No.1 Tamil Newspaper Front Page News and Headlines Online - Dinamalar
இதை எனது முதல் பக்கமாக்கு
Get Font | Sitemap |   RSS Feed
முதல் பக்க செய்திகள் 
திருமங்கலம் தொகுதி யாருக்கு? : பிரசாரம் இன்று மாலை 5 மணியுடன் ஓய்ந்தது
ஜனவரி 07,2009,00:00  IST

Front page news and headlines today

திருமங்கலம் : மதுரை மாவட்டம் திருமங்கலம் தொகுதி இடைத்தேர்தல் பிரசாரம் இன்று மாலை 5 மணியுடன் ஓய்ந்தது. தி.மு.க., சார்பில் பிரசாரம் செய்து வந்த அமைச்சர் ஸ்டாலின் மற்றும் மு.க. அழகிரி ஆகியோர் மாலை 3.30 மணிக்கு தங்கள் பிரசாரத்தை திருமங்கலத்தில் முடித்தனர். அ.தி.மு.க., அணி சார்பில் இறுதிகட்ட பிரசாரத்தில் ஈடுபட்ட வைகோ தனது பிரசாரத்தை மாலை 4.47 மணிக்கும், தே.மு.தி.க., வேட்பாளரை ஆதரித்து பிரசாரம் செய்த விஜயகாந்த் மற்றும் அவரது மனைவி பிரேம லதா ஆகியோர் மாலை 4.55 மணிக்கும் திருமங்கலம் நகரில் தங்கள் பிரசாரத்தை முடித்துக் கொண்டனர். சமத்துவ மக்கள் கட்சியின் வேட்பாளரை ஆதரித்து பிரசாரம் மேற்கொண்ட அக்கட்சியின் தலைவர் சரத்குமார் மாலை 5 மணிக்கு நிலையூரில் தனது பிரசாரத்தை முடித்தார்.



மகிழ்ச்சியில் மக்கள் திணறல்: "காஸ்ட்லி' தேர்தல்: வாக்காளர்களுக்கு இரு கட்சிகளும் போட்டி போட்டு பணத்தை வாரி இறைத்ததால் மக்களின் கைகளில் பணப்புழக்கம் அமோகமாக இருந்தது. பலர், வேலைக்குக் கூட செல்லாமல் கிடைத்த பணத்தை குஷியாக செலவழித்தனர். தமிழகத்தில் இதுவரை நடந்ததிலேயே "காஸ்ட்லி' தேர்தலாகவும் இது அமைகிறது.பணம் "விளையாடிய' மகிழ்ச்சியில் மக்கள் திக்குமுக்காடி இருப்பதால் எந்தக் கட்சிக்கு ஓட்டளிப்பர் என்ற குழப்பம் அரசியல்வாதிகளுக்கு ஏற்பட்டுள்ளது. பணத்துடன் பல ஊர்களில் அல்வா, கேக் தரப்பட்டது. மிக்சி போன்ற பரிசுகளும் தரப்பட்டதால் குழப்பம் மேலும் அதிகரித்தது. அ.தி.மு.க.,வுக்கு சாதகமாக முன்பு இருந்த திருமங்கலம் இனிமேல் எப்படி இருக்கப் போகிறது என்ற கேள்வியும் எழுந்து விட்டது. இருகட்சிகளும் நன்றாகவே பிரசாரம் செய்தன. மக்கள் மீது காட்டிய "அன்பு' தங்களுக்கு ஓட்டுக்களை அள்ளித்தரும் என்று தி.மு.க., திட்டமிடுகிறது.



