No.1 Tamil Newspaper Front Page News and Headlines Online - Dinamalar
இதை எனது முதல் பக்கமாக்கு
Get Font | Sitemap |   RSS Feed
முதல் பக்க செய்திகள் 
இன பிரச்னைக்கு பீர் மூலம் தீர்வு கண்ட ஒபாமா
ஆகஸ்ட் 01,2009,00:00  IST

Front page news and headlines today

வாஷிங்டன் : அமெரிக்க போலீஸ் அதிகாரிக்கும், கருப்பின பேராசிரியருக்கும் ஏற்பட்ட இன மோதலை, அதிபர் ஒபாமா, பீர் பார்ட்டி கொடுத்து பிரச்னையை சுமுகமாக தீர்த்து வைத்துள்ளார். அமெரிக்காவின் கேம்ப்ரிட்ஜ் அருகே கடந்த 16ம் தேதி ஒரு வீட்டில் கொள்ளை முயற்சி நடந்துள்ளது.



இது தொடர்பாக, ஹார்வர்டு பல்கலை கழக சட்டத்துறை பேராசிரியர் ஹென்ரி கேட்டிடம் போலீசார் விசாரணை நடத்த சென்றனர். ஆனால், அதிபர் ஒபாமாவின் நண்பரான ஹென்ரி கேட், போலீசாருடன் ஒத்துழைக்காமல் அவர்களை கண்டபடி திட்டியுள்ளார். இதனால், கோபமடைந்த போலீஸ் அதிகாரி ஜேம்ஸ் க்ரோலே, ஹென்ரி கேட்டை கைது செய்து, 4 மணி நேரம் போலீஸ் காவலில் வைத்தார். வெள்ளையரான போலீஸ் அதிகாரி க்ரோலே, கருப்பின பேராசிரியர் ஹென்ரியிடம் முரட்டுத் தனமாக நடந்து கொண்டதற்கு அதிபர் ஒபாமா கண்டனம் தெரிவித்திருந்தார்.



இந்த விவகாரத்தால் போலீஸ் சங்கத்தின் சார்பில் ஒபாமாவுக்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டது. இந்த பிரச்னை இனப்பிரச்னையாக மாறுவதை உணர்ந்த ஒபாமா, சம்பந்தப்பட்ட போலீஸ் அதிகாரி க்ரோலேவையும், பேராசிரியர் ஹென்ரியையும் வெள்ளை மாளிகைக்கு அழைத்து பீர் விருந்து கொடுத்து, சிரித்து பேசி அவர்களை ஒரு வழியாக சமாதானம் செய்து பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைத்து விட்டார்.



இதுகுறித்து, ஒபாமா குறிப்பிடுகையில், எல்லாருக்கும் கோபம் ஏற்படுவது சகஜம் தான். இதற்காக முகத்தை சுளித்து கொண்டு ஒதுங்கி போவதில் பலனில்லை. நாம் கோபப்பட்ட நபரிடமும் நியாயமான கருத்து இருக்கலாம். அதையும் நாம் பார்க்க வேண்டும். நான் அவசரப்பட்டு போலீஸ் அதிகாரி மீது தவறான வார்த்தையை உபயோகித்து விட்டேன். தற்போது க்ரோலேவுக்கும், ஹென்ரிக்கும் இடையே எந்த பிரச்னையும் இருக்காது என நம்புகிறேன்' என்றார். இதற்கிடையே, ஹென்ரி மீதான வழக்கும் வாபஸ் பெறப்பட்டு விட்டது. க்ரோலேவுக்கும், ஹென்ரிக்கும் ஏற்பாடு செய்த பீர் விருந்து 40 நிமிடம் நடந்தது. துணை அதிபர் ஜோ பிடனும் கலந்து கொண்டார். "இந்த சம்பவத்திலிருந்து நாம் சில பாடங்களை கற்றுக்கொண்டோம். பிரச்னை சுமுகமாக தீர்க்கப்பட்டு விட்டது' என்றார் ஜோ பிடன்.

நகல் எடுக்க         |    எழுத்தின் அளவு: Decrease font Enlarge font   | 
  மின்னஞ்சல்  |   RSS  |  Bookmark and Share


வாசகர் கருத்து
 MR. OBAMA IS ONE OF THE GREATEST MAN. HE NEVER THINK HIS PRESTEAGE. HE SOLVED THE PROBLEMS VERY SOOMTH WAY.

JUST THINK ABOUT OUR POLITICAL LEADER LIKE JJ AMMA??? 
by S.S ISMAIL SAUDI ARABIA,Dammam. ,Saudi Arabia    01-08-2009 23:59:51 IST
 that''s why Mr.Obama that position 
by P KPK,Bang,India    01-08-2009 12:30:54 IST
 BEER OR JUICE ..., The Problem should be solved...Obama a very good Leader., 
by N SENTHIL KUMAR,KARUR,India    01-08-2009 11:53:19 IST
 People who speak loudly about Prohibition have to make a note of it. After 1971, whenever we implemented prohibition, it was giving way for illicit liquors. Whenever we lifted prohibition and allowed liquors, we still hold the sales counters in the hands of government and sell only limited cheap brands that fetch more margin to XYZ.  
by R SUKUMAR,India,India    01-08-2009 10:54:30 IST
 GREAT OBAMA, GREAT.

Adolf George Bush vs Kindness Obama. 
by j arul,chennai,India    01-08-2009 10:47:25 IST
Post Your Comments for the Article

 

Your Name  :
Initial : Name :
Your Email Id :
Your city (or) location  :  
Your country  :  
Your Comment:
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)


மேலும் முதல் பக்க செய்திகள்
» தினமலர் முதல் பக்கம்
  இ-பேப்பர்