No.1 Tamil Newspaper Front Page News and Headlines Online - Dinamalar
இதை எனது முதல் பக்கமாக்கு
Get Font | Sitemap |   RSS Feed
முதல் பக்க செய்திகள் 
சேது சமுத்திர திட்ட விவகாரம் : மத்திய அரசுக்கு கோர்ட் உத்தரவு
நவம்பர் 04,2009,00:00  IST

Front page news and headlines today

"ராமர் சேது பாலத்திற்கு பாதிப்பு ஏற்படாமல், சேது சமுத்திர திட்டத்தை மாற்றுப் பாதையில் செயல்படுத்துவதற்கான நடைமுறை சாத்தியங்கள் குறித்து, நிபுணர்கள் குழு அளித்த அறிக்கை தொடர்பான நிலையை, நான்கு வாரங்களுக்குள் தெரிவிக்க வேண்டும்' என, மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.



"சேது சமுத்திர திட்டத்தை செயல்படுத்துவதற்கான வாய்ப்புகள் குறித்து, தேசிய கடலாய்வு நிறுவனத்தின் நிபுணர்கள் குழு சந்தேகம் தெரிவித்துள்ளது. அதனால், சேது சமுத்திர திட்டத்தை ரத்து செய்யும்படி மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும்' எனக்கோரி, சுப்ரீம் கோர்ட்டில் ஜனதா கட்சித் தலைவர் சுப்ரமணிய சாமி மனு தாக்கல் செய்தார். அந்த மனு, சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணன், நீதிபதிகள் ரவீந்திரன் மற்றும் பாஞ்சால் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் முன் நேற்று விசாரணைக்கு வந்தது.



அப்போது நீதிபதிகள் கூறியதாவது: ராமர் பாலத்தை இடிக்காமல், சேது சமுத்திர திட்டத்தை மாற்றுப்பாதையில் செயல்படுத்துவதற்கான சாத்தியக் கூறுகள் குறித்து ஆய்வு செய்ய, பச்சோரி தலைமையில் குழு அமைக்கப்பட்டு 15 மாதங்கள் ஆகியும், அந்தக் குழு சமர்ப்பித்த அறிக்கையோ அல்லது அதன் மீதான தன் நிலையையோ அரசு தெரிவிக்கவில்லை. இந்த விஷயத்தில் அரசு சில முடிவுகளை எடுக்க வேண்டும். சேது சமுத்திர திட்டம் குறித்து, பச்சோரி தலைமையிலான குழு சமர்ப்பித்த அறிக்கை தொடர்பாக, தங்களின் நிலை என்ன என்பதை மத்திய அரசு, இன்னும் நான்கு வாரங்களில், தெரிவிக்க வேண்டும். அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ள ஆலோசனை மற்றும் அது தொடர்பாக எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்தும் தெரிவிக்க வேண்டும். இந்த வழக்கின் அடுத்த கட்ட விசாரணை டிசம்பர் 11ம் தேதி நடக்கும். இவ்வாறு நீதிபதிகள் கூறினர்.



                                                                                                  - நமது சிறப்பு நிருபர் -

நகல் எடுக்க         |    எழுத்தின் அளவு: Decrease font Enlarge font   | 
  மின்னஞ்சல்  |   RSS  |  Bookmark and Share


வாசகர் கருத்து
 நல்ல ஒரு திட்டத்தை மதத்தின் பெயரால் தடுக்க முயற்சி செய்கிறார்கள். அதனை நிறை வேற்றுவதால் இந்தியாவில் அணைத்து மக்களும் நன்மை அடைவார்கள்.  
by T. அபூபக்கர்,tenkasi,India    11/7/2009 4:40:19 PM IST
 பழங்கதை பேசி பேசியே நம்நாட்டை உருப்படி இல்லாமல் ஆக்கி விட்டார்கள். இன்னும் பழைமை பழைமை என்று சொல்லி இப்போதுள்ள நல்ல திட்டங்களை அரசியலாக்கி அதில் குளிர்காய்கிறார்கள் எந்த ஒரு ஆளும் கட்சியின் திட்டங்களையும் எதிர் கட்சி ஆதரிப்பதே இல்லை. அதனால் அல்லல் படுவது மக்களே. தமிழன் பழம்பேருமை பேசி பேசி உருப்படாமல் போகிறான்

 
by P. ரவி சந்திரன் ,Vienna,Austria    11/5/2009 3:42:34 AM IST
 திராவிடன் கருணாநிதியின் கை கூலி. ராமர் உண்டா இல்லையா என்பது அல்ல, சேதுவினால் என்ன லாபம்? பெரிய கப்பல் எல்லாம் இது வழியா போக முடியாது. டி ஆர் பாலு நல்லா சாபிட்டார், கருணாநிதி துணைவியார் அப்புறம் மனைவியார் எல்லாம் நல்லா சாபிட்டாங்க.