ஸ்டாலின், மு.க.அழகிரி : ஒரு கிலோ அரிசி ஒரு ரூபாய், இலவச "டிவி', இலவச நிலம், கூட்டுறவுக் கடன் தள்ளுபடி, பெண்கள் திருமண நிதி போன்ற திட்டங்களும் சாதகமாக இருக்கும் என்று தி.மு.க., கணக்கு போடுகிறது. முதல்வர் கருணாநிதி பொதுக்கூட்டத்தில் பேசினார். அமைச்சர் ஸ்டாலின், மு.க.அழகிரி தொகுதி முழுவதும் சுற்றிவந்து சாதனைகளை சொல்லி ஓட்டுக் கேட்டு வருகின்றனர். இக்காரணங்களால் வெற்றி வாய்ப்பு அதிகம் என்று தி.மு.க.,வினர் நினைக்கின்றனர். முன்பு கூட்டணியில் இருந்த கம்யூனிஸ்டுகள், இப்போது இல்லை என்றாலும் பெரிய அளவில் பாதிப்பு இருக்காது. தொகுதியில் பலம்பெறாத பா.ம.க., நடுநிலை வகிப்பதும் பாதிப்பை ஏற்படுத்தாது. அ.தி.மு.க.,வினரோ, மின் வெட்டு, விலைவாசி உயர்வு போன்ற பிரச்னைகளையே முன்னிறுத்தி பிரசாரம் செய்தனர்.



"தலைவலியே' இக்கட்சி தான். : இவையெல்லாம் தங்களுக்கு ஓட்டுக்களை பெற்றுத்தரும் என்று இக்கட்சியினர் நினைக்கின்றனர். அ.தி.மு.க., பொதுச் செயலர் ஜெயலலிதா, மூன்று நாட்கள் முகாமிட்டு தொகுதியின் மூலைமுடுக்கெல்லாம் சுற்றினார். பொதுக்கூட்டத்திலும் பேசினார். அதற்கு முன்னதாகவே, அ.தி.மு.க., நிர்வாகி போன்றே செயல்பட்டு பம்பரமாக சுழன்று பணி பார்த்தார் வைகோ. இவை வெற்றி வாய்ப்பை தரும் என்று அ.தி.மு.க., நினைக்கிறது.தேர்தல் "ஓட்டப் பந்தயத்தில்' இக்கட்சிகளுடன் சேர்ந்து தே.மு.தி.க.,வும் ஓடுகிறது. தி.மு.க.,வுக்கும், அ.தி.மு.க.,வுக்கும் "தலைவலியே' இக்கட்சி தான். இக்கட்சியினரால் வாக்காளர்களை "கவனிக்க' முடியாவிட்டாலும், நிறைய இளைஞர்கள் ஆர்வத்துடன் பிரசாரம் செய்தனர்.



விஜயகாந்த், அவரது மனைவி பிரேமலதா "இரட்டைக் குழல்' துப்பாக்கியாக தொகுதி முழுக்க தொடர்ந்து வலம் வந்தனர். இவர்கள் யார் ஓட்டுக்களை அள்ளுகின்றனர் என்பது விடை தெரியாத கேள்வி. சரத்குமாரும் தன் பங்கிற்கு ஓட்டுக்களை கவர்வார். வாக்காளர்கள் எல்லாவற்றையும் சிந்தித்து, "கூட்டிக் கழித்துப்' பார்த்து தான் ஓட்டளிக்கப் போகின்றனர். ஒவ்வொரு கட்சியும் போடும் கணக்கு சரியாக வருமா என்பதை "திருவாளர் திருமங்கலம்' தீர்மானிப்பார்.



                                                               -நமது நிருபர் குழு-

நகல் எடுக்க         |    எழுத்தின் அளவு: Decrease font Enlarge font   |  More Picture
  மின்னஞ்சல்  |   RSS  |  Bookmark and Share


வாசகர் கருத்து
 I am expecting Vijayakanth should win if our people thinks that we are tired of beliving AIDMK and DMK.but definetly change required in tamil nadu. 
by J Nanthekumar,United States    1/7/2009 11:21:32 PM IST
 dmdk won d TirumaNgalam sure TN in future  
by g guna,India    1/7/2009 10:51:41 PM IST
 All politician have some link with Fraud, If rest of DMK will win, the people of Thirumangalam not getting any benefit from the state Government, So people think about of their city and see the TN development now, its better compare to other state. I beleive DMK will win but in next election definetly Vijayakanth Party will get power to operate TN. 
by Ram Ramendran,India    1/7/2009 10:47:07 PM IST
 
I think either AIADMK or VIJAYAKANTH PARTY will take first two places to ALARM the DMK Party to concentrate on their admin. session now on to face the forthcoming parliament election.

