No.1 Tamil Newspaper Front Page News and Headlines Online - Dinamalar
இதை எனது முதல் பக்கமாக்கு
Get Font | Sitemap |   RSS Feed
முதல் பக்க செய்திகள் 
உடல்நலக் குறைவு என கூறி மதுகோடா மருத்துவமனையில் அனுமதி
நவம்பர் 04,2009,00:00  IST

Front page news and headlines today

ராஞ்சி : ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வர் மதுகோடாவின் ஹவாலா தொடர்புகள் குறித்து விசாரிப்பதற்காக, அமலாக்கப் பிரிவு அதிகாரிகள், டில்லியில் இருந்து நேற்று ராஞ்சி புறப்பட்டுச் சென்றனர். இதற்கிடையே, வருமான வரித்துறை அதிகாரிகளின் கிடுக்கிப்பிடியில் சிக்கியுள்ள மதுகோடாவுக்கு, நேற்று திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டதால், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.





ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வர் மதுகோடா. இவரும், இவரது அமைச்சரவையில் இருந்த சிலரும், வெளிநாடுகளில் சட்ட விரோதமாக சொத்துக்களை வாங்கி குவித்ததாக புகார் எழுந்தது. இதையடுத்து, கடந்த 31ம் தேதி, மதுகோடா மற்றும் அவரது நண்பர்களுக்கு சொந்தமான 60க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறை மற்றும் அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். இதில், மதுகோடா, வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்தது, சட்ட விரோத முதலீடு செய்துள்ளது, துபாய் உள்ளிட்ட வெளிநாடுகளுக்கு ஹவாலா மூலம் பணம் அனுப்பியது, பண பதுக்கலில் ஈடுபட்டதற்கான ஆதாரங்கள் சிக்கின. ஒட்டுமொத்தமாக 4,000 கோடி ரூபாய் அளவுக்கு அவர் மோசடி செய்துள்ளதாகக் கூறப்படுகிறது. துபாய்க்கு மட்டும் ஹவாலா மூலம் அவர் 560 கோடி ரூபாய் அனுப்பியுள்து கண்டுபிடிக் கப்பட்டுள்ளது. மதுகோடாவுக்கு உள்ள ஹவாலா தொடர்புகள் குறித்து விசாரிப்பதற்காக அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் நேற்று டில்லியில் இருந்து ராஞ்சி புறப்பட்டுச் சென்றனர்.





இதற்கிடையே, கடந்த இரண்டு நாட்களாக ராஞ்சியில் உள்ள அவரது வீட்டில் வைத்து, மதுகோடாவிடம் வருமான வரி மற்றும் அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தினர். நிதி மோசடி குறித்து மதுகோடாவிடம் பல்வேறு கேள்விகளை அதிகாரிகள் கேட்டனர். நேற்று விசாரணையின் போது மதுகோடாவுக்கு திடீரென கடுமையான வயிற்று வலி ஏற்பட்டது. உடனடியாக ராஞ்சியில் உள்ள மருத்துவமனையில் அவர் சேர்க்கப்பட்டார். வயிற்று வலியுடன், உயர் ரத்த அழுத்தமும் அவருக்கு இருப்பது தெரிந்தது. இதையடுத்து, அவர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு எக்ஸ்-ரே, ரத்த சோதனை ஆகியவை மேற்கொள்ளப்பட்டன.





மருத்துவமனை வட்டாரங்கள் கூறியதாவது: மதுகோடாவுக்கு சிறுநீரகம் தொடர்பான நோய் இருந்தது. இதற்காக, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர், சமீபத்தில் தான் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். தற்போது அவருக்கு கடுமையான வயிற்று வலி உள்ளது. ரத்த அழுத்தமும் அதிகமாக உள்ளது. அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன. இதற்கிடையே, மதுகோடா மற்றும் அவருக்கு நெருக்கமானவர்களின் வீடுகளில், வருமான வரித்துறை அதிகாரிகள் நேற்றும் சோதனை நடத்தினர்.

