் அடித்த வீரர் என்ற பெருமையை பிரேசிலின் பீலே (17 வயது, 244 நாட்கள்) பெற்றார்.

* கடந்த 1966ல் மேற்கு ஜெர்மனிக்கு எதிராக 'ஹாட்ரிக்' கோலடித்த இங்கிலாந்தின் ஜெப் ஹர்ஸ்ட், உலக கோப்பை பைனலில் இச்சாதனை படைத்த ஒரே வீரரானார்.

பிரேசில் பிரமாதம்

உலக கோப்பை அரங்கில் 5 முறை சாம்பியன் பட்டம் வென்றுள்ள பிரேசில் அணி, இதுவரை நடந்த அனைத்து உலக கோப்பை தொடரிலும் பங்கேற்ற அணி என்ற பெருமை பெற்றுள்ளது. தவிர உலக கோப்பை வரலாற்றில் அதிக வெற்றி பெற்ற அணி பிரேசில் தான். இதுவரை 104 போட்டிகளில், 70 வெற்றி, 17 'டிரா', 17 தோல்வியை பெற்றுள்ளது. இருப்பினும், 'நடப்பு சாம்பியன்' ஜெர்மனி அணி (106 போட்டி, 224 கோல்), உலக கோப்பை அரங்கில் அதிக கோல் மற்றும் அதிக போட்டிகளில் பங்கேற்ற அணி என்ற சாதனையை தன்வசம் வைத்துள்ளது.

சிறந்த வெற்றி

உலக கோப்பை கால்பந்து வரலாற்றில், ஹங்கேரி, யுகோஸ்லேவியா அணிகள் அதிக கோல் வித்தியாசத்தில் சிறந்த வெற்றியை பதிவு செய்துள்ளன. இவ்விரு அணிகள் தலா 9 கோல் வித்தியாசத்தின் வென்றன. கடந்த 1982ல் நடந்த போட்டியில் ஹங்கேரி அணி 10-1 என்ற கோல் கணக்கில் எல் சால்டோர் அணியை வென்றது. கடந்த 1974ல் நடந்த போட்டியில் யுகோஸ்லேவியா (9-0, எதிர்: ஜெய்ரே), 1954ல் ஹங்கேரி (9-0, எதிர்: தென் கொரியா) அணிகள் தலா 9 கோல் வித்தியாசத்தில் வெற்றி பெற்றன.

வரலாற்று கோல்கள்

இதுவரை நடந்துள்ள 20 உலக கோப்பை தொடரில் மொத்தம் 2,379 கோல்கள் அடிக்கப்பட்டுள்ளன.

* கடந்த 1930ல் நடந்த முதல் உலக கோப்பை தொடரில் பிரான்சின் லாரன்ட் (எதிர்: மெக்சிகோ) முதல் கோல் அடித்தார்.

* கடந்த 1934ல் சுவீடனின் கெல்லர் (எதிர்: கியூபா), 100வது அடித்தார்.

* கடந்த 1958ல் ஸ்காட்லாந்தின் கோலின்ஸ் (எதிர்: பராகுவே) 500வது கோல் அடித்தார்.

* கடந்த 1978ல் ஹாலந்தின் ரென்சன்பிரின்க் (எதிர்: ஸ்காட்லாந்து), 1000வது கோல் பதிவு செய்தார்.

* கடந்த 1994ல் அர்ஜென்டினாவின் கனிஜியா (எதிர்: நைஜீரியா), 1500வது கோல் அடித்தார்.

* கடந்த 2006ல் சுவீடனின் மார்கஸ் ஆல்பேக் (எதிர்: இங்கிலாந்து), 2000வது கோல் அடித்தார்.

5 கோல்

உலக கோப்பை வரலாற்றில், ஒரு போட்டியில் அதிக கோல் அடித்த வீரர் என்ற பெருமையை ரஷ்யாவின் சாலன்கோ பெற்றுள்ளார். இவர், 1994ல் காமரூன் அணிக்கு எதிரான போட்டியில் 5 கோல் அடித்தார்.

* மெக்சிகோவின் ஆன்டோனியோ கார்பஜல் (1950, 54, 58, 62, 66), ஜெர்மனியின் லோதர் மத்தாயஸ் (1982, 86, 90, 94, 98), இத்தாலியின் பபோன் (1998, 2002, 2006, 2010, 2014) ஆகியோர் தலா 5 உலக கோப்பை தொடர்களில் பங்கேற்றுள்ளனர்.

இளமை...முதுமை

கடந்த 1982ல் யுகோஸ்லாவியா அணிக்கு எதிராக விளையாடிய வடக்கு அயர்லாந்தின் நார்மன் ஒயிட்சைடு (17 ஆண்டு, ஒரு மாதம், 10 நாள்) இளம் வயதில் உலக கோப்பையில் விளையாடிய வீரர் என்ற பெருமை பெற்றார்.

* கடந்த 2014ல் ஜப்பானுக்கு எதிராக களமிறங்கிய கொலம்பியாவின் பரித் மாண்டிராகன் (43 ஆண்டு, 3 நாள்), அதிக வயதில் உலக கோப்பையில் விளையாடிய வீரரானார்.

Advertisement
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login

forgot password? Enter yourpassword
(Press Ctrl+g or click this to toggle between English and Tamil)
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
பிரேசில் அணி ஆதிக்கம்

பிரேசில் அணி ஆதிக்கம்

ஜூன் 15,2018 உலக கோப்பை கால்பந்து தொடரில் பிரேசில், இத்தாலி, ஜெர்மனி, அர்ஜென்டினா, உருகுவே, பிரான்ஸ், இங்கிலாந்து, ஸ்பெயின் என, 7 அணிகள் மட்டுமே சாம்பியன் பட்டம் வென்றுள்ளன. இதில் ...
உலக நாயகன் குளோஸ்

உலக நாயகன் குளோஸ்

ஜூன் 15,2018 ஜெர்மனி அணியின் சிறந்த முன்கள வீரர் மிராஸ்லாவ் குளோஸ், 40. கடந்த 2001ல் சர்வதேச கால்பந்து அரங்கில் அறிமுகமான இவர் ஜெர்மனிக்காக அதிக கோல்(137 போட்டி, 71 கோல்) அடித்தவர்கள் ...
வில்லா விஸ்வரூபம்

வில்லா விஸ்வரூபம்

ஜூன் 15,2018 ஸ்பெயின் கால்பந்து அணியின் முன்னணி வீரர் டேவிட் வில்லா, 36. இவருக்கு இளம் வயதிலேயே சோதனை காத்திருந்தது. இவரது நான்காவது வயதில், வலது கால் தொடை எலும்பில் முறிவு ...