
மும்பை : கர்நாடகாவில் ஆளும் கட்சியில் ஏற்பட்டுள்ள குழப்பம் நீடிப்பதாலும், மகாராஷ்டிராவில் புதிய அரசு அமைப்பதில் இழுபறி தொடர்வதாலும், அம்மாநில கவர்னர்கள் எரிச்சல் அடைந்துள்ளனர். "விரைவில் பிரச்னையை முடிவுக்கு கொண்டு வந்து மக்கள் பணியாற்றுங்கள்; இல்லையெனில், நிலைமையை வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க மாட்டோம்' என்றும் மிரட்டல் விடுத்துள்ளனர்.
மகாராஷ்டிராவில் சமீபத்தில் நடந்த சட்டசபைத் தேர்தலில், காங்கிரஸ் - தேசியவாத காங்கிரஸ் கூட்டணி வெற்றி பெற்றது. ஆனால், அமைச்சரவையில் முக்கிய இலாகாக்களை பங்கிட்டுக் கொள்வதில் இரு கட்சிகள் இடையே இழுபறி நீடிப்பதால், இன்னும் ஆட்சி அமைக்கவில்லை. சட்டசபையின் பதவிக் காலம் முடிந்த நிலையில், புதிய சட்டசபை இன்னும் அமையாதது, பல தரப்பினரையும் கவலை அடையச் செய்துள்ளது. மகாராஷ்டிராவில் 24 மணி நேரத்தில் புதிய அரசு அமையாவிட்டால், ஜனாதிபதி ஆட்சிக்கு பரிந்துரை செய்யும்படி, சிவசேனா தலைவர்களில் ஒருவரான சுபாஷ் தேசாய் தலைமையிலான குழுவினர், கவர்னரை சந்தித்து கோரிக்கை விடுத்துள்ளனர்.
இது குறித்து மகாராஷ்டிரா கவர்னர் எஸ்.சி.ஜமீர் குறிப்பிடுகையில், ""புதிய ஆட்சி அமையப்போவதை பார்க்க ஆவலாக இருக்கிறேன். மக்களின் தீர்ப்பை மதித்து மேலும் காலம் தாழ்த்தாமல், தேர்தலில் வெற்றி பெற்ற கட்சியினர் புதிய அரசு அமைக்க வேண்டும்,'' என்றார். இதேபோல், கர்நாடக மாநிலத்தில் ஆளும் பா.ஜ., கட்சியில் ஏற்பட்டுள்ள குழப்பம் முடிவுக்கு வராமல் தொடர்ந்து நீடிப்பதால், அரசு நிர்வாகம் ஸ்தம்பித்துள்ளது. இதனால், அம்மாநில கவர்னரும் எரிச்சல் அடைந்துள்ளார். கர்நாடகா பா.ஜ.,வில் ஏற்பட்டுள்ள குழப்பம் குறித்து மாநில கவர்னர் பரத்வாஜிடம் செய்தியாளர்கள் நேற்று கேட்டனர்.
அவர் கூறியதாவது: நிலைமையை கூர்ந்து கவனித்து வருகிறேன். தேவையான நேரத்தில் சரியான நடவடிக்கை எடுக்கப்படும். பிரச்னைக்கு விரைவில் முடிவு ஏற்பட்டால் நன்றாக இருக்கும். ஏனென்றால், வெள்ள நிவாரணப் பணிகளை மேற்கொள்ள வேண்டியுள்ளது. இது போன்ற சூழ்நிலையில் கவர்னராக இருப்பவர் எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாது. இதுபற்றி கருத்து கூறுவதும் சரியாக இருக்காது. இந்த பிரச்னைக்காக நான் கவலைப்படுகிறேனா என, கேள்வி கேட்கப்படுகிறது. நான் கவலைப்படுவதற்கான அவசியம் இல்லை. பா.ஜ., தான் கவலைப்பட வேண்டும் என்று பரத்வாஜ் கூறினார்.
இதற்கிடையில், நேற்று மும்பையில் நிருபர்களைச் சந்தித்த மகாராஷ்டிர முதல்வர் அசோக் சவான் கூறியதாவது: அடுத்த 48 மணி நேரத்தில் நாங்கள் புதிய அரசு அமைப்போம். எங்களுக்குள் சண்டை எதுவும் இல்லை; கருத்து வேறுபாடுகளும் இல்லை. கவர்னரின் கருத்தை நாங்கள் மதிக்கிறோம். தற்போதும் அரசு உள்ளது; செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. நானும் தொடர்ச்சியாக கூட்டங்களை நடத்தி வருகிறேன். அனைத்து பிரச்னைகளும் நாளை (இன்று) மாலைக்குள் தீர்க்கப்பட்டு விடும். இவ்வாறு சவான் கூறினார்.
