No.1 Tamil Newspaper Front Page News and Headlines Online - Dinamalar
இதை எனது முதல் பக்கமாக்கு
Get Font | Sitemap |   RSS Feed
முதல் பக்க செய்திகள் 
வெயில் உக்கிரத்தால் 'பீர்' கிடைக்காமல் கிராக்கி: வெளிமாநிலங்களில் இருந்து இறக்குமதி
ஜூன் 15,2009,00:00  IST

Front page news and headlines today

வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளதால், தமிழகத்தில் பீர் பாட்டில்களுக்கு கடும் கிராக்கி ஏற்பட்டுள்ளது. பீர் பற்றாக்குறையைச் சமாளிக்க, வெளிமாநிலங்களிலிருந்து தொடர்ந்து இரண்டாம் ஆண்டாக பீர் பாட்டில்களை இறக்குமதி செய்ய "டாஸ்மாக்' நிர்வாகம் முடிவு செய்துள்ளது.



நாட்டின் மொத்த பீர் விற்பனையில், தென்னிந்தியாவின் பீர் விற்பனை மட்டும் 50 சதவீதம். பீர் விற்பனை மற்றும் வரிகள் மூலம் அதிக வருவாய் ஈட்டும் மாநிலங்களில் பஞ்சாப், ஆந்திராவுக்கு அடுத்த இடத்தில் தமிழகம் உள்ளது. தமிழகத்தில் மார்ச், ஏப்ரல், மே மாதங்களில் கோடை வெயிலின் தாக்கம் கடுமையாக இருப்பதால், இந்தச் சமயங்களில் மதுப் பிரியர்கள் பீர் குடிப்பதையே அதிகம் விரும்புகின்றனர். எனவே, "டாஸ்மாக்' கடைகளில் பீர் விற்பனை அதிகமாக இருக்கும். இந்த ஆண்டு ஏப்ரல், மே மாதங்களில் 44 லட்சத்து 65 ஆயிரத்து 920 கேஸ் பீர் விற்பனையானது; ஒரு கேசில் 12 பாட்டில்கள் இருக்கும்.



மே மாதத்தில் மட்டும் 25 லட்சத்து 23 ஆயிரத்து 205 கேஸ் பீர் விற்பனை செய்யப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டில் 21 லட்சத்து 71 ஆயிரத்து 680 கேசாக இருந்தது. மே மாதத்தில் மட்டும் இந்தாண்டு, பீர் விற்பனை 14 சதவீதம் உயர்ந்துள்ளது. கடந்த ஆண்டு ஏப்ரல் முதல் தற்போது மே மாதம் முடிய ஒரு கோடியே 70 லட்சம் பாட்டில் பீர் விற்பனையாகியுள்ளது. இது, 2007-08ம் ஆண்டைக் காட்டிலும் 23 சதவீத வளர்ச்சி. பீர் பாட்டில்கள் 650 மி.லி., - 375 மி.லி., என இரண்டு வகைகளில் விற்பனையாகின்றன. "மினி பீர்' எனப்படும் 375 மி.லி., பாட்டில்கள் கடைகளில் கிடைப்பதே இல்லை. பெரிய பாட்டில்களை அதிகம் பேர் விரும்பி வாங்குவதால், தேவைக்கு ஏற்ப நிறுவனங்களால் "சப்ளை' செய்ய முடியவில்லை. தற்போது மது தயாரிக்கும் ஒன்பது நிறுவனங்களில், மூன்று நிறுவனங்கள் மட்டுமே பீர் தயாரிப்பில் ஈடுபட்டுள்ளன. மேலும், இரண்டு நிறுவனங்கள் பீர் தயாரிப்புக்கு விண்ணப்பித்துள்ளன.



ஆனால், இந்தக் கம்பெனிகள் தயாரித்து அளிக்கும் பீர் பாட்டில்கள் மதுப் பிரியர்களின் தேவையைப் பூர்த்தி செய்யும் அளவில் இல்லை. கடந்த ஆண்டு பீர் பற்றாக்குறையைச் சரிகட்ட, புதிய பீர் ரகங்கள் அறிமுகப்படுத்தப்பட்டன. வெளிநாட்டு நிறுவனங்களுடன் இதற்காக ஒப்பந்தம் போடப்பட்டது. இதனால், புதுப்புது பீர் வகைகள் விற்பனைக்கு வந்தன.



இதுபற்றி டாஸ்மாக் அதிகாரி ஒருவர் கூறும்போது, "தற்போதைய பற்றாக்குறையைச் சமாளிக்க வெளிமாநிலங்களைச் சேர்ந்த நிறுவனங்களுக்கு, மூன்று லட்சம் பீர் பாட்டில்கள் ஆர்டர் கொடுக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு முதன்முறையாக ஆந்திரா, கேரளா, கர்நாடகா, புதுச்சேரியில் இருந்து பீர் இறக்குமதி செய்யப்பட்டது. இந்த ஆண்டு தொடர்ந்து இரண்டாவது முறையாக வெளிமாநிலங்களிலிருந்து பீர் இறக்குமதி செய்யப்படுகிறது' என்றார்.



