No.1 Tamil Newspaper Front Page News and Headlines Online - Dinamalar
இதை எனது முதல் பக்கமாக்கு
Get Font | Sitemap |   RSS Feed
முதல் பக்க செய்திகள் 
கருணாநிதிக்கு அச்சுதானந்தன் கேள்வி
நவம்பர் 07,2009,00:00  IST

Front page news and headlines today

திருவனந்தபுரம் : முல்லைப் பெரியாறு அணை பகுதியில், மத்திய தொழில் பாதுகாப்புப் படையை காவல் பணிக்கு ஈடுபடுத்த வேண்டும், என்ற தமிழக முதல்வரின் கோரிக்கைக்கு கேரள முதல்வர் அச்சுதானந்தன் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.



மும்லைப் பெரியாறு அணை பகுதியில், அடிக் கடி சிலர் சேதங்களை ஏற்படுத்துகின்றனர். அணையை பார்வையிடச் செல்லும் தமிழக அதிகாரிகளுக்கு கேரள பாதுகாப்பு வீரர்கள் அனுமதியளிப்பதில்லை. இது போன்ற சம்பவங்க ளால், இந்த அணையை பாதுகாக்கும் பணியை மத்திய தொழில் பாதுகாப்புப் படையிடம் அளிக்க வேண்டும் என, முதல்வர் கருணாநிதி மத்திய அரசிடம் கோரியுள்ளார்.இது குறித்து, திருவனந்தபுரத்தில் கேரள முதல்வர் அச்சுதானந்தனிடம் நிருபர்கள் கேட்டனர்.



அப் போது அவர் கூறியதாவது:நூற்றாண்டு பழமைவாய்ந்த இந்த அணையினால், ஐந்து மாவட்டங்களில் வாழும் 40 லட்சம் மக்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் உள்ளது. எனவே, தான் இதற்கு மாற்று ஏற்பாடு செய்யும் படி மத்திய, மாநில அரசுகளை இப்பகுதி மக்கள் வற்புறுத்தி வருகின்றனர். புதிய அணை கட்டும்படி இவர்கள் கேட்கின்றனர்.இந்த அணையில், மத்திய தொழில் பாதுகாப்பு படையை பணியில்ஈடுபடுத்தினால், அணை உடையும் போது அவர்கள் காப்பாற்றுவார்களா? இந்த அணை உடைந்தால் 40 லட்சம் மக்களின் உயிர் உடைமைகள் அரபிக்கடலுக்கு அடித்துச் செல்லப்படும். எனவே, புதிய அணைக் கான ஆய்வு மேற்கொண் டோம். இதற்கு தமிழக அரசு எதிர்ப்பு தெரிவிக்கிறது. இவ்வாறு அச்சுதானந்தன் கூறினார்.

நகல் எடுக்க         |    எழுத்தின் அளவு: Decrease font Enlarge font   | 
  மின்னஞ்சல்  |   RSS  |  Bookmark and Share


வாசகர் கருத்து
 நம் பக்கம் நாம் அணை கட்ட முடியாத அதை ஏன் செய்ய குடாது  
by r sivakumar,madurai,India    11/7/2009 10:14:06 PM IST
 Hello. mr.CM, this is too much speech. pls stop this much of speech.  
by R Thangaraaj,Rajapalayam,India    11/7/2009 7:47:02 PM IST
 ஹெலோ கருது தெரிவிக்கும் நண்பர்களே, முதலில் மரியாதையை கற்று கொள்ளுங்கள்.கேரளா முதல்வரை மரியாதையை கொடுங்கள் .அணை கேட்டவிட்டால் அணை இடிuம்போது நமது தமிழ் இனம் முதலில் அழியும்.முதலில் பேச கற்று கொள்ளுங்கள். பிறகு உங்கள் பிரச்சனையை கூறுங்கள்