MAGDOUM
 
by M.S. MAGDOUM ALI,Saudi Arabia    1/7/2009 10:43:30 PM IST
 ALL VOTERS GOTO VOTE AND
IT IS OUR RIGHTS

JANUARY 9 2008

MOST IMPORTANT DAY IN OUR THIRUMANGALAM 
by s sekar,India    1/7/2009 10:34:32 PM IST
 All publics very well known about the ruling party(DMK) activities. Never forget the local body election in chennai. With power and money definetely DMK will win with huge margin. Incase the bi-election will go without proxy, the chances will be goes to AIADMK  
by s suresh,India    1/7/2009 9:45:31 PM IST
 If the public don't have short time memory loss (If they remember how J.J spoiled the T.Nadu), I am sure they will vote for D.M.K or Vijayakanth.

Tks

VJ 
by T Vijay,Nigeria    1/7/2009 9:40:19 PM IST
 ADMK has spent equally for the election,  
by e sundararaj,India    1/7/2009 4:47:18 PM IST
 thirumangalam peoples 'll vote to vijaikanth,and my best wishes to win mr.vijaikanth's party leader 
by souri souria,France    1/7/2009 4:08:50 PM IST
 கள்ள ஓட்டு - முறைகேடு இவை இல்லாமல் தேர்தல் நியாயமான முறையில் ந்டக்க வேண்டும்.
அப்படி நடந்தால் அ.தி.மு.க.வுக்கு வாய்ப்புள்ளது..... 
by R Shanker,India    1/7/2009 3:43:07 PM IST
 dmk will win election in thirumangalam.because of money power,fraud.i think dmk win max 10,000 votes difference.

Admk second place.dmdk third place.
so we will wait and see.remaining peoples deposit will lose.dmdk get get above 22,000 thousends vote. 
by A Manikandan,India    1/7/2009 3:23:56 PM IST
 This by election, DMK will win because they have power, money, etc. etc., If the election will be done geneunely ADMK will win. Otherwise DMK only win. Vijayakanth and Sarath Kumar cannot get even deposit also. This is sure. 
by R Govind,India    1/7/2009 3:18:05 PM IST
 According to my perception , DMK will win . Vijayakanth will be number 2 and Admk will be the third .  
by S Sharmila,India    1/7/2009 3:16:52 PM IST
 GIVE CHANCE TO WIN A NEW PARTY. SPECILLY FOR VIJAYAKANTH. MUST BE CHANGES REQD. 
by R SUDHAKAR,United Arab Emirates    1/7/2009 3:13:25 PM IST
 Amma only can Win 
by R Muthu,United Arab Emirates    1/7/2009 3:04:39 PM IST
 Good wishes for MR. VIJAYAKANTH, Tamil nadu needs NEW WIPER to remove all the dust in the politics  
by a abdul kader ,United Arab Emirates    1/7/2009 2:59:14 PM IST
 Whoever wins it should be a tamilian.  
by K Sukumaran,India    1/7/2009 2:57:53 PM IST
 There will be stiff competition between DMK and AIADMK. Others may take away their own percentage. Victory will be in the narrow percentage difference. DMK has advantageous of few achievements and people may expect some changes. People are very clever. They choose the rulers alternatively.  
by p thiruvel,Bahrain    1/7/2009 1:33:26 PM IST
 Hereafter there is no WIN for DMK and ADMK. Winning will be only owned by the FirePower DMDK. 
by P Sekar,India    1/7/2009 1:16:52 PM IST
 Thirumangalam only win for Sarthkumar - Akila india samathuvaa makkal katchi 
by T Antony Muthu,India    1/7/2009 1:13:44 PM IST
 AIADMK will win Thirumangalam sure. Suppose DMK wins in thirumangallam extra powert cut, Extra Bus Fare, Extra illegal activities, extra. Extra. Extra.. Extra.. 
by M Velumani,India    1/7/2009 12:59:35 PM IST
 இந்த தேர்தலின் முடிவு பாராளுமன்ற தேர்தலிலும் எதிரொலிக்கும் என்று எல்லா கட்சிகளும் நிணைப்பது தவறு. தேர்தலின் முடிவுகள் அவ்வப்போது அடிக்கும் அலைகளின் நிலையை பொறுத்ததுதான் என்பது பல முந்திய தேர்தல்களில் நிரூபிக்க பட்டுள்ளன. எனவே பாராளுமன்ற தேர்தலுக்கு முன்பாக என்ன அலை அடிக்க போகிறது என்பதை நாம் பொறுத்திருந்து பார்ப்போம்.  
by I IndiaTamilan,Kuwait    1/7/2009 10:53:37 AM IST
 
