
மும்பை : மகாராஷ்டிராவில் இலாகா பங்கீடு விஷயத்தில், காங்., - தேசியவாத காங்கிரஸ் இடையே சுமுகமான முடிவு ஏற்படாததால், புதிய அரசு பதவியேற்பதில் நெருக்கடி நிலவுகிறது. காங்கிரஸ் தலைமையிலான அரசு அமைவதற்கு வெளியில் இருந்து ஆதரவு அளிக்கப் போவதாக சரத் பவாரின் தேசியவாத காங்கிரஸ் மிரட்டல் விடுத்துள்ளது.
மகாராஷ்டிராவில் நடந்து முடிந்த சட்டசபைத் தேர்தலில் காங்., - தேசியவாத காங்., கூட்டணி பெரும்பான்மை இடங்களில் வெற்றி பெற்றது. இருந்தாலும், அமைச்சரவையில் முக்கிய இலாகாக்களை பகிர்ந்து கொள்வதில் இரு கட்சிகளுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. மின்சாரம், உள்துறை, நிதி போன்ற முக்கிய இலாகாக்கள் கடந்த முறை தேசியவாத காங்., வசம் இருந்தன. இந்த முறை இவற்றில் சிலவற்றை தங்கள் வசம் வைத்திருக்க வேண்டும் என, காங்கிரஸ் விரும்புகிறது. ஆனால், தேசியவாத காங்., இந்த விஷயத்தில் பிடிவாதமாக உள்ளது. மேலும், அமைச்சரவையில் யாருக்கு அதிக இலாகாக்கள் என்பதிலும், இந்த இருகட்சிகளுக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. தேர்தல் முடிவுகள் வெளியாகி 12 நாட்கள் கடந்த நிலையிலும், புதிய அரசு அமைவதில் தொடர்ந்து இழுபறி நீடித்து வருகிறது. இந்நிலையில், இடைக் கால முதல்வராக உள்ள காங்கிரசின் அசோக் சவானையும், இடைக்கால துணை முதல்வராக உள்ள தேசியவாத காங்கிரசின் சாஜன் புஜ்பாலையும், மகாராஷ்டிர கவர்னர் ஜமீர், நேற்று தனித்தனியாக அழைத்து, அரசு அமைப்பது குறித்து ஆலோசனை நடத்தினார்.
வெளியில் இருந்து ஆதரவு: கவர்னரைச் சந்தித்த பின், சாஜன் புஜ்பால் செய்தியாளர்களிடம் கூறியதாவது: இலாகாக்கள் ஒதுக்குவது குறித்த பிரச்னை, ஓரிரு நாட்களில் முடிவுக்கு வரும் என்று எதிர்பார்த்தோம். தேர்தல் முடிவு வெளியான அக்.,22ல் இருந்து எவ்வித முடிவும் எட்டப்படவில்லை. புதிய ஆட்சி விரைவில் பதவியேற்க வேண்டும் என்பது தான் மக்களின் விருப்பம். புதிய ஆட்சி அமைவதற்கான நடவடிக்கைகளில் காங்கிரஸ் தலைவர்கள் ஈடுபட வேண்டும். அவர்கள் ஆட்சி அமைப்பதற்கான ஆதரவை நாங்கள் வெளியிலிருந்து தரத் தயாராக உள்ளோம். ஆனால், இலாகாக்கள் ஒதுக்கீடு பிரச்னையில் சுமுகமான தீர்வு எட்டப்பட்டவுடன் தான், நாங்கள் அமைச்சரவையில் பங்கேற்போம். அதுவரை வெளியில் இருந்து தான் ஆதரவு அளிப்போம். ஆட்சி அமைப்பதற்கான கடிதத்தை அவர்கள், கவர்னரிடம் கொடுப்பர். அதைத் தொடர்ந்து, ஆதரவு அளிப்பதற்கான கடிதத்தை நாங்கள் கொடுப்போம். கடந்த 10 ஆண்டுகளாக காங்., - தேசியவாத காங்., கூட்டணி எப்படி தொடர்ந்ததோ, இனிமேலும் அப்படியே தொடர வேண்டும் என்பது தான் எங்கள் விருப்பம். காங்கிரஸ் கட்சியிடம் நாங்கள் அதிகபட்சமாக எதுவும் எதிர்பார்க்கவில்லை என்றார். தேசியவாத காங்கிரஸ் கட்சியின் இந்த திடீர் மிரட்டலால், மகாராஷ்டிராவில் புதிய அரசு அமைப்பதில் காங்கிரசுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