நகல் எடுக்க         |    எழுத்தின் அளவு: Decrease font Enlarge font   | 
  மின்னஞ்சல்  |   RSS  |  Bookmark and Share


வாசகர் கருத்து
 இன்னிக்கு படித்து விட்டு நாளை மறக்க போறோம் . அதற்க்கு ஏன் இத்தனை ஆர்ப்பாட்டம்  
by D ராஜசேகரன்,villupuram,India    11/6/2009 8:35:29 PM IST
 பட்டினி போட்டு சாவடிக்க வேண்டிய சனி அது .....ஆஸ்பத்ரிய்ல் சேர்த்து வைதயம் செய்யத் தேவ இல்ல .....மக்கள் பணத்த கொள்ள அடிக்கிறவன் மாரடைப்பு வந்து சாவுற மாதிரி ..இறைவா ஏன் நீ செய்யக் கூடாது ?  
by S Ashokan,Chennai,India    11/4/2009 8:03:26 PM IST
 NO NEED TO ARREST,NO NEED TO BRING HIM TO THE COURT FOR ENQUIRY,JUST KEEP HIM IN THE JAIL,BECAUSE ALREADY HE AGREE THAT HE IS A CRIMINAL,MEANS HE WAS ADIMITTED IN THE HOSPITAL HIMSELF.SO HE WELL PREPARED.HE WILL DO THE BEST WITH POLICE.  
by mk kamal batcha,dubai,India    11/4/2009 5:04:42 PM IST
 மனச்சாட்சி இல்லாம இப்படி நடக்கிறது. இவங்க கிட்ட நாமளும் பாவம் புண்ணியம் பார்க்கக்கூடாது. இதே hospital la விஷஊசி போட்டு கொல்லனும். இந்த மாதிரி நியூஸை படித்தாலே கோபம் கோபமா வருது.  
by S Santhosh,coimbatore,India    11/4/2009 3:37:46 PM IST
 First he needs to be checked by the speciallists in different hospital. If the disease is found truth its fine; else the hospital should be de recognized and the doctors performed the diagnosis should also be de recognized.

Then only these hospitals will not entertain providing incorrect report and the politicians will stop this drama 
by h Narayananan,Hyderabad,India    11/4/2009 3:30:28 PM IST
 நல்லா சொன்னிங்க திரு. பிரபு.. அதில் ஒரு சின்ன திருத்தம்.
''மதுகோடா வை எண்ணெய் சட்டியில் வருத்து மெது-பக்கோடா ஆக்க வேண்டும்''  
by E நண்பன்,Makati,Philippines    11/4/2009 3:04:19 PM IST
 வயிற்று பிழைப்புக்கு திருடும் மனிதன் அகப்பட்டால் எந்தவித விசாரணையும் இன்றி உள்ளே தள்ளப்பட்டு 15 நாள் சிறை.
மாத கடைசியில் கேஸ் பிடிக்க பலியாவதும் அவன்தான். ஆனால் நாட்டு மக்களை பட்டினியால் சாகவிட்டு கொள்ளையடிக்கும் இவன்போன்ற அரசியல்வாதிகளுக்கு குளுகுளு அறை, தொலைக்காட்சி, போன், என்னென்ன வசதிகள் உண்டோ எல்லாம். இந்த வழக்கும் அவர்களுக்கு ஒரு வகையில் நல்லதுதான். எப்படி என்றால் இதுவரை கொள்ளையடித்து மறைத்து வைத்த பணத்தை தைரியமாய் கொண்டாடலாம். 
by p பாரதிகுமார்,tirupur,India    11/4/2009 2:16:53 PM IST
 If he contacts to our cm, he would say more ideas.

