சென்னை : இலங்கைக்கு சென்றுள்ள தமிழக எம்.பி.,க்கள் குழு, யாழ்ப்பாணம் மற்றும் வவுனியா பகுதிகளுக்குச் சென்றது. அங்குள்ள தமிழர்களின் நிலை குறித்து ஆராய்ந்தது. ""தமிழர்களை விரைவில் அவர்களது சொந்த இடங்களில் குடியமர்த்த வேண்டும். தமிழர் பிரச்னைக்கு விரைவில் அரசியல் தீர்வு காண வேண்டும்,'' என எம்.பி.,க்கள் குழு வலியுறுத்தியது.
இலங்கையில் முகாம் களில் தங்கவைக்கப் பட்டுள்ள தமிழர்களின் நிலையை நேரில் அறிந்து வர, ஐந்து நாள் பயணமாக தமிழக எம்.பி.,க்கள் குழு நேற்று முன்தினம் கொழும்பு சென்றது. தி.மு.க., பார்லிமென்ட் குழுத் தலைவர் டி.ஆர். பாலு தலைமையிலான இக்குழுவில், கனிமொழி, திருமாவளவன், சித்தன், சுதர்சன நாச்சியப்பன், ஏ.கே.எஸ்.விஜயன், ஆரூண், டி.கே.எஸ். இளங்கோவன், கே.எஸ்.அழகிரி, ஹெலன் டேவிட்சன் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். இலங்கை சென்ற இக்குழுவினரை, அந்நாட்டு அமைச்சர் ஆறுமுக தொண்டமான், மேல் மாகாண கவர்னர் மவுலானா, இந்தியாவுக்கான இலங்கை துணைத் தூதர் கிருஷ்ணமூர்த்தி, "சார்க்' அமைப்பின் அதிகாரி ரஞ்சித் அயன்காட் ஆகியோர் விமான நிலையத்தில் வரவேற்றனர்.
நேற்று முன்தினம் தமிழ் தேசிய கூட்டமைப்பு தலைவர்கள் இக்குழுவினரை சந்தித்துப் பேசினர். ஒன்றரை மணி நேரம் இந்த சந்திப்பு நடந்தது. அப்போது இந்த கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன், "தடுப்பு முகாம் களில் உள்ள தமிழர்களை மீண்டும் குடியமர்த்துவதில் இலங்கை அரசு உள்நோக்கத்துடன் தாமதப் படுத்துகிறது. அவர்களை 180 நாட்களில் மீண்டும் குடியமர்த்துவோம் எனக் கூறியதில், இன்னும் 50 நாட்களே மீதம் உள்ளன. இதுவரை 25 ஆயிரம் பேர் வரை தான் முகாம் களில் இருந்து அனுப்பப் பட்டுள்ளனர். குடியமர்த்துவதை துரிதப்படுத்த இந்திய அரசு அழுத்தங்களை கொடுக்க வேண்டும்' என வலியுறுத்தினார்.
பார்வை: கூட்டமைப்பின் சுரேஷ் பிரேமசந்திரன் எம்.பி., இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவுப் ஹக்கீம் ஆகியோரையும் தமிழக குழு சந்தித்துப் பேசியது. நேற்று யாழ்ப்பாணம் சென்ற இக்குழுவினர், யாழ்., பல்கலைக் கழகம் சென்றனர். அகதிகள் முகாம்களில் இருந்து விடுவிக்கப்பட்டு, வேலணையில் குடியேற் றப்பட்டுள்ள மக்களை சந்தித்துப் பேசினர். அப்போது அவர்கள், உணர்ச்சிகரமாக மீண்டும் தங்கள் சொந்த ஊர்களுக்கு விரைவில் திரும்ப வேண்டும் என்றனர். வடக்கு மாகாண கவர் னர் சந்திரஸ்ரீயையும், தமிழகக் குழுவினர் சந்தித்துப் பேசினர். நேற்று மாலை வவுனியா சென்ற இக்குழு வினர், மெனிக் பாம் முகாமை பார்வையிட்டனர்.