VERY GOOD DEVELOPMENT IN TAMILNADU POLITICS.

THEY ISSUED HALWA(ALWA) BEFORE ELECTION RESULT.


 
by g gobu,Saudi Arabia    1/7/2009 10:51:56 AM IST
 I wish Vijayakanth party should win 
by S swamymugam,India    1/7/2009 10:37:13 AM IST
 I hope Mr.VIJAYA KANTH's party THEY.MU.TI.KA Will win this TIRUMANGALAM Election. If the party win good for tamil nadu, or otherwise if any other MONEY value party wins... the same like before we have to BEG,... from the government.
If the TIRUMANGALAM Peoples are BRILLIANT.. They will VOTE to THY.MU.TI.KA.
Dear Mr.TIRUMANGALAM, Avoid the correpted party. select the new party.. to creat the new TAMILAGAM...Avoid the correpted RATS. 
by M MANSUR ALI,Malaysia    1/7/2009 10:36:51 AM IST
 ADMK will win this election, if there is no DMK money and influence politics. 
by M Hakkim,United Arab Emirates    1/7/2009 10:36:35 AM IST
 therumangalam only win for admk ......... 
by jeyar jeyaraj,India    1/7/2009 10:34:57 AM IST
 This election result will impact on forth coming election(parli).Also this is prestige issue for DMK.coz of that reason they played with money on TMM byelection. Eventhough finaly affected by people only.They won't bother about their social welfare. My intention is apart from Tiravidar partys one more party will come and change this situation.ok let see what'll happen.  
by PM Ramkumar,India    1/7/2009 10:34:07 AM IST
 AIADMK will win with majority of minimum 20,000  
by n Ibraguime,United Arab Emirates    1/7/2009 10:19:39 AM IST
 கள்ள ஓட்டு - முறைகேடு இவை இல்லாமல் தேர்தல் நியாயமான முறையில் ந்டக்க வேண்டும்.
அப்படி நடந்தால் அ.தி.மு.க.வுக்கு வாய்ப்புள்ளது.
பொறுத்திருந்து பார்ப்போம்.... 
by RC Palaniappan,India    1/7/2009 10:10:20 AM IST
 AIADMK gonna win this election 
by R Dinesh,India    1/7/2009 9:57:11 AM IST
  No , Thirimangalam only for AIADMK 
by A BALA,India    1/7/2009 9:49:10 AM IST
 அண்ணன் விஜயகாந்த் வெற்றிபெற வாழ்த்துக்கள்!! 
by S Tamil Virumbi,India    1/7/2009 9:32:38 AM IST
 sure not for ADMK. 
by Mr alaudin,India    1/7/2009 9:26:01 AM IST
 Who will will this by-election ??? It is not a million dollar question. The ruling party with all its currency, ruling power and anti-social elements' might, will run over this election. People lost their good sense and became slaves to different forms of bribary like gift, free meals, temporary assistance etc., etc. This has become culture of our nation. Let us contemplate and criticize ourselves for all these maladies. 
by X xiao dai,China    1/7/2009 6:43:07 AM IST
 
I am pretty sure that Vijaykanth will be promoted to second position in this by-election. DMK might win this election due to money power.

Finally, this election result will do good to the DMDK party.
 
by N Tamilan,India    1/7/2009 2:39:42 AM IST
Post Your Comments for the Article

 

Your Name  :
Initial : Name :
Your Email Id :
Your city (or) location  :  
Your country  :  
Your Comment:
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)


மேலும் முதல் பக்க செய்திகள்
» தினமலர் முதல் பக்கம்
  இ-பேப்பர்