 
by MKM ஆரியன்,Chennai,India    11/5/2009 2:39:32 AM IST
 at any cost ,sethu scheme will b done; india [ns]will become very important to the entire world! sure !!!!!!!!!!! AS GURUNATHEN  
by as gurunathen,tirupur,India    11/4/2009 11:10:30 PM IST
 ராமர் பாலம் எங்கே இருக்கு யார் பார்த்த ஆதாரம், இது டுபாக்கூர் சுப்ரமணியசாமி விட்ட கதை, சேது கால்வாய் திட்டம் முடிந்தால் இந்தியாவின் வளர்ச்சி அதிகமாகும் அதற்காக அமெரிக்க சூழ்ச்சி. இது இந்தியாவின் நீண்ட நாள் கனவூ திட்டம் இதை விரைவில் நிறைவேத்தி இந்தியாவின் வளர்சிக்கு உதவவேண்டும்  
by s BALA SUBRAMANIAN,dammam,Saudi Arabia    11/4/2009 10:52:46 PM IST
 vannakam dinamalar aasiriyar, nichayam sethu samuthiram tthitam thevai, ramar balam irrunthirkalam or illamal irrukalam, so ippa naamaku thevaiyanthu sethu samuthiram, pl dont other person, 
by G VALANGOVAN,kumbakonam,India    11/4/2009 10:06:01 PM IST
 சேதுசமுத்திரம் வேணுமா வேண்டாமா என்று மக்கள் திர்மணிக்கட்டும் நீதிபதி யர்ர்
 
by jalal,chennai,India    11/4/2009 8:57:21 PM IST
 ஒரு சில வரலாற்று சின்னகளை காக்க நடக்கும் முயற்சி தான் என்னை பொறுத்த வரை...
இப்பவே ஆத்திகர்கள் ராமர் இல்லை என்று சொல்லி கொண்டு இருகிறார்கள். இந்த மாதிரி இருக்கிற ஒவ்வொரு தடயத்தையும் அழிச்சிட்டா அவங்களுக்கு ரொம்ப வசதி ஆயிடும்.

ராமர் இருந்ததுக்கு தடயமே இல்லை அப்படி சொல்லிடலாம் ல...


ஆமாம் நான் தெரியாம தான் கேக்கறேன் உபயோக படுத்தாத நினைவு சின்னம் எல்லாத்தையும் அழிசிடுவிங்களா???????????????

 
by தமிழன்,Thamilzhan,India    11/4/2009 7:50:54 PM IST
 Jay Canada vil irundu eludhi ulladai ellorum padikkattum. Indha palam kattuvathal yarukku upayogam endru siridhu sindhittu parkattum. Seyvargala intha mukavum matravarkalum 
by na subbiramanian,madurai,India    11/4/2009 4:07:42 PM IST
 All the comments appear in this column on this issue are immature. Nobody talks about the issue as viewed by the Supreme court. Merely crommenting without understanding the technicalities will serve no purpose. Subramanyaswami can be called a joker and what about the judges?Are they also jokers? 
by V Senthilkumar,California,United States    11/4/2009 2:31:01 PM IST
 நமது நாட்டில் ஒரு திட்டத்தை கொண்டு வருவது எளிதல்ல. ஆனால் அப்படி கொண்டு வந்தாலும் அதை செயல்படுத்த விட மாட்டார்கள்.நாட்டின் முன்னேற்றம் அவர்களுக்கு பிடிக்காது.இந்த நாடும் நாடு மக்களும் நாசமாய் போகட்டும். 
by s. இந்தியன்,sudan,India    11/4/2009 2:27:41 PM IST
 adam bridge. யார் வைச்ச பெயர் அது ? stupid English people ... pls mention as ராமர் பலம். adam madam துக்கும் இந்தியாவுக்கும் என்ன சார் relation...we indian need to give name to bridge. not english man 
by v விக்னேஷ்,dubai,United Arab Emirates    11/4/2009 2:18:27 PM IST
 நண்பர் திராவிடன்(சிங்கப்பூர்) கருத்துகள் ஒவ்வொன்றும் ஈட்டியின் முனை போல் ஷார்ப் ஆக உள்ளது.

