
சென்னை :தமிழகம் முழுவதும் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. தென்மேற்கு வங்கக் கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை தொடர்ந்து நீடிப்பதால், கடலோர மாவட்டங்களில் புயல் அபாயம் ஏற்பட்டுள்ளது. சூறைக் காற்றுடன் பலத்த மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
தமிழகத்தில் பெய்துவரும் வடகிழக்கு பருவமழை, கடந்த சில தினங்களாக வலுவடைந்துள்ளது. சென்னை முதல் குமரி வரை பகல், இரவு என்றில்லாமல் மழை வெளுத்து வாங்குகிறது. இதனால், மாநிலம் முழுவதும் உள்ள ஏரி, குளம், அணைகள் உள்ளிட்ட அனைத்து நீர்நிலைகளும் மள, மளவென நிரம்பி வருகின்றன.தொடர்ச்சியாக கனமழை பெய்து வருவதால், காவிரி டெல்டா மாவட்டங்களில் விவசாய நிலங்களில் பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது. 60 ஆயிரம் எக்டேர் பரப்பிலான பயிர்கள், வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. கால்நடைகள் உயிரிழப்பும் அதிகரித்துள்ளது. இதற்கிடையே, மழை காரணமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை 13 ஆக அதிகரித்துள்ளது.நாகையில் கொட்டித் தீர்க்கும் அடைமழையால், சம்பா பயிர்கள் நீரில் மூழ்கின. மக்களின் இயல்பு வாழ்க்கையும் பாதித்துள்ளது. மயிலாடுதுறையில் பெய்துவரும் கனமழையால், கிளை சிறைச்சாலையின் மதில்சுவர் நேற்று மாலை இடிந்து விழுந்தது.
மழையினால் ஏற்படக் கூடிய பாதிப்புகளை கண்டறிந்து, உரிய நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. சென்னை நகரில் இடைவிடாமல் தொடர்ச்சியாக மழை பெய்து வருவதால், நகரின் தாழ்வான பகுதிகள் வெள்ளத்தில் சிக்கி தத்தளித்து வருகின்றன.பாதிக்கப்பட்ட மக்களுக்கு, சென்னை மாநகராட்சி நேற்று உணவுப் பொட்டலங்களை வழங்கியது. துணை முதல்வர் ஸ்டாலின், நகரின் பல்வேறு பகுதிகளுக்கு நேரில் சென்று மழை பாதிப்புகளை பார்வையிட்டார்.
இதற்கிடையே, மாநிலம் முழுவதும் பருவமழை மேலும் தீவிரமடைந்துள்ளது. தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலை தொடர்ந்து நீடிப்பதால், கடலோர மாவட்டங்களில் புயல் அபாயம் ஏற்பட்டுள்ளது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பலத்த காற்றுடன், கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை மையம் எச்சரித்துள்ளது.
இது குறித்து, சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் ரமணன் கூறியதாவது: தென்மேற்கு வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுநிலை, தெற்கு ஆந்திர கடலோர மாவட்டங்கள், தமிழக கடலோர மாவட்டங்கள் மற்றும் மன்னார் வளைகுடா வரை நிலைகொண்டுள்ளது. இதனால், அடுத்த இரண்டு நாட்களுக்கு தமிழக கடலோர மாவட்டங்கள் உட்பட அனைத்து மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் பலத்த மழை பெய்யக் கூடும்.தமிழகம், புதுச்சேரியில் ