No.1 Tamil Newspaper Front Page News and Headlines Online - Dinamalar
இதை எனது முதல் பக்கமாக்கு
Get Font | Sitemap |   RSS Feed
முதல் பக்க செய்திகள் 
'பீஸ்' கட்ட முடியாவிட்டால் தற்கொலை தான் தீர்வா...?
நவம்பர் 04,2009,00:00  IST

Front page news and headlines today

உயர்கல்வி கட்டணம் கட்ட முடியவில்லை என தற்கொலை தான் தீர்வு என்ற மனப்போக்கு மாணவர்களிடம் மாற வேண்டும் என கல்வியாளர்கள் கூறியுள்ளனர். உயர்கல்வி கற்க வங்கிக் கடன் உட்பட பல்வேறு உதவிகள் செய்யப்படுவதாக செய்திகள் தெரிவிக்கின்றன.



சென்னை, ராயப்பேட்டையில் பொறியியல் கல்லூரி மாணவி ஒருவர், இரண்டாம் ஆண்டுக்குரிய கல்விக் கட்டணம் கட்ட முடியாமல் தற்கொலை செய்து கொண்டுள்ளார். முதலாமாண்டு கல்விக் கட்டணம் செலுத்திய நிலையில், அவரது தந்தை உடல் நலக் குறைவால் இறந்து போயுள்ளார். மருத்துவ செலவு கை மீறிப் போக, இரண்டாமாண்டு கல்விக் கட்டணம் செலுத்த வழியின்றி தவித்த அந்த ஆர்க்கிடெக்சர் படித்த மாணவி, தூக்கில் தொங்கி விட்டார். கடந்த சில நாட்களுக்கு முன் வங்கிக் கடன் கிடைக்காத விரக்தியில் கல்லூரி மாணவர் ஒருவர் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார்.  தற்போது மருத்துவமனையில் இருக்கிறார். இதுபோன்று தலைதூக்கும் தற்கொலை முயற்சிகள், அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. "ஒவ்வொரு கல்லூரியும் குறிப்பிட்ட மாணவர்களுக்கு கல்விக் கட்டணம் வாங்காமல் இலவசக் கல்வி வழங்க வேண்டும்' என்று அண்ணா பல்கலை தொழில்நுட்ப கல்வி இயக்குனரகம் வலியுறுத்தி வருகிறது.



இதுகுறித்து, சென்னை அண்ணா பல்கலைக் கழக துணைவேந்தர் மன்னர் ஜவகர் கூறியதாவது: ஒவ்வொரு தனியார் பொறியியல் கல்லூரியிலும் ஒவ்வொரு பாடப் பிரிவிலும் 60 மாணவர்களில் பத்து சதவீதம் பேருக்கு இலவச கல்விக் கட்டணம் வழங்கப்படுகிறது. பொருளாதாரத்தில் பின்தங்கிய மூன்று பேர், இரண்டு பெண்கள் மற்றும் ஒரு ஊனமுற்றோர் என ஆறு பேருக்கு இச்சலுகை கிடைக்கிறது. கவுன்சிலிங் நடக்கும் போதே, வங்கிகள் ஸ்டால் அமைத்து கல்விக் கடன் குறித்து விளக்குகின்றன. நான்காண்டு படிப்பு முடித்து, மேலும் ஓராண்டு வாய்ப்பு தந்து பிறகு தான் கல்விக் கடன் வசூலிக்கப்படுகிறது. தன்னார்வ அமைப்புகளும் தானாகவே முன்வந்து கல்வி உதவித் தொகை வழங்குகின்றன.



சில கல்லூரிகள் அதிகளவில் கட்டணம் வசூலிப்பது ஒருபுறம் இருந்தாலும், பெரும்பாலான கல்லூரிகள் நன்றாகப் படிக்கும் ஏழை மாணவர்களுக்கு உதவி செய்கின்றன. உயர் கல்விக் கான கட்டணம் செலுத்த முடியவில்லை என்று தற்கொலை முயற்சியில் ஈடுபடுவது சரியான முடிவல்ல. மனரீதியாக இளைஞர்கள் தன்னம்பிக்கை யை வளர்க்க வேண்டும். கஷ்டங்கள் இல்லாத வாழ்க்கையே இல்லை. அதை எப்படி சமாளிப்பது என்பதில் தான் வாழ்க்கை இருக்கிறது. இந்த தற்கொலை தவறான முடிவு. சமீபத்தில் தந்தையை இழந்த அந்தப் பெண்ணின் தாயார், தனது இரண்டு மகள்களைத் தான் வாழ்க்கை என்று நினைத்திருப்பார். பொறுப்பாக இருக்க வேண்டிய மூத்த பெண், விரக்தி அடைந்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். கல்விக் கட்டணம் செலுத்த முடியவில்லை என்று கூறுவதை விடுத்து, அவர் முயற்சி செய்திருக்கலாம். இவ்வாறு மன்னர் ஜவகர் தெரிவித்தார்.