ivanai பொது idathil thookil pota வேண்டும். 
by B Saravana,Chennai,India    11/4/2009 1:34:57 PM IST
 நம் அன்புத் தலைவர், தமிழக முதல்வரிடம் மதுகோடா அவர்கள் ஆலோசனை கேட்டிருக்கிறார். பிரச்சினை வருகிறதென்றாலோ, வரப் போகிறதென்றாலோ இதுதான் தம்பி சிறந்த வழி என்று அவரும் ஆலோசனை கூறியதாகத் தகவல். 
by Sridharan,Chennai,India    11/4/2009 11:55:03 AM IST
 சுருட்ட தெரிந்ததை காப்பற்றத் தெரியவில்லையே!. ஒரு போன் போட்டிருந்தால் எப்படி எப்படி வெளிய கொண்டு பொய் எப்படி உள்ளே கொண்டு வரணும்னு சொல்லியிருப்பாரே எங்க தலைவர். சரி. காங்கிரஸ் காரனுக்கு வெட்டாட்டா எப்படிப்பா?  
by N.S. Sankaran,Chennai,India    11/4/2009 11:37:29 AM IST
 Govt.Authorities has to sieze his property immidiately after that he could sleep in hospital or street. 
by v christopher,sanaa,Yemen    11/4/2009 11:24:23 AM IST
 Anyone who get in to health issues like this after some controversy, we need put them in the hospital inside the jail...they want to in hospital let that hospital be inside jail 
by sakthi,chennai,India    11/4/2009 11:13:15 AM IST
 இந்திய நாட்டில் சட்டத்தால் ஒன்றும் செய்ய முடியாது என நன்றாக புரிந்து வைத்துள்ளார்கள் அதிலும் அரசியல்வாதி என்றால் சொல்லவே வேண்டம்.செல்வாக்கு இருந்தால் எதையும் செய்யலாம் பணம் இருந்தால் செல்வாக்கு பெறலாம் என்ற நிலை வந்து விட்டது. மக்கள் பணத்துக்காகவும் இலவசத்துக்காகவும் வாக்களிக்கும் நிலைமை மாறினால் தான் நாம் கேள்விகேக்கும் தகுதியுடையவர்களாக இருப்போம் எங்கே செல்கிறது இந்தியா
- பாரதி பிரியன்  
by Bhara priyan,chennai,India    11/4/2009 11:07:05 AM IST
 மதுகோடா வை எண்ணெய் சட்டியில் வருத்து பக்கோடா ஆக்க வேண்டும்  
by Prabu,sg,India    11/4/2009 11:05:29 AM IST
 என்னமா நடிக்கிறான் பாருங்கள். அவன்கிட்ட இருக்கிற எல்லா சொத்தையும் புடிங்கிவிட்டு ரயில்வே ஸ்டேஷன் பிளாட்பாரத்துல பிச்சை எடுக்க விடனும். 
by s. மதன் kumar,kumasi,Ghana    11/4/2009 10:39:35 AM IST
 போங்கடா நீங்களும் உங்க அரசியலும். வெட்கமா இல்ல  
by india india,chennai,India    11/4/2009 10:32:48 AM IST
 இது போல ஸீனை எத்தனை திரைபாடங்களில் நாம் பார்த்திருப்போம்.
இதிலிருந்தே இவர் மோசடி செய்தது ஊர்ஜிதமாகிறது  
by M karthik,india,India    11/4/2009 9:46:33 AM IST
 எந்த ஒரு அரசியல்வாதியும் தன் மீது நடவடிக்கை எடுக்கும்போது இப்படித்தான் செய்கிறார்கள்.. இது போதாதென்று மருத்துவமனை வட்டாரங்கள் அடிக்கும் ஜால்ரா வேறு... 
by M கௌதமன்,chennai,India    11/4/2009 9:16:52 AM IST