கூடுதல் விலை: இவ்வாறு பீர் விற்பனை அதிகமாகி, பற்றாக்குறை நிலவுவதால், சில டாஸ்மாக் கடைகளில், ஒரு பீர் பாட்டிலுக்கு எம்.ஆர்.பி., விலையை விட, இரண்டு முதல் 10 ரூபாய் வரை அதிக விலை வைத்து விற்பனை செய்யப்படுகிறது. பெரும்பாலான டாஸ்மாக் கடைகளில் பீர் வகைகளைக் குளிரூட்ட பெட்டிகள் இல்லை. அப்படியே இருந்தாலும், அவை சரியாக இயங்குவதில்லை. இதைக் காரணம் காட்டி, வெளியிலிருந்து ஐஸ் கட்டிகள் வாங்கி வைப்பதாகக் கூறி, கூடுதல் விலைக்கு விற்கின்றனர்.



பீர் தயாரிக்கும் நிறுவனங்களே, டாஸ்மாக் கடைகளுக்கு குளிரூட்டும் பெட்டிகளை வழங்க வேண்டும் என்றும், அதற்காக, அவர்கள் தங்களது நிறுவன பிராண்டுகளை கடைகளில் விளம்பரம் செய்து கொள்ளலாம் என்றும் அறிவித்தால், இப்பிரச்னைக்கு எளிதில் முடிவு கிடைத்து விடும். ஆனால், வருமானத்தை மட்டுமே கருத்தில் கொண்டுள்ள டாஸ்மாக் நிறுவனத்திற்கு, இம்மாதிரியான விஷயங்களைச் சிந்திக்க நேரம் இல்லை என்று கூறப்படுகிறது.



-நமது சிறப்பு நிருபர்-

நகல் எடுக்க         |    எழுத்தின் அளவு: Decrease font Enlarge font   | 
  மின்னஞ்சல்  |   RSS  |  Bookmark and Share


வாசகர் கருத்து
 One must be ashamed to drink alcohol. Govt should have controlled this but instead they are encouraging it..  
by BR GaneshBabu,Chennai,India    16-06-2009 07:59:38 IST
 It is really surprising to see the TN govt is importing Beer from neighbouring states.Is it so essential for people.
When people are struggling for water,power etc TN govt concerns for Beer is condembale. It shows how much our people have deterioated in their living styles.
It is not fair, since most of consumption is only by rich people.
Also all the breweries are owned by politicians. People please make a note of this. 
by K Ramachandran,Phildelphia,United States    15-06-2009 23:11:32 IST
 Why this govt running this TASMAC due to good profit/control the price? as per my understanding Govt is a non profitable organization to serve people. and to do that all of us paying direct tax and indirect tax. who is the right person in govt to question not to do business rather than serving people. 
by SRM Bun,chennai,India    15-06-2009 21:51:16 IST
 This shows that the top most Fools are in Tamil Nadu only, especially, we beleive that the beer consumers are mostly in average, so called, literate people and living in cities, it''s ashame, however these idiots need any reason to drink..... 
by G. Venki,shj,United Arab Emirates    15-06-2009 16:40:07 IST
 One of the many worst mistakes people do is drinking beer during summer. Beer doesn''t cools down the body, it actually dehydrates. Any drink that has alcohol in it will heat up the body, eventually the throat will begin to beg for more water or a drink.

 
by KSP Senthil Prabhu,Chicago,India    15-06-2009 16:21:52 IST
 குப்பன் அவர்கள் கருத்து மிகவும் அருமை!!!!! 
by M Imran,Manama,Bahrain    15-06-2009 14:14:19 IST
 open more tasmac shops so that people remain poor for ever!!what a pity!
natarajan 
by gk natarajan,chennai,India    15-06-2009 10:33:46 IST
 தமிழகத்தில் ''பீர்'' விற்பனை அதிகரித்து அண்டை மாநிலங்களிலிருந்து வரவழைக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது மாநிலத்தின் வளர்ச்சியை காட்டுகிறது. அறிவில் சிறந்திருந்த தமிழர்கள் இன்று ''பீர்''குடிப்பதில் உய்ர்ந்து நிற்பது பெருமையாக இருக்கிறது. இது போல் விஸ்கி, பிராந்தி, ரம், ஜின், வைன், வோட்கா என்று அனைத்து வகையிலும் அதிகம் குடித்து இந்தியாவின் சிறந்த ''குடி''மக்கள் ஆகி உலகத் தமிழர்கள் அனைவரும் பெருமை கொள்ளும் வகையில் வாழவேண்டும் என வாழ்த்துகிறேன். தமிழ்நாட்டில் இன்னும அதிக இடங்களில் ''தமிழன் என்று சொல்லடா ! தலை நிமிர்ந்து (தள்ளாடாமல்) நில்லடா ! போர்டு எழுதி வைக்க வேண்டும். LET US BE THANKFUL FOR THE FOOLS. BUT FOR THEM THE REST OF US COULD NOT SUCCEED. 
by K Kuppan,Singapore,Singapore    15-06-2009 07:45:56 IST
 I pitty for poor toddy tapping farmers, because they have a great oppurtunity in Tamil Nadu but the same is refused by the State Government. CM of our state must be generous enough to share the profits with the poor farmers.

by A. Mahadevan, India. 
by A Mahadevan,Chennai,India    15-06-2009 05:46:11 IST
Post Your Comments for the Article

 

Your Name  :
Initial : Name :
Your Email Id :
Your city (or) location  :  
Your country  :  
Your Comment:
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)


மேலும் முதல் பக்க செய்திகள்
» தினமலர் முதல் பக்கம்
  இ-பேப்பர்