இதுகுறித்து, தொழில்நுட்ப கல்வி இயக்குனரக அதிகாரி கூறியதாவது: ஒவ்வொரு பாடப் பிரிவிலும் 60 பேரில் அதிகபட்சம் ஆறு பேருக்கு இலவச கல்விக் கட்டணத்திற்கு வலியுறுத்துகிறோம். எத்தனை பேருக்கு இலவச கல்விக் கட்டணம் வழங்குகின்றனரோ, அதே எண்ணிக்கைக்கு நிர்வாக ஒதுக்கீட்டில் மாணவர்களை சேர்த்துக் கொள்ளலாம். பொருளாதாரத்தில் பின்தங்கிய ஆண்டுக்கு 2.5 லட்சம் ரூபாய் வருவாய் கொண்டுள்ள குடும்பத்தை சேர்ந்த மூன்று மாணவர்கள், தாசில்தாரிடம் சான்று பெற்று இந்த சலுகையைப் பெறலாம். இரண்டு மாணவிகள் எவ்வித சான்றும் இன்றியும், ஒரு ஊனமுற்ற மாணவர் மருத்துவ சான்று காண்பித்தும் இந்த இலவச கல்வியைப் பெறலாம். படிப்பு முடியும் காலம் வரை இலவச கல்விக் கட்டண சலுகை பெறலாம். கடந்தாண்டு 344 தனியார் பொறியியல் கல்லூரிகள் இந்த சலுகையை வழங்கின. இந்தாண்டு 433 கல்லூரிகள் தானாகவே முன்வந்து இந்த சலுகையை வழங்கியுள்ளன. இவ்வாறு அந்த அதிகாரி தெரிவித்தார்.



இதுகுறித்து, கல்வி அறக்கட்டளை நடத்தி வரும் ஒருவர் கூறுகையில், ""பல்வேறு தனியார் தொண்டு நிறுவனங்கள், தனியார் அறக்கட்டளைகள் கல்விக்கு முக்கியத்துவம் கொடுத்து மாணவர்களுக்கு "ஸ்பான்சர்' செய்து வருகின்றன. ஏழ்மை நிலை குறித்து, பத்திரிகைகளில் வரும் செய்தியைக் கண்டு, தனிநபர்களும் உதவி செய்து வருகின்றனர்; சம்பந்தப்பட்ட கல்லூரியும் உதவுகிறது,'' என்றார். "குடும்ப சூழ்நிலை காரணமாக, கல்விக் கட்டணம் கட்ட முடியாதவர்கள் முதல்வர் பொது நிவாரண நிதி, தனியார் அறக்கட்டளைகள், அரசியல் கட்சி தலைவர்கள் ஆகியோரிடம் மனு செய்தால் அங்கிருந்தும் உதவிகள் அளிக்கப்படுகின்றன. "எனவே, ஏழை மாணவர்கள் தற்கொலை தான் தீர்வு என்ற முடிவை எடுக்கக் கூடாது' என கல்வியாளர்கள் கருதுகின்றனர்.



                                                                                                   - நமது சிறப்பு நிருபர் -

நகல் எடுக்க         |    எழுத்தின் அளவு: Decrease font Enlarge font   | 
  மின்னஞ்சல்  |   RSS  |  Bookmark and Share


