முதல் பக்க செய்திகள் 

மரபணு மாற்றம் செய்யப்பட்ட கத்தரிக்காய் வருமா? நாடு முழுவதும் பெரும் எதிர்ப்பு
அக்டோபர் 20,2009,00:00  IST

Front page news and headlines today

புதுடில்லி : மரபணு மாற்றம் செய்யப்பட்ட, "பி.டி' கத்தரிக்காய்க்கு உயிர் தொழில் நுட்பவியல் ஒழுங்குமுறை அமைப்பு ஒப்புதல் அளித்துள்ளது. பல்வேறு தரப்பில் இந்த கத்தரிக்காய்க்கு எதிர்ப்பு தெரிவிக்கப் படுவதால் இந்த கத்தரிக்காய் சந்தைக்கு வருமா என்பது கேள்வி குறியாக உள்ளது.கோவை வேளாண் பல்கலைக் கழகமும், அமெரிக்க விதை நிறுவனமான மான்சான்டாவின் இந்தியப் பங்குதாரரான மஹிகோ நிறுவனமும் சேர்ந்து, காய்புழு தாக்குதலை எதிர்க்கும் வகையில், மரபணு மாற்றம் செய்யப் பட்ட கத்தரிக்காய்களை உற்பத்தி செய்துள்ளன. இந்த கத்தரிக்காய் செடி, வறட்சியை தாங்க வல்லது; பூச்சிக்கொல்லி மருந்து தெளிக்க வேண்டிய அவசியம் இல்லை. மரபணு மாற்றம் செய்யப்பட்ட, "பி.டி' கத்தரிக்காய்க்கு இந்திய உயிர் தொழில் நுட்பவியல் ஒழுங்கு முறை அமைப்பும், மத்திய அமைச்சகத்துடன் இணைந்த ஜெனிடிக் இன்ஜினியரிங் ஒப்புதல் கமிட்டியும் ஒப்புதல் அளித்துள்ளன. இருப்பினும், மத்திய அரசு பகிரங்கமாக இன்னும் இதற்கு ஒப்புதல் அளிக்கவில்லை. விரைவில் ஒப்புதல் அளிக்க உள்ளதாக, மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளார்.மரபணு மாற்றம் செய்யப் பட்ட இந்த கத்தரிக்காயை சாப்பிடுவதால் புற்றுநோய், ஒவ்வாமை உள்ளிட்ட பல பிரச்னைகள் ஏற்படும் என, ஒரு சிலரால் கூறப்படுகிறது. ஏற்கனவே கால காலமாக இருக்கும் பல்வேறு வகைக் கத்தரி விதைகள் இதனால் அழிந்து, இந்த "பி.டி' ரகம் மட்டுமே எதிர்காலத்தில் இருக்கும் என்ற கருத்து பரவலாக இருக்கிறது. கத்தரிக்காய் இந்தியாவில் தோன்றியது. தமிழில் சங்ககாலத்தில் இதற்கு "வழுதுணங்காய்' என்று பெயர். இதே போல, நாடு முழுவதும் பல்வேறு வகை கத்தரிக்காய்கள் பயிரிடப்படுகின்றன. மேலும் இதைச் சாப்பிடுவதால், அதிக பருமன் ஆகும் வாய்ப்பே இல்லை. பிரச்னை இல்லாத, கால காலமாக இருக்கும் ரகத்தை வெளிநாட்டு கம்பெனிகள் கருத்தைக் கேட்டு மாற்றுவதா என்பது தான் எதிர்ப்பு அணியின் வாதம். அதே சமயம், இந்த புதுரக "பி.டி' கத்தரிக்காயில் புற்று நோய் ஏற்படுத்தும் மூலக் கூறுகள் உள்ளன என்றும் கூறப்படுகிறது, இதனால், விவசாயிகள் தரப்பில் இதற்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது.மரபணு மாற்றம் செய்யப்பட்ட கத்தரிக்காய் உள்ளிட்ட உணவு பொருட் களை அமெரிக்கா ஆதரித்தாலும், இதன் பக்கவிளைவுகளை கணக்கில் கொண்டு, ஐரோப்பிய நாடுகள் இந்த பொருட்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இருப்பினும், இந்திய வேளாண் விஞ்ஞானிகள் மரபணு மாற்றம் செய்யப்பட்ட உணவுப் பொருட்களை ஆதரிக்கின்றனர். "நாட்டின் 11 இடங்களில் மரபணு மாற்றம் செய்யப்பட்ட கத்தரிக்காய் செடிகள் அரசு தோட்டங்களில் விளைவிக்கப்பட்டு பரிசோதிக்கப்பட்டதில் எந்த பிரச்னையும் இல்லை என்பது, தெளிவு படுத்தப்பட் டுள்ளது' என, மரபணு இன்ஜினியரிங் ஒப்புதல் கமிட்டி தலைவர் பர்ஷீரா தெரிவித்துள்ளார். வாரணாசியில் உள்ள காய்கறி ஆராய்ச்சி மையமும், "பி.டி' கத்தரிக்காய் அமோக விளைச்சலை தரக்கூடியது என, சான்றிதழ் அளித்துள்ளது."ஒரு மருந்து கண்டுபிடிக்கப் பட்டவுடன் அது எந்த அளவுக்கு பரிசோதிக்கப்படுமோ அந்த அளவு இந்த கத்தரிக்காயும் பரிசோதிக்கப்பட வேண்டும்' என, பிரான்ஸ் நாட்டு பல்கலைக் கழக விஞ்ஞானி கில்லஸ் எரிக் தெரிவித்துள்ளார். அரசு ஒப்புதல் கொடுத்தாலும், இது "பி.டி' கத்தரிக்காய் தான் என கண்டறிவதற்குரிய சோதனைக் கூடங் கள் நம்நாட்டில் போதுமானதாக இல்லை. அதுமட்டுமல்லாது, இந்த கத்தரிக்காய்க்கு மத்திய சுகாதாரத்துறை பொறுப்பேற்குமா அல்லது உணவுத்துறை பொறுப் பேற்குமா அல்லது அறிவியல் தொழில் நுட்பத் துறை பொறுப் பேற்குமா என்பது தெரியவில்லை.மரபணு மாற்றம் செய்யப்பட்ட கத்தரிக்காயில், கலப்படம் ஏற்படாமல் தடுக்கவும் ஒரு கண்காணிப்பு அமைப்பு தேவைப்படுவதாக வேளாண் துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். மரபணு மாற்றம் செய்யப்பட்ட கத்தரிக்காய் குறித்து நிலவும் குழப்பத்தை தெளிவுபடுத்துவதற்காக ஆந்திர அரசு, தலைமைச் செயலர் மற்றும் விவசாய உற்பத்தித்துறை ஆணையர் தலைமையில் உயர்மட்டக் குழு ஒன்றை அமைத்துள்ளது. விவசாய பல்கலைக் கழக துணை வேந்தர், தோட்டக்கலை பல்கலைக் கழக துணை வேந்தர் ஆகியோர் இந்த குழுவில் இடம் பெற்றுள்ளனர். "பத்து நாட்களுக்குள் இந்த குழு கத்தரிக்காயின் சாதக பாதகங்கள் குறித்து விரிவான அறிக்கையை சமர்பிக்கும்' என, ஆந்திர விவசாயத்துறை அமைச்சர் ரகுவீர ரெட்டி தெரிவித்துள்ளார்.

