No.1 Tamil Newspaper Front Page News and Headlines Online - Dinamalar
இதை எனது முதல் பக்கமாக்கு
Get Font | Sitemap |   RSS Feed
முதல் பக்க செய்திகள் 
10,00,000 வது வார்த்தையாகுமா 'ஜெய் ஹோ?' : இன்றிரவு அறிவிப்பு
ஜூன் 10,2009,00:00  IST

Front page news and headlines today

புதுடில்லி: ஆங்கில வார்த்தைகள் 10 லட்சத்தை தொடப்போகின்றன. பத்து லட்சமாவது வார்த்தைக்கு கடும் போட்டாபோட்டி நிலவுகிறது. இதில் ஒன்று, ஆஸ்கர் விருதை பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு பெற்றுத்தந்த "ஜெய் ஹோ' என்ற வார்த்தை.





ஆங்கில வார்த்தைகளை அங்கீகரித்து, புழக்கத்தில் விடும் பொறுப்பு, அமெரிக்காவில் உள்ள டெக்சாஸ் மாநிலத்தில் உள்ள "குளோபல் லேங்குவேஜ் மானிட்டர்' என்ற அமைப்பிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. பல்வேறு நாட்டு நிபுணர்கள் இதில் உள்ளனர். பல்வேறு நாடுகளில் வெளியாகும் புத்தகங்கள், பாடல்கள், கவிதைகள், இன்டர்நெட், ப்ளாக்குகள் போன்றவற்றில் வெளியாகும் புதுப்புது வார்த்தைகளை இந்த அமைப்பில் உள்ள நிபுணர்கள் ஆராய்ந்து அங்கீகரிப்பர்.





இந்த வகையில், ஆங்கில வார்த்தைகள் 10 லட்சத்தை தொடத்தயாராகி விட்டது. இன்று பத்து லட்சமாவது வார்த்தையை தேர்வு செய்ய நிபுணர் குழு கூடுகிறது. பத்து லட்சமாவது வார்த்தையாக இடம்பெறும் போட்டியில் மொத்தம் 73 வார்த்தைகள் சேர்ந்துள்ளன. பல்வேறு நாடுகளில் இருந்து, இந்த வார்த்தைகள் அனுப்பப் பட்டுள்ளன. இதில், இந்தியாவில் இருந்தும் சில வார்த்தைகள் அனுப்பப்பட்டுள்ளன. பெண் கள் அணியும் உள்ளாடை "கட்டீஸ்' என்று சொல்லப்படுகிறது. இந்த வார்த்தையும் தேர்வுக்கு பரிசீலனை செய்யப்படுகிறது.





ஆஸ்கர் விருதுகளை குவித்த "ஸ்லம்டாக் மில்லினர்' படத்தின் பெயர் மற்றும் அதில் இடம் பெறும் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்த "ஜெய் ஹோ' என்ற பாடலில் அந்த வார்த்தையும், பத்து லட்சமாவது வார்த்தை ஆகும் போட்டியில் இடம்பெறுகின்றன. அமெரிக்காவில், டெக்சாஸ் நகரில் இந்திய நேரப்படி இன்றிரவு 8.50க்கு (உள்ளூர் நேரம் காலை 10.20)பத்து லட்சமாவது ஆங்கில வார்த்தை அறிவிக்கப்படுகிறது.





ஆஸ்கர் விருது பெற்றதும், இந்தியா மட்டுமின்றி, உலகம் முழுவதும் "ஜெய் ஹோ' என்ற பாடல் பிரபலமானது. "ஜெய் ஹோ' என்றால் என்ன என்று வெப்சைட்களில் பல லட்சம் பேர் தேடினர்.  பல பத்திரிக்கைள், புத்தகங்கள், படங்கள் என்று கோடிக் கணக்கில் இந்த வார்த்தை பயன்படுத்தப்பட்டது. இப்படி பல கோடி பேரிடை யே பிரபலமான ஒரு வார்த்தை, வழக்கமாக கவுரப்படுத்தப்படுவதுண்டு; அங்கீகரிக்கப்பட்ட ஆங்கில வார்த்தையாக அறிவிக்கப்படுவதுண்டு. ஆங்கிலத்துக்கு சம்பந்தமில்லாத வார்த்தையாக இருந்தாலும், வேற்று மொழி வார்த்தைகள், ஆங்கிலத்தில் இடம்பெறுவதுண்டு. பிரெஞ்சு உட்பட பல்வேறு நாடுகளின் மொழி வார்த்தைகளும் ஆங்கிலத்தில் சேர்க்கப்பட்டுள்ளன. அந்த வகையில், "ஜெய் ஹோ' பத்து லட்சமாவது வார்த்தையாகும் என்ற எதிர்பார்ப்பு அதிகமாகி உள்ளது.