வாசகர் கருத்து
 முதல்ல நிங்க முடிவு செய்த தொகையை எல்லா கல்லுரிகளும் பின்பற்றுகிரார்கலனு பாருங்க அப்பறம் இது மாதிரி தகவல் சொல்லலாம்  
by m ஸ்ரீனிவாசன்,erode,India    04-11-2009 19:56:37 IST
 மதிப்பிற்குரிய ஜவஹர் அய்யா, நீங்கள் சொல்வதுபோல் நாங்கள் எங்கும் காண வில்லை அப்படி ஒரு வாய்ப்பு இருந்தால் தயவு செய்து விளம்பர படுத்துங்கள் ஏழை மாணவர்களுக்கு பயன்படும் கல்வி கடன் வாங்க படும் படு சொல்லி மாளவில்லை அய்யா  
by SALA,ch,India    04-11-2009 18:47:30 IST
 i am ready to take care of one of the poor student''s full college tuition fees till his/her course completion. 
by BMD Muralidharan,chennai,India    04-11-2009 14:47:50 IST
 who gives correct income, if it based on income. None can find correct income except government servants.. just look at ration card income amount of many.. People who has TV say no TV, not working etc.. Our politicians income in others name .. So one cannot bring the base of income. 
by HS Shalu,chennai,India    04-11-2009 14:39:09 IST
 அட்வைஸ்??? உங்க அட்வைஸ் யாருக்கும் இங்க தேவை இல்ல சார்....

1 why cant you set up a bank branch which is dealing with all the colleges?
2. The college should deal with the bank for all money matters with respect to a particular student
3. To enrol in a college, the college should not talk about money to the student. It has to be between the college and the bank and the student could be asked to sign.

When we launch satellites to moon, I dont think that this is impossible.... 
by C Ramesh,Darmstadt,Germany    04-11-2009 14:36:37 IST
 இன்ஜினியரிங் படிப்பில் இலவச கல்வியா?. இப்படி கேள்விப்படுவது இதுதான் முதல் முறை. நானும் பொறியியல் காலேஜ் இல் தான் வேலை பார்க்கிறேன். இப்படி ஓர் சட்டம் இருப்பதாக தெரியவில்லை. 
by J John ,Sivakasi,India    04-11-2009 14:01:17 IST
 மதிப்புக்குரிய jawakar sir,
எத்தனை இன்ஜினியரிங் கல்லூரிகளில் தரமான கல்விகிடைகிறது. அடிக்கொரு இன்ஜினியரிங் கல்லூரி ஆட்டுமந்தை போல் மாணவர்கள் பணப்பேய் பிடித்த நிர்வாகம் .
அப்படியே கடன்வாங்கி படித்தாலும் எத்தனை பேர் சரியான தகுதியுடன் வேலைக்கு தேர்வு செய்யபடுகிறார்கள்.மார்க் சீட் இல் முதல் வகுப்பு. ஆனால் இதர திறமைகளில் கடைசி. கல்லூரிகள் மாணவனின் தேர்ச்சி விகிததை பார்க்கிறதே தவிர, தொழில் திறமைகளை வளர்ப்பது இல்லை. கல்வி கடனை திருப்பி செலுத்த மாணவர்கள் சரியானநேரத்தில் சரியான வேலைக்கு செல்ல வேண்டும்.இது கட்டாயம் .இது திறமையான மாணவர்களால் மட்டுமே சாத்தியம். .எத்தனை பேர் தகுதியானவர்கள் 100 கு 5 பேர் மட்டுமே .இது sarvay result.எனவே மாணவர்களே அன்பு வேண்டுகோள் கடன்கிடைப்பது அரிது கிடைத்தாலும் திருபிசெலுத்த நாம் கல்லூரிகளில் தகுதி படுத்த படுகிறோமா என்பதை உறுதிபடுதிகொள்ளவேண்டும் இல்லை என்றால் தற்கொலைகள் தொடரும் அவலம் உள்ளது.நன்றி தினமலர். 
by c jegan ,nagercoil,India    04-11-2009 12:23:26 IST
 this shows till indians are in ignorance.most of the govt. schemes are not reached the needy.the need of hour is educated youths /retd persons come forward to help the poor/the needy. 
by a anandhakrishnan,Dombivili,maharashtra,India    04-11-2009 11:55:24 IST
 Probably, the student attempted to commit suicide as a last resort. He / His Parnets would have tried all avenues to generate the fund; What happened to the multiple commitments from the central govt on the educational loan? In reality, educational loan are not available for the poor and needy students.

Secondly, when it comes to the reservation - most of the reserved seats are being occupied by the students who are wealthy. My Sister did MBBS two decades before and we come from upper class family. We got loan from multiple people, sold the jewels and assets to pay her fees, though she got the seat through merit in the Govt Medical college, by scoring 98.9% mark.