 மதுகோடா பொண்டாட்டி என்னமா நடிக்கிறாங்க பார்த்தீங்களா? புருஷன் நடிக்கிறத பார்த்த உனக்கு சிரிப்பு வரலியாம்மா? என்னமோ உண்மையிலேயே மதுகோடாவுக்கு வரக்கூடாத வியாதி வந்துட்ட மாதிரி சோகமா இருக்கிற...? இந்த வருஷத்துக்கான சிறந்த நடிப்புக்கார பொண்டாட்டி விருத ஒனக்கு கொடுத்துட சிபாரிசு பண்றோம்.  
by s அப்துல்லா கான் ,UAE,United Arab Emirates    11/4/2009 8:35:45 AM IST
 IF AN INDEPENDET CAN BECOME MINISTERS AND MAKE SO MUCH, IT RAISES A LOT OF DOUBT. WILL THE GOVERNMENT AGENCEIS TAKE THIS UP ATLEAST TO ITS LOGICAL END AND PUNISH THE GUILTY. IT FURTHER GIVES DOUBT ON HOW MUCH MONEY OTHER SIMILIER TYPE OF MINISTERS COULD HAVE MADE, AND HOW MUCH OF IT COULD BE TRACED AND AGAIN ON HOW MANY, THE IT PEOPLE HAVE GUTS TO SEARCH AND TRACE WITH RECORDS (OFCOUSE WITH THE APPROVAL OF THE POWERS) TO TAKE ACTIONS ? AND AGAIN HOW MANY OF THEM WILL REMAIN IN SERVICE TO TESTIFY WITH BACKING. UNLESS ALL GOVERNMENT TRANSACTIONS ARE MADE TRANSPARENT, VERIFIABLE & AND TAKE IT TO COURT BY ANY CITIZENS, WE CANNOT EXPECT ANY DEVELOPMENT UNDER ANY OF THESE POLITICAL PARTIES. WHAT A PITY.  
by V Subbarao,Singapore,India    11/4/2009 7:57:05 AM IST
 ஒரு சுயேச்சை எம்.எல்.ஏ. முதலமைச்சராகி இந்த அளவிற்கு சம்பாதிக்க முடியுமென்பது இந்திய நாட்டின் சாபக்கேடு. சாகும் வரை இவரை சிறையில் தள்ளி கடுமையான உடலுழைப்பைக் கொடுக்கச் செய்யவேண்டும்.  
by R.P. Seema,PB,India    11/4/2009 6:45:21 AM IST
 காங்கிரஸ் என்றால் ஊழல். யாருக்கும் நிச்சயம் தண்டனை கிடைக்க போவதில்லை. நாமும் எல்லாவற்றையும் படித்துவிட்டு பெருமூச்சு விடவேண்டும். 
by K தசரதன்,QT,Singapore    11/4/2009 6:39:50 AM IST
 அவ்வளவு பணத்த வட்சிகிட்டு என்ன பண்ணப் போற
 
by mr senthil,australia,India    11/4/2009 5:30:10 AM IST
  ஹவாலா தொடர்புகள் குறித்து விசாரிப்பதற்காக, அமலாக்கப் பிரிவு அதிகாரிகள், டில்லியில் இருந்து நேற்று ராஞ்சி புறப்பட்டு வருவது தெரிந்தாலே எப்படித்தான் திடீரென கடுமையான வயிற்று வலி வருதோ? ஹவாலா கோடி கணக்கில் செய்ய முடிதோ ?மனசாட்சியே கிடையாத இவர்களுக்கு 
by KALAI RAJA,trichy,India    11/4/2009 3:33:06 AM IST
 Man Mohan Singh supports,real colours are coming out.First Raja,Secondly,Madu Koda.More skeletons will come out,out of UPA''s cupboard.UPA milked Jharkand,royally. 
by R Karuppiah Sathiyaseelan,Kinshasha,Congo (Zaire)    11/4/2009 2:33:09 AM IST
Post Your Comments for the Article

 

Your Name  :
Initial : Name :
Your Email Id :
Your city (or) location  :  
Your country  :  
Your Comment:
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)


மேலும் முதல் பக்க செய்திகள்
» தினமலர் முதல் பக்கம்
  இ-பேப்பர்