நகல் எடுக்க         |    எழுத்தின் அளவு: Decrease font Enlarge font   | 
  மின்னஞ்சல்  |   RSS  |  Bookmark and Share


வாசகர் கருத்து
 10,00,000 English word: Web 2.0

Its quite unacceptable (the comment regarding USA and standards). Just think,

Why cant other countries didn''t improvise the market with their standards, like india''s agmark. USA can do that so they are on top.

They are doing quality check because, they want to know are you maintaining their standards. For example, a car making company just make one car test and leave all the other cars without testing. Does it good...?

Think and react.....  
by vel dinesh,singapore,Singapore    10-06-2009 15:55:09 IST
 it very proud to india 
by k rajesh,choolai,India    10-06-2009 15:33:27 IST
 Hi manivannan start learning Tamil that''s when you will know what we have and what is not there in tamil.  
by L Manoj,Madurai,India    10-06-2009 14:44:02 IST
 அமெரிக்கா யாருங்க நம்ம நாட்டு மொழிக்கு சான்றிதழ் கொடுக்கிறதுக்கு? ISO ,YOGA, ADO, கணினி பொருட்கள், அணுசக்தி, ரசாயனம், புதிய கண்டுபிடிப்புக்கான பதிவு, முத்திரை பதிவு( TRADE MARK), COPY RIGHT இப்படி இன்னும் நெறைய இதுபோல சான்றிதழ், உரிமம் எல்லாமே அவங்க நாட்டிலுள்ள கம்பனிகள் தான் நிர்னையகிறாங்க.உட்கார்ந்த இடத்திலே சம்பாதிக்கிறதுனு சொல்லுவாங்கல அது அமெரிக்காவுக்கு தான் பொருந்தும். ஏதோ இரண்டாம் உலக போரில் முக்கிய பங்குவகிசாங்கனுன்றதுக்காக ஐ.நா.ல இருந்து ISO வரைக்கும் எல்லாத்தையும் அவங்களே வைச்சுகிட்டு அவங்க சொல்றதைதான் எல்லா நாடும் கேட்கனும்னு நெனைப்பு அவங்களுக்கு. உதாரணமாக: எங்க கம்பனிக்கு ISO 14000; 2001 கொடுத்தாங்க.ஏனா, நாங்கள் அமெரிக்காவோட வர்த்தகம் வைச்சிருக்கிறதால அமெரிக்காவுக்கு அந்நிய செலவாணி கிடைக்கிறது.இதுனால ஈசியா கிடைச்சது. இதே அருகில் உள்ள இன்னொரு கம்பெனி சீனா மற்றும் ஜப்பானுடன் வர்த்தகம் பண்றாங்க.அவங்களுக்கு அவ்ளோ ஈசியா கிடைக்கல. அது போக அடிக்கடி ஏகப்பட்ட இடைஞ்சல்கள்வேற Quality checking ன்ற பெயரில். அதாவது எந்த நாட்டோட அவங்களுக்கு ஆதாயம் கிடைக்குதோ அந்த நாடு அவங்களுக்கு நல்ல பிள்ளை..இல்லைனா கேட்ட பிள்ளை...இதுதான் அமெரிக்காவோட வெளிநாட்டு கொள்கை...அதுனால '' Jaiho'' வரலைனாகூட யாரும் வருத்தப்பட வேண்டாம்.  
by Mr. rajan,abudhabi,United Arab Emirates    10-06-2009 12:58:32 IST
 Ramadoss will not accept that :-)  
by R Ganesh,Chennai,India    10-06-2009 09:49:44 IST
 It is good to see the English language is increasing its word strength, Similarly Tamil Language should accept such new words from other well spoken languages all over the world, Will our tamil language '' arvalargal'' consider and accept If the word falls within Tamil ''Ilakkanam''? 
by V MANIVANNAN,malasiya,India    10-06-2009 08:38:07 IST
Post Your Comments for the Article

 

Your Name  :
Initial : Name :
Your Email Id :
Your city (or) location  :  
Your country  :  
Your Comment:
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)


மேலும் முதல் பக்க செய்திகள்
» தினமலர் முதல் பக்கம்
  இ-பேப்பர்