எந்த நேரத்திலும் பதவியேற்கலாம்: மகாராஷ்டிராவில் தற்போதைய சட்டசபையின் பதவிக் காலம் நேற்றுடன் முடிவடைந்து விட்டதால், புதிய அரசு விரைவில் பதவியேற்க வேண்டிய சட்ட சிக்கல் ஏற்பட்டுள்ளது. இந்த பிரச்னையை தவிர்க்கும் வகையில், அசோக் சவான் மட்டும் எந்த நேரத்திலும் முதல்வராக பதவியேற்கலாம் என, டில்லி அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதன் காரணமாகவே, நேற்று அசோக் சவான் மற்றும் சாஜன் புஜ்பால் ஆகியோரை கவர்னர் சந்தித்து ஆலோசனை நடத்தியதாக கூறப்படுகிறது. இதற்கிடையே, தன்னை சந்திக்க வந்த அசோக் சவான் மற்றும் புஜ்பால் ஆகிய இருவரிடமுமே அம்மாநில கவர்னர் ஜமீர், "புதிய அமைச்சரவை பதவியேற்பு விழாவுக்கு வருவீர்கள் என்று நம்பி, ராஜ்பவனில் ஒரு லட்சம் ரூபாய் வரை செலவு செய்து பிரம்மாண்ட பந்தல் போட்டு வைத்து உள்ளேன். ஆனால், யாருமே சீக்கிரமாக வரமறுக்கிறீர்கள். பந்தல் போட்ட கணக்கில் ஒரு நாளைக்கு ஒரு லட்ச ரூபாய் செலவாகிறது. அந்த வகையில் மொத்தம் ஆறு நாட்களாக பந்தல் வெறுமனே இருந்து வருகிறது. ஆறு லட்ச ரூபாய் செலவாகியுள்ளது' என்று நகைச்சுவையாக குறிப்பிட்டதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
| வாசகர் கருத்து |
Mr. Pawar, what will happen if Soniaji says you may extend support from outside for the Central Govt too.? Limit your greediness.
|
by a arasan,chennai,India 11/4/2009 3:34:37 PM IST |
ஷரத் பவாரைப் பற்றி மிக நன்றாக அறிந்தவர்கள் மிகச்சிலரே. அன்று முதல் இன்று வரை அவருக்கு பிரதமர் பதவி மேல் ஒரு கண் உண்டு. ஆனால் காலை வாரியே முன்னுக்கு வந்தவர்கள் காங்கிரஸில் அதிகம். இந்த தேர்தலிலும் பவாரை காங்கிரஸ் காலை வாரியது நிஜம். அந்த கடுப்பிலிருந்து அவர் இன்னும் மீளவில்லை. காங்கிரஸ் செய்வதும் ஒரு வழியில் நம்பிக்கை துரோகம்தான்.
|
by K V சிவராமன் IYER,Mumbai,India 11/4/2009 1:56:23 PM IST |
திரு.பவார் அவர்களே !! காயை நகர்த்துங்கள்......... ராஜா/அமிரிக்கா
|
by T.K ராஜா குமார் ,parma,United States 11/4/2009 12:14:48 PM IST |
காங்கிரஸின் தொலைநோக்கு பார்வை என்பது தற்போது அரசியல் ஆதாயங்களில் மட்டுமே; மக்கள் நலனில் இல்லை. ஓட்டு போட்டவர்கள் ஏமாளிகள்; ஆட்சி அமைக்க முட்டுக்கட்டை போடுபவர்கள் அறிவாளிகள். காங்கிரசுக்கு சரியான மற்றும் வலுவான எதிர் கட்சி உருவாகாமல் இருப்பது மிகவும் துரதிர்ஷ்டம்.
|
by M பிரகதீஸ்வரன் ,Ahmedabad,India 11/4/2009 11:43:00 AM IST |
Where is Raghul gandhi ????
|
by D மணிகண்டன் ,Tamilnadu ,India 11/4/2009 9:09:49 AM IST |
காங்கிரஸ் இதே போக்கில் போனால் தமிழ்நாடு ஆந்திரா மாகராஸ்டிரா என ஒன்று ஒன்றாக இழந்து கடைசியில் ஆண்டியாகிவிடுவார்கள்
|
by P ரவி சந்திரன் ,Vienna Austria,Austria 11/4/2009 1:05:37 AM IST |