அதே நேரத்தில், தேசியவாத காங்கிரஸ் மூத்த தலைவர் பிரபுல் படேல் பெங்களூருவில் நிருபர்களிடம் கூறுகையில், ""மகாராஷ்டிராவில் இலாகா பங்கீடு தொடர்பான விஷயத்தில் காங்கிரசுக்கும், தேசியவாத காங்கிரசுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது உண்மை தான். இதனால், புதிய அரசு பதவியேற்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இந்த பிரச்னைக்கு இன்னும் ஓரிரு நாட்களில் சுமுகமான தீர்வு ஏற்படும். புதிய அரசு விரைவில் பதவியேற்கும்,'' என்றார்.
| வாசகர் கருத்து |
கர்நாடகாவில் பி.ஜே.பி கட்சிக்குள்ளே சண்டை நடக்குது .இதுலே மகாராஷ்ட்ராவில் சிவேசென கூட சண்டை இல்லாமல் பி.ஜே.பி ஆட்சியே அமைக்கும் (ஜெயித்து இருந்தால் ) .என்ன ஒரு தமாசு ..முதலில் தன வீட்டை சுத்த படுத்தி விட்டு தெருவை சுத்த படுத்த வாருங்கள்.
|
by s rahuman,chennai,India 11/5/2009 10:32:08 PM IST |
கவர்னர்களுக்கு, ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை பதவி பிரமாணம் செய்து வைப்பது தான் வேலை. அந்த உரிமையும் தாமதபட்டால் அவர்கள் எரிச்சல் ஆகாமல் என்ன செய்வார்கள் .
|
by krishnan,chennai,India 11/5/2009 7:56:10 PM IST |
இது ஜனநாயகம் எவ்வளவு சீரழிந்துள்ளது வருகிறது என்று கட்டுகிறது.... இது மாற நாம் பாடுபட வேண்டும்....
|
by போஸ் மதன் ,Cennai,India 11/5/2009 5:26:53 PM IST |
காங்கிரஸ் எப்பொழுதுமேஇப்படித்தான் நடந்துகொள்ளும்,இதுக்கெல்லாம் முன்னுதாரணங்கள் நெரிய கடக்குது தெரயுமா உக்கும்,அவர்கள் கெஞ்சினால் மிஞ்சுவார்கள்! மிஞ்சினால் கெஞ்சுவார்கள்! மத்தியில் கூட்டு,குருமா,சாப்ஸ் எல்லாம் இக்கும்,மகாராஷ்ட்ராவில் மட்டும்! மக்களை மதிக்காத மண்ணாங்கட்டி.........
|
by k kaanthi,sabarmathi,India 11/5/2009 4:52:55 PM IST |
i have a nice day thank you
|
by a mohammedrafi,dubai ,United Arab Emirates 11/5/2009 3:09:42 PM IST |
நம்மை இளிச்சவாயர்கள் என்று இவர்கள் நிரூபித்து விட்டார்கள். காங்கிரஸ் என்றைக்கேனும் தான் ஆளும் மாநிலத்தில் ராஷ்ட்ரபதி ஆட்சியை கொண்டு வந்துள்ளதா? ஊழல், அதிகார துஷ்பரயோகம் இவற்றிற்கு நோபெல் பரிசு கொடுக்கலாம் என்றால் அதற்கு காங்கிரஸ் கட்சிக்குதான் முதல இடம். இவர்கள் இந்த நாட்டையே முட்டாள்களின் நாடாக ஆக்கிவிட்டார்கள்.
|
by KV சிவராமன் IYER,Mumbai,India 11/5/2009 12:03:19 PM IST |
இது காங்கிரஸ் க்கு ஒட்டு போட்ட மக்களுக்கு ஒரு நல்ல பாடம் . பேசாம பாரதிய ஜனதா மற்றும் சிவசேனா கூட்டணி க்கு போட்டிருந்தால் இந்த மாதிரி நடந்திருக்குமா ?. மகாராஷ்டிரா மக்களுக்கு இதுவும் வேணும் இன்னமும் வேணும் . அப்போதான் அடுத்த முறை ஆவது கரெக்ட் ஆ ஒட்டு போடுவாங்க .நன்றி
|
by E KUMAR ,tirupur,India 11/5/2009 11:46:54 AM IST |
காங்கிரஸ் க்கு நல்ல ஒரு எதிர்க்கட்சி இல்லை என்பது தெளிவாகிவிட்டது.. மக்கள் சிந்தித்து இதுபோல காலங்களில் ஆட்சியை மாத்தி அமைக்க வேண்டும். ராஜா/அமிரிக்கா
|
by T.K ராஜகுமார்,pharma..,United States 11/5/2009 10:01:03 AM IST |
அதாவது எங்களுக்கு கட்டிங் குடுத்துட்டு சண்ட போடுங்க என்று சொல்கிறார்கள்
|
by n கோணவாயன்,us,United States 11/5/2009 4:53:17 AM IST |