""முகாம்களில் உள்ள தமிழர்களை விரைவில் அவர்களது சொந்த இருப் பிடங்களில் குடியமர்த்த வேண்டும். இலங்கைத் தமிழர் பிரச்னைக்கு விரைவில் அரசியல் தீர்வு காண வேண்டும்,'' என தமிழக எம்.பி.,க்கள் குழு வலியுறுத்தியது. இன்று நவரெலியாவுக்கு செல்லும் இக்குழுவினருடன் அமைச்சர் தொண்டமான் தலைமையிலான குழுவினர் விவாதிக்கின்றனர். பெருந் தோட்டத்துறை மக்களை சந்திக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நாளை மற்றும் நாளை மறுதினம் இக்குழுவினர் கொழும்பில் தங்கியிருந்து, அரசியல் கட்சித் தலைவர்களை சந்தித்துப் பேசுகின்றனர். இலங்கை எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்கே, ஜனநாயக மக்கள் முன்னணித் தலைவர் மனோ கணேசன், இலங்கை சுதந்திரா கட்சி மக்கள் பிரிவுத் தலைவர் மங்கள சமரவீரா ஆகியோரையும் சந்தித்துப் பேசுகின்றனர். நாளை மறுதினம், இலங்கை அதிபர் மகிந்தா ராஜபக்ஷே, வெளியுறவுத் துறை அமைச்சர் ரோகித் ஆகியோரைச் சந்தித்துப் பேசிய பின், தமிழகம் திரும்புகின்றனர்.
இக்குழுவினர் ஏற்கனவே செல்ல திட்டமிட்டிருந்த சில முகாம்களுக் கான பயணம் திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக, கிழக்கு மாகாணத்துக்கான பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
| வாசகர் கருத்து |
dear politicions pls stop ur dramas, dont try to make us fools.
|
by a elangi,chennai,India 13-10-2009 16:14:13 IST |
The MP group visiting Srilanka is just ''''Humbac''''. After getting reports from our visiting MPs Our Central Govt will take no strong decision on it and our beloved TN leader also will do nothing for it but he will release one sorrowful KAVITHAI. That''s all.
|
by c Radha,chennai,India 12-10-2009 16:06:30 IST |
இந்த அப்பாவி மக்கள் முள்வெளிக்கு பின்னால் நிற்பதை பார்க்கும் போதே நெஞ்சம் பதறுகிறது. சுயநல அரசியல், வளர்த்து விட்ட தீவிரவாதம், அனுபவிக்கட்டும் என்னும் குரோத உணர்வு என்று எதுவாக இருந்தாலும் அத்தனை லட்சம் மக்கள் இப்படி ஆடு, மாடுகள் போல அடைபடத்தான் வேண்டுமா? பலத்த மழை பெய்யும் போது குடையோ, ஒதுங்க தோதான இடமோ இல்லாமல் அவதிப்படும் சில நிமிடங்களிலேயே சோர்ந்து போய் எப்போது வீடு சேர்வோம் என்றாகிவிடும் நம் மனநிலையில் இருந்து பார்த்தால் அவர்களின் வாழ்வு எவ்வளவு நிர்க்கதி என்று உரைக்கிறது. விடுதலை, சொந்த நாடு எல்லாம் கூட வேண்டாம் மானத்துடன் வாழக்கூடவா நம்மால் வழி செய்ய முடியாது? .விண்ணில் நீரை கண்டுபிடித்தும் , எண்ணில் பூஜ்ஜியமும் கண்டு பெருமிதம் கொண்டோமே, இங்கு மண்ணில் உயிர் துடிக்குதே அதை கண்டுகொள்ள முடியாதா நமக்கு ??..புரியவில்லை...
|
by D Devan ,Chennai,India 12-10-2009 15:43:23 IST |
செல்ல திட்டமிட்டிருந்த சில முகாம்களுக் கான பயணம் திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக, கிழக்கு மாகாணத்துக்கான பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளது
|
by s saravanakumar,chennai,India 12-10-2009 15:15:47 IST |
''''முகாம்களில் உள்ள தமிழர்களை விரைவில் அவர்களது சொந்த இருப்பிடங்களில் குடியமர்த்த வேண்டும். இலங்கைத் தமிழர் பிரச்னைக்கு விரைவில் அரசியல் தீர்வு காண வேண்டும்
|
by k saravanan,tiruvannamalai,India 12-10-2009 12:25:25 IST |
This M.P.''s visit to Srilanka is only for political drama. Tamil peoples are not going to believe them.