 
by P Arul,chennai,India    11/7/2009 6:56:22 PM IST
 Mr achutanandan is not answering to the direct question why he is opposing central reserve force to guard the dam. simple answer, keralies wont allow any tamil officials to enter the dam and if Central reserve force is there they will follow the rules given to them, so keralites dont like this move. as many malayalies live in TN and if anything happen to them - they have to go to kerala and let us see what would happen 
by MR ரமேஷ் RAYEN,ABU DHABI,United Arab Emirates    11/7/2009 4:22:39 PM IST
 இன்னும் இவர்கள்தாம் கேட்டு கொண்டிருப்பதை விட்டுவிட்டு நாமாக முடிவெடுத்துகொள்ளவேண்டும் தமிழக நீர்பிடிப்பு பகுதிகளை உள்ளடக்கிய செயற்கையாக உருவாக்கிய பெரியார் அணை போல ஒரு அணையை நாம் நமது தமிழகத்தில் உருவாக்க வேண்டும். தமிழக மேற்கு தொடர்ச்சி மலையில் இருந்து போகும் நீரை நமது வழியில் திருப்பி ஒரு புதிய அணை கட்ட வேண்டும். அவர்களால் ஆய்வு செய்யும்போது நம்மால் ஒரு ஆய்வு செய்து புதிய அணை கட்ட கூடாதா.இவர்கள் புதிய அணை கட்டுவது நமது ஆயிரம் வருட உரிமையை பறிப்பதற்கு. முதுகெலும்புள்ள தமிழக அரசியல்வாதிகளே சிந்தியுங்கள். நாம் அணை கட்டுவதால் கேரளாவின் ஐந்து மாவட்ட மக்கள் ஆபத்தில் இருந்து முழுவதுமாக தப்பிபார்கள். இன்னும் இவர்களிடம் பிச்சைஎடுக்காதீர்கள். மத்ய அரசிடம் எதையும் எதிர்பார்க்காதீர்கள். அவர்கள் அங்கு ஆட்சியை பிடிக்க, நமக்கு எதையும் செய்யமாட்டார்கள். முழுக்க முழுக்க நமது மேற்கு தொடர்ச்சி மலையின் நீர்பிடிப்பு பகுதிகளில் உருவாகும் நீர் தமிழகத்திற்கே பயன்படவேண்டும். 
by v கார்தீசன்,chennai,India    11/7/2009 3:31:33 PM IST
 அய்யா தமிழ் மக்களே, அச்சு கேரளா மக்களுக்கு பேசறாரு போராடுகிறான், நம்ம கலைஞரு அவரு குடும்பத்துக்கு போராடுகிறார். புது அணைக்கு ஒப்பந்தம் கலைஞருக்கு கொடுக்க சொல்லு...... உடனே ஓகே சொல்லிடுவார் நம்ம தலைவரு  
by a SOUNDAR,singapore,India    11/7/2009 2:14:12 PM IST
 டியர் முக இந்த விசயத்தில் தங்களின் கருத்து என்ன? ஏன் எப்பொழுதும் போல் குழப்புதிறீர்கள், அணையை எத்தனை முறை பார்வை இடுவீர்கள்? தமிழ் நாட்டின் நிலைபாடு ஒன்றே ஒன்றுதான் அணையின் உயரத்தை அதிகரிப்பது என்பதை உணர்ந்து அதற்க்கான உரிய ஆக்கபூர்வ நடவடிக்கை எடுக்கவும் - குழப்புவது, நடிப்பது, குள்ளநரி வேளையை விட்டுவிட்டு தமிழகத்தின் உரிமையை நிலைநாட்டு  