பாராட்டுக்கள்  
by ஆதி தமிழன்,சேலம் ,Salam,India    11/4/2009 1:03:08 PM IST
 கடவுள் அந்த பாலம் இப்போது தேவையல்ல என்பதால்தான் அதனை கடலுக்குள் அழித்து விட்டார் . எனவே இப்போது அதனை அழகுபடுதுவதில் தவறு ஏதும் இல்லை. இதனால் ஏற்படப்போகும் வளர்ச்சிக்கு அளவு ஏதும் இல்லை. தென் தமிழகம் வளர ஒரே வழி சேது சமுத்திர திட்டம் மட்டுமே. 
by D suresh,Chennai,India    11/4/2009 11:55:30 AM IST
 ''ராமர் என்பது ஹிந்துவோ, கிறிஸ்தவனோ, முஸ்லிம் என்ட சண்டையல்ல!!! நமது வரலாறு!!!
அவ்ளோதான்........
திராவிடன் india comment supper. அதான் உண்மை! அரசு ஆராய்ந்து திட்டத்தை அமல் படுத்த வேண்டும்..
ராஜா/அமிரிக்கா  
by T.K ராஜா குமார் ,parma,United States    11/4/2009 11:14:05 AM IST
 I feel sick and tired of some readers who see every subject through the prism of Srilakan tamil issue.We dont need to always bother the srilakan tamils to prove we are tamilians and show our தமிழ் பற்று. Those who support the demolition do so only for hurting hindu sentiments and no other benefit out of it. Once this mission is accomplished, then the very same anti hindu groups will start targeting the next symbol to continue their dravidian politics. Probably this for their real time pass. There is no more issues to show our தமிழ் பற்று. In Ramayanam Ravanan character is most respected, and he is a devoted hindu Siva bakthar. Except one mistake he did, he is a perfect man, who is even respected by his own enemies. Let our திராவிட நண்பர்கள் read ramayanam properly, then they will know the mighty of Ravana and also Rama.

For our திராவிட நண்பர்கள் Rama is an illusion, but Building temple for Kushubu is real. Be happy. Long live our dravidian culture. 
by Mr Jay,Alberta,Canada    11/4/2009 10:40:16 AM IST
 சுப்ரமணியசாமி ஏற்கனவே எவருக்கும் உதவாத கருத்துகளை தான் சொல்லுவாரு. அது போலத்தான் இதுவும் ஒன்று. அதனால் அவருடைய எதனை அறிக்கைகளை நாம் பார்த்து இருகோம். நமக்கு தெரியாத yethu nijam yethu பொய் yendru 
by India தமிழன்,UAe,India    11/4/2009 10:38:44 AM IST
 ராமர் ஒரு கற்பனை கதாபாத்திரமே.

Adam bridge ஒரு மணல் மேடு.

ஒரு சில சுய நல வாதிகள், உண்மை என தெரிந்தும் இன்னும் அதனை ஒப்புக்கொள்ள மறுக்கிறார்கள்.
Adam bridge மாதிரி மணல் திட்டு உலகம் முழுவதும் 12 இடத்தில உள்ளது . இங்கு ராமர் கட்டினார் என்றால் மிச்சம் 11 இடத்தில யார் கட்டினார்கள்.
சுப்ரமணிய சாமீ இதற்கு பதில் கூறட்டும். அவர் 26 வயதிலே Harward university ல doctorate லாம் முடிச்சிருக்காரு,பெரிய அறிவாளி என்று நினைத்தேன்.ஆனால் வடிகட்டிய முட்டாள் என்று இப்பத்தான் தெரியுது