During that time, she had her friend who belong to SC / ST community, who used to come to the college in Maruti Car (It was introduced recently) or in a ambassador daily and wearing gold / diamond ornaments. The girl got the seat through quota system as she scored around 75% mark and was paying the college fees of less than Rs. 100 per month.

This is how the reservation system is being used by our politicians for vote bank. Instead of giving quota to these financially wealthy lower class people, the same can be given to the financially weak families of these castes and any unfilled seats can be brought back to general quota so that every one can get benefited 
by H Narayanan,Hyderabad,India    04-11-2009 11:24:36 IST
 No need to teach this lesson to student. It has to be dealt with University VC & Political Leaders to fix the same price for all students in all universities, fees amount has to publish in the Tamil Nadu Govt. website for all the courses regardless of college. 
by v christopher,sanaa,Yemen    04-11-2009 11:18:44 IST
 Education has become money minded.. Even Govt Colleges are not an exemption.. No of seats in a particular Dept is 120 in 2007 and suddenly it rose to 240 in 2008, with new added seats are self supporting in which fees are almost twice than the regular one.. The reason stated was the no of seats has been increased in order to meet the expectation of students.. If so y not the newly added seats be regular one..
One thing is obvious, ''One''s weakness is others Strength''.  
by M அருணாசலம்,Bangalore,India    04-11-2009 10:54:10 IST
 Education has become money minded.. Even Govt Colleges are not an exemption.. No of seats in a particular Dept is 120 in 2007 and suddenly it rose to 240 in 2008, with new added seats are self supporting in which fees are almost twice than the regular one.. The reason stated was the no of seats has been increased in order to meet the expectation of students.. If so y not the newly added seats be regular one..
One thing is obvious, ''One''s weakness is others Strength''.  
by M அருணாசலம்,Bangalore,India    04-11-2009 10:48:00 IST
 SINCE FIRST SEMASTER STARTS THIS YEAR (ENGINEERING), I HAVE APPROACHED CANARA BANK , PERALAM FOR MY SON''S EDUCATIONAL LOANS, NOTHING HAS BEEN DONE. 
by O Mohamed Sharfuddine,KILLUMANGUDI/MAYEILADUTHURAI,India    04-11-2009 09:54:13 IST
 புது சட்டம் ஒன்று இன்று தெரிந்துகொண்டேன். அவ்வளவு சட்டம் தேவையா? கல்வியை அரசு இலவசமாக கொடுக்க வேண்டும் அது இருந்தால் போதும், உயிர் பலியை குறைக்கலாம்.  
by கணேஷ்,Maldives,Maldives    04-11-2009 09:51:41 IST
 GUD to see,,,, But in this generation if the guys come up with correspondence degree, no one is ready to accpet that for job,, even they were not ready to test their talents... could some one take this seriously... Example com... CTS ,TCS etc 
by N ANAND,chennai,India    04-11-2009 09:50:48 IST
 First, stop all abormal fees from the institution. Based on income, collect the fees. Why you are going on the basis of caste?
In all caste, poor students are there.. Ask them to produce copy IT returns so that you will income will come to know. Those who are not filing IT returns penalise them. 
by N VENKATASUBRAMANIAN,BANGALORE,India    04-11-2009 09:35:32 IST
 60 இல 6 பேருக்கு இலவச கல்வி. இப்படி கேள்விப்படுவது இதுதான் முதல் முறை. நானும் பொறியியல் தான் படிக்கிறேன் . இப்படி ஓர் சட்டம் இருப்பதாக தெரியவில்லை. சட்டம் இயற்றுவதை விட்டு அது சரியாக நடைமுறைப்படுத்தப்படுகிறதா என்று கவனிப்பது நல்லது. மேலும் வங்கிகளில் சொத்து உள்ளவர்களுக்கே கல்வி கடன் தரப்படுகிறது. 
by T மனோஜ்,chennai,India    04-11-2009 09:03:35 IST
 education news is very useful. 
by A.C ESWARAN,coimbatoe palladam,India    04-11-2009 06:25:43 IST
Post Your Comments for the Article

 

Your Name  :
Initial : Name :
Your Email Id :
Your city (or) location  :  
Your country  :  
Your Comment:
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)


மேலும் முதல் பக்க செய்திகள்
» தினமலர் முதல் பக்கம்
  இ-பேப்பர்