by G வெங்கி,ajman,United Arab Emirates    11/7/2009 1:10:38 PM IST
 சொல்லிக்கொண்டிருக்க கூடாது, கையாலாகாத கருணா போல அறிக்கை விட்டுக்கொண்டிருக்காமல், உடனே ஒரு பத்து நாள் எல்லாத்தையும் நிறுத்தனும். நாம பேசி பேசியே கெட்டவனுங்க. இனியும் வெட்டி கூச்சல் போடாம செயல்ல காட்டுங்கப்பா  
by k kamaraj,Canada,Canada    11/7/2009 12:17:47 PM IST
 அய்யா அதிமேதாவியே, ஒரு சொட்டு தண்ணீரை கூட விவசாயத்திற்கு பயன் படுத்தும் மக்கள் எம் தமிழ் மக்களே. வீணாக அரபிக் கடலில் கலக்கும் தண்ணீரை தருவதால் என்ன இழப்பு உங்களுக்கு என்றுதான் தெரியவில்லை. தமிழ்நாட்டு பார்டர்கள் அனைத்தையும் ஒரு வாரம் இல்ல ஒரு நாள் மூடுனா தெரியும் சேதி. திங்க சோறு இல்லாம நாரி போய்டுவீங்க.
அப்புறம் கடவுளின் சொந்த நிலம், சாத்தானின் சொந்த நிலம் ஆகிடும். தமிழன் அமைதியானவன்தான். ஆனா நினைசான்னா அப்புறம் நீங்கல்லாம் அரபிக் கடலுகுள்ளதான் போய் குதிக்கணும். எங்க ஒவோருத்தர்குள்ளும் புலிகள் இருக்காங்க. ஜாக்ரதை. 
by ding dong,chennai,India    11/7/2009 12:13:02 PM IST
 ஆச்சு சொல்வதை பார்த்தால் அவர்கள ஆட்களை வைத்து மெல்ல மெல்ல உடைத்து கொண்டு இருக்கிறார்கள் போல் தெரிகிறது. இதுதான் அப்பன் குதிருக்குள் இல்லை என்று சொல்வது போல் இருக்கிறது  
by karki,thondi ramnad dt,Iran    11/7/2009 12:07:07 PM IST
 கவலைபடாதிங்க அய்யா <''கண் அடுச்சு வராதாவ கைய்ய பிடுச்சு இழுத்தா வரவா போரா?'' நாங்க சொன்னா நீங்க கேட்க போறது இல்லை. எங்களுக்கும் அறிக்கை கடிதத்த விட்டா வேற எதுவும் தெரியாது. நாங்க அறிக்கை விட்டு கிட்டு இருக்கோம். நீங்க உங்க ஜோலிய முடுச்சுட்டு கை கழுவிட்டு போங்க. நாங்க வழக்கம் போல வாய தொடச்சுட்டு போறோம்... எல்லாம் எங்க தல<யெழுத்து''  
by S ஷேக் மைதீன் ,chennai,India    11/7/2009 11:40:52 AM IST
 Kerala is the number one educated state in India. But their behavier is the number one uncultured. 
by S டேனியல் ஜெபக்குமார்,Riyadh,Saudi Arabia    11/7/2009 11:18:40 AM IST
 வாதத்துக்கு மருந்து உண்டு. பிடிவாதத்துக்கு மருந்து இல்லை.