 
by திராவிடன் ,sg,Singapore    11/4/2009 9:02:30 AM IST
 இந்தியாவில் குழப்பத்தை ஏற்படுத்தவும், வளர்ச்சியை தடுக்கவும் US -ஆல் நியமிக்க பட்டவர்தான் சு.சாமி.  
by திராவிடன்,Tamilnadu,India    11/4/2009 8:13:53 AM IST
 DMK & TR Balu will be more happy if this project been dropped so that no body going to ask them the accounts of past expenditure. State and central govt is not also not respecting supreme court by delaying for more than 15 months even if the report is ready.  
by truth truth,Singapore,Singapore    11/4/2009 8:01:07 AM IST
 i appreciate செந்தில் comments... 
by D George,Mumbai,India    11/4/2009 7:35:30 AM IST
 Demolition of Sethu bridge has always been the dream of DMK to hurt hindu sentiments for what so ever reason. Even if they say there is no historical proof, Sedhu is a hindu belief why do the anti Hindu Dravidian parties want to hurt it. We dont need any ones recommendation to save hindu sentiments. We haven''t forgotten how MK insulted Lord Rama.

By demolishing the bridge they can speed up the freight time, but no shipping company is going to reduce their freight charges because they have saved couple of hours in freight time. No common man is going to benefit out of it. This demolition could help in bringing the foreign navies coming closer to Tamil nadu waters.

TR Balu was instrumental in getting the bridge demolished as a shipping minister. Let some good thoughts prevail in the minds of central govt to keep up the secular structure of the country. Hurting hindu sentiments only flare up the militant hindu passions further. Playing with religious beliefs have always backfired and haunted the ruling elites. 
by Mr Jay,Alberta,Canada    11/4/2009 6:35:58 AM IST
 Other than Rama''s bridge or Adam''s bridge, a study shows sea wealth like coral''s and sea creatures will be threatened by this construction. Government/Ministry should do a thorough study before starting this project. It doesn''t need to be a prestige issue for DMK or a big MONEY for all project!! 
by C சுரேஷ்,Pennsylvania,United States    11/4/2009 5:44:03 AM IST
 If National Oceanic Institute has raised doubt about Sethu project,GOI should submit before Parliament & court,to take appropriate decision.
How in the first place Govt started the project,will be raised by court,now? 
by R Karuppiah Sathiyaseelan,Kinshasha,Congo (Zaire)    11/4/2009 2:50:57 AM IST
 என்னது ''ராமர் பாலத்தை இடிக்காமல், சேது சமுத்திர திட்டத்தை மாற்றுப்பாதையில் செயல்படுத்துவதற்கான சாத்தியக்கூறா'' தெரியாமல் தான் கேட்கிறேன் கதையில் சொன்ன இந்த பாலத்தை எத்தனை வருஷம் மக்கள் உபயோகித்தார்கள்? இடிந்து போனதென்றால் ஏன் புதுபிக்கவில்லை? அப்படி இந்த பாலம் போய் சேரும் புண்ணிய பூமி எது?நமது சகோதரர்களை கொன்று குவித்த இலங்கைகுக்கு ஏன் நாம் பாலம் போட வேண்டும்.அன்று ராமர் கதையில் இந்தியர்கள் இலங்கை மக்களை போரில் கொன்றனர்(வென்றனர்), இன்று இந்திய வம்சாவளியினரை கொன்று நிஜமாகவே பலி தீர்த்துக்கொண்டது இலங்கை.கதை எங்கே நிஜம் எங்கே?நமக்கு மிகவும் உபயோகமான இந்த போக்குவரத்தை உடனே துவங்க வேண்டும்.கடவுள் நம்பிக்கை உள்ளவர்களுக்கு நிலத்தில் ஏகப்பட்ட இடம் உள்ளது,இல்லாத இந்த பாலத்தை வைத்து நாட்டு நலனை கெடுக்க வேண்டாம்!
''இந்தியன் என்று சொல்வதில் பெருமையும் இல்லை,இந்தியன் என்று சொல்வதில் வருத்தமும் இல்லை'' செந்தில்,இந்தியா.  
by ச செந்தில்,இந்தியா ,India    11/4/2009 12:54:44 AM IST
Post Your Comments for the Article

 

Your Name  :
Initial : Name :
Your Email Id :
Your city (or) location  :  
Your country  :  
Your Comment:
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)


மேலும் முதல் பக்க செய்திகள்
» தினமலர் முதல் பக்கம்
  இ-பேப்பர்