|
by SP Amaravathipudur Premnath,Milano,Italy 12-10-2009 11:39:47 IST |
HI MP’S WE ARE IN MODERN WORLD, WE CAN ABLE TO CONFIRM THE SITUATIONS WITH IN A HOUR DON’T SPENT AGAIN 50 YEARS FOR YOURS JUDGMENTS ,PLEASE DECIDE YOUR STANDS BEFORE NEXT ELECTION
|
by n murugan,coimbatore,India 12-10-2009 11:23:34 IST |
REPORTS ON THE CONDITION OF THE TAMILS IN SRILANKAN CAMPS IS NOT NARRATED IN DETAIL. WHY INDIA IS AFRAID OF SRILANKA, A SMALL SPECK OF A NATION COMPARED TO THE GEOGRAPHICAL DOMINANCE OF INDIA. A WHITE PAPER ON THE THEIR CONDITIONS & TREATMENT IS A MUST. IF NECESSARY INDIA NEEDS TO ATTACK SRILANKAN BASES/MILITARY ESTABLISHMENTS IN COLOMBO AND ASSERT ITS SUPREMACY. THE WAR IS OVER & WON BY SRILANKA. WAR CRIMES SHOULD STOP. REFUGEES NEED TO BE TREATED DECENTLY. PRESS GAG & SUSPENSE OVER THE WELFARE OF THIS UNFORTUNATE PEOPLE SHOW THAT HITLER''S CONCENTRATION CAMPS ARE MANY IN SRILANKA. A FEW SORTIES & DRONES WILL HELP SRILANKA COME TO THE NEGOTIATING TABLE.
|
by S.S. BRITTO,TIRUNELVELI,India 12-10-2009 10:16:28 IST |
This is just an eyewash.
|
by s raja,pune,India 12-10-2009 10:15:13 IST |
REPORTS ON THE CONDITION OF THE TAMILS IN SRILANKAN CAMPS IS NOT NARRATED IN DETAIL. WHY INDIA IS AFRAID OF SRILANKA, A SMALL SPECK OF A NATION COMPARED TO THE GEOGRAPHICAL DOMINANCE OF INDIA. A WHITE PAPER ON THE THEIR CONDITIONS & TREATMENT IS A MUST. IF NECESSARY INDIA NEEDS TO ATTACK SRILANKAN BASES/MILITARY ESTABLISHMENTS IN COLOMBO AND ASSERT ITS SUPREMACY. THE WAR IS OVER & WON BY SRILANKA. WAR CRIMES SHOULD STOP. REFUGEES NEED TO BE TREATED DECENTLY. PRESS GANG & SUSPENSE OVER THE WELFARE OF THIS UNFORTUNATE PEOPLE SHOW THAT HITLER''S CONCENTRATION CAMPS ARE MANY IN SRILANKA. A FEW SORTIES & DRONES WILL HELP SRILANKA COME TO THE NEGOTIATING TABLE.
|
by S.S. BRITTO,TIRUNELVELI,India 12-10-2009 09:51:12 IST |
முகாம்களில் உள்ள தமிழர்களை விரைவில் அவர்களது சொந்த இருப் பிடங்களில் குடியமர்த்த வேண்டும். இலங்கைத் தமிழர் பிரச்னைக்கு விரைவில் அரசியல் தீர்வு காண வேண்டும்,'''' என தமிழக எம்.பி.,க்கள் குழு வலியுறுத்தியது. இன்று நவரெலியாவுக்கு செல்லும் இக்குழுவினருடன் அமைச்சர் தொண்டமான் தலைமையிலான குழுவினர் விவாதிக்கின்றனர். பெருந் தோட்டத்துறை மக்களை சந்திக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இக்குழுவினர் ஏற்கனவே செல்ல திட்டமிட்டிருந்த சில முகாம்களுக் கான பயணம் திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக, கிழக்கு மாகாணத்துக்கான பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளது.WHY CANCEL THIS ARIEA ANYONE KNOWS PLEASE EXPLAIN MR MONMOHANSINGH
|
by MURUGIAH.M,Dubai uae,India 12-10-2009 09:17:21 IST |
hello realese my tamil family all?
|
by a.muthu,tamilnadu cuddalore,India 12-10-2009 08:04:30 IST |
yaal thuyaram closed now?
|
by k malaiselvam,ramanathapuram,India 12-10-2009 05:21:58 IST |