கேரளா மக்களிடம் சென்று இந்த அரசியல்வாதிகளின் முகத்திரையை கிழிக்க வேண்டும்.

அரசியல்வாதிகள் இந்தப் பிரச்சினையை திர்க்க மாட்டார்கள். கேரளா சகோதரர்களிடம் இந்தப் பிரச்சினையை
கொண்டு செல்வோம்.

தினமலர் உதவ வேண்டும். 
by D மணிகண்டன் ,Tamilnadu,India    11/7/2009 11:16:01 AM IST
 ஜெயலலிதா அவர்கள் மீண்டும் வந்தால் அச்சுக்கு ஆப்பு உண்டு. 
by G குமரன்,Pune,India    11/7/2009 11:08:32 AM IST
 Achu
Where is 40 Lakh People.
Half of Kerala Population is in GULF Countries, 1/3 Kerala Population are in Cuties Like CHENNAI, DELHI, MUMBAI, KOLKOTTA and in Moon.
The remaining Population is Politician
Achu wants to save politician Not the Kerala People. Kerala People are well educated they will not get cheated by the Gimmicks of Achu 
by K Tamilan,DOHA,Qatar    11/7/2009 10:57:05 AM IST
  இனி என்னவோ தமிழனுக்கு மிஞ்சியது வெறும் அறிக்கை மட்டும் தான்!!!
இருபின்னும் கேரளமக்கள் நன்றி மறவாதவர்கள்..... 
by T.K ராஜா குமார் ,parma ,United States    11/7/2009 10:52:26 AM IST
 இதற்க்கு தீர்வு காண முடியாமல் அரசியல் நடத்தும் கலைஞர் செய்யும் ஆட்சி திறமை அற்ற மக்களால் தேர்தேடுக்கபடாமல் வாக்களிப்பு இயந்திரத்தால் அமைந்த ஆட்சி. நமது நலனை பாதுகாக்காமல் இருப்பது எதிர்காலத்தில் மேலும் பிரச்னை அதிகமாகும். கஜானாவை காலி செய்துவிட்டு அடுத்த ஆட்சிக்கு வழிவிடும் தந்திரம் மிக்கவர்களால் முல்லை பெரியாறு அணை விவகாரம் சிக்கலாகி கொண்டு இருக்கிறது. மக்களே இதற்க்கு தீர்வு சொல்லுங்கள். 
by k ஆனந்த்,thuraiyur,India    11/7/2009 10:19:27 AM IST
 ஹலோ அச்சுதானந்தன் அவர்களே, அனாவசியமாக வாயைக்கொடுத்து மாட்டிக்காதீர். இன்னமும் தி மு க இ.கம் கூட்டணி முடிவாகவில்லை. அதற்கும் அப்பால், திடீர்னு மு.க நீங்க எந்த யூநிவெர்ஸிடில படிச சீர்னு கேட்பார். அதற்கு எல்லாம் பதில் சொல்லி உங்களால கட்டுபடியாகாது. அதனால பேசாம டாம் கட்டற வேலையை பாருங்க.  
by v sundaram,jeddah,Saudi Arabia    11/7/2009 9:53:32 AM IST
 This issue is too much emotionalised. Water is a natural resourse which is common for all and at the same time security of the people is also important. This issue must be disscused with open mind and we have to stay away from emotions. 
by S.T.R Thiagu,madurai,India    11/7/2009 8:11:40 AM IST
 No such dam in India will withstand earth quake. So these nonsense are playing politics. Kerala peoples will waste the water to sea but they won''t give to TN. Bcoz their mentality is like that narrow minded. Useless peoples. Karuna telling that they are not allowing TN officials like but this nonsense not answering to that and asking some other questions. I am having doubt. 40 Lakhs peoples living just below the dam really ???  
by விஜய்,Singapore,India    11/7/2009 6:47:42 AM IST