நகல் எடுக்க         |    எழுத்தின் அளவு: Decrease font Enlarge font   | 
  மின்னஞ்சல்  |   RSS  |  Bookmark and Share


`
வாசகர் கருத்து
 we need more and clear information about Bt brinjals, then only we can judge whether its good or not 
by R KIRUBA GANESAN,chennai,India    23-10-2009 06:52:41 IST
 Hello Horticulturist, first you stop ur testing in lab , come directly firmlands...cultivate directly using ''Zero Budget'' vevasayam Organic Food is more yield and good for health rather then your scientific Agriulture......DO U AGREE...?????? 
by sr ram,singapore,Singapore    21-10-2009 08:11:58 IST
 Dear Friends. I have seen your Response About BT Brinjal cultivation Issues . As I am Horticulturist its my duty to Explain About the BT Brinjal.Bt means Bactria( Bacillus thuringiensis), this bactrial gene has some Toxic property against common pest( insects). Our Scientist what they did ,they isolated that genes from the bactria to inserted the Brinjal crop.So this BT Brinjal will get Immunity it self against Common pest ( LIke a vaccine againt Common human Disease)otherwise we have to spray more Chemical ( pesticide) over the Brinjal crop to Kill the Insect ( Note : Cost of Chemical, Toxicity level of that Chemical,Less production , Poor Quality Vegitable). This is developing world .now Our india need More production in use of less unit area. My over all suggestion is that we may to test that BT Brijal further more for our food safty.  
by A ABBAS,Dubai,United Arab Emirates    20-10-2009 18:55:18 IST
 First let all the concerned autorities promise for this PT seed''s worthiness for replant/reuse(like recyclable0 like our regular healthy seeds and this time will not repeat one more sad story similar to PT cotton. Beyond all, let us pray to GOD for good hearted and straight frowarded, lieless officers (and politicians ?!) whom only can protect the people from repeat of disasters (like PT cotton) by not bending to the muscle power of money makers. It is misery still why this govenrment experimented with the life of formers for PT cotton by false promising and made the lands of those formers as testing ground similar one to conduct lab test on pigs.
 
by RSR R.SUNDARARAJAN,chennai-600048,India    20-10-2009 17:57:34 IST
 Evryone in the the world turned towards consuming naturally grown vegetables , due to it''s harmless!

We shouldn''t allow these genetically modifies vegetables on our Motherland! 
by k shiva,singapore,India    20-10-2009 15:13:03 IST
 Already some of our seeds are got Patent rights by american companies.like neem

Like that Brinjal too?

We may use if it had no trouble to human being.

at the same time patent right should be given to indian companies. 
by G KARTHIK,ahmedabad,India    20-10-2009 10:24:29 IST
 Pl Check all scientist Agri & Horti next approval in the BT BRINJAL (AVUNKA THAN MULU PORUPPU ARKA VENDUM IT''S OK) 
by r gopi,india,India    20-10-2009 09:59:29 IST
 Why we want to invite troubles?
Already we are facing numerous unknown diseases.
If we cross our limit against Nature, it will cause big problems to our Society.
 
by R Ramanan,Coimbatore,India    20-10-2009 09:35:21 IST
 First Provide the tested Brinjal for Politicians and Scientist. If they don''t have any problem then it can be provided to common people. 
by S Ram,Chennai,India    20-10-2009 08:27:15 IST
 Please don''t accept PT seeds and product...this is very dangerous. US have pleanty of firmlands why don''t they to all test in thoer own land with US peoples. they can cultivate and eat ???? Don''t support...... 
by sr ram,singapore,Singapore    20-10-2009 07:59:55 IST
Post Your Comments for the Article

 

  Your Name  :
Initial : Name :
  Your Email Id :  
  Your city (or) location  :  
  Your country  :  
  Your Comment:
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)மேலும் முதல் பக்க செய்திகள்
» தினமலர் முதல் பக்கம்
Advertisement
  இ-பேப்பர்