 டியர் ஆச்சு, பொச்சு & கோ அவர்களே, எவ்வளவு நாள் ஏமாற்றுவீர்கள் அந்த அனை உடயபோகிறது என்று. ஒரு சதவிகிதம் தண்ணீரை கூட கேரளா உபயோகப்படுத்த முடியாது, எல்லாம் உபரி நீர். உங்களுக்கெல்லாம் அணைத்து சிவில் சப்ளை அதாவது உணவு, காய்கறி, மருந்து முதல் நாப்கின் வரை தமிழ்நாடுலிருந்து செல்வதை ஒரு வரம் நிறுத்தினால் தெரியம் உங்கள் ஊரு வாசம். எங்கள் ஊரு ரேஷன் அரிசி, வயதான எருமைமாடு முதல் அனைத்தையும் கடத்தி கொண்டு பொய் திண்பீர்கள் அனால் வீணாக போகும் தண்ணீரை தரமாட்டீர்கள். உனக்கு தெரியுமா இடுக்கி மாவட்டம் தமிழ்நாட்டை சேர்ந்தது இன்னும் தொண்ணுறு சதவீதம் மக்கள் தமிழ்மக்கள்தான் வாழ்கிறார்கள். அய்யா காமராஜர் பெருந்தன்மையோடு கொடுத்தது. நன்றி மறக்காதே, எத்தனை மலையாளிகள் தமிழ்நாட்டில் சந்தோசமாக வாழ்கிறார்கள், படிக்கிறார்கள், அரசு வேலையில் இருக்கிறார்கள், தொழில் செய்கிறார்கள் அனால் எம் தமிழ்மக்கள் இன்னும் தோட்ட தொழில் செய்து கொண்டு உங்கள் கம்யூனிஸ்ட் தொழில்சங்ககளிடம் படும் பாட்டை விரிவாக சொன்னால் உன் மானம் நாறிவிடும். எதோ இன்னும் நங்கள் பொறுமை காத்து கிடக்கிறோம், ஒரு வாரம் அரசியல் சாக்கடை மறந்து விழுத்தெழுந்தாள் உனக்கு தெரியம்டி மாப்ளே.  
by M Mukunthan,Munnar,India    11/7/2009 5:54:38 AM IST
 Karunanidhi should appoint TRBalu for this job. Like sethusamudram project here also TRB should jump between sky & earth and try to bring name for his guru. At sethu they want to break something, here they want to put a break for something. fantastic logic. chemmozhi chemmal should ask in his own style whether Achu studied in any engg college {like lord Ram} to construct a new dam. vaazhga naamam  
by k kumar,chennai,India    11/7/2009 5:19:27 AM IST
 மத்திய தொழில் பாதுகாப்பு படையை பணியில்ஈடுபடுத்தினால், அணை உடையும் போது அவர்கள் காப்பாற்றுவார்களா? இந்த அணை உடைந்தால் 40 லட்சம் மக்களின் உயிர் உடைமைகள் அரபிக்கடலுக்கு அடித்துச் செல்லப்படும். இவர் சொல்வதை பாக்கிறபோது ,அணைக்கு பாதுக்கப்பு அவசியம் தேவை படுவது உண்மையான தெரிகிறது.இவர்கள் அரசியல் நடத்துவதருக்கு எதுவேனா செய்யல்லாம்,ஏன் அணை உடைய காரணமாக கூட இருக்கலாம்.பாதுக்கப்பு கேட்டதுக்கு அவர் சொல்லும் பதில் அப்படி இருக்கு.திரும்ப படிங்க ,,......
மத்திய தொழில் பாதுகாப்பு படையை பணியில் ஈடுபடுத்தினால், அணை உடையும் போது அவர்கள் காப்பாற்றுவார்களா?-இதுக்கு என்ன சொலுவது எப்படி நினைப்பது ??? 
by kalai raja,trichy,India    11/7/2009 2:40:03 AM IST
 யோவ் பிட்சுதனந்தரே! ஸாரி அட்சுதனந்தரே! டாம் உடைஞ்சிரும், டாம் உடைஞ்சிரும் சொல்லிடே இரும், ஒரு நாள் இல்லாட்டி ஒரு நாள் நிஜமாவே நில அதிர்ச்சி வரும்,ஆனா அப்போ இந்த டாம் மட்டும் அல்ல கேரளாவில் உள்ள இருபது டாமும் அழியும்.எங்க மக்களோட சாபத்துக்கு ஆளாகாதே!
மடயன்,மலப்புரம்,பாலக்காடு.  
by T மடயன்,மலப்புரம்,பாலக்காடு.,India    11/7/2009 12:50:43 AM IST
Post Your Comments for the Article

 

Your Name  :
Initial : Name :
Your Email Id :
Your city (or) location  :  
Your country  :  
Your Comment:
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)


மேலும் முதல் பக்க செய்திகள்
» தினமலர் முதல் பக்கம்
  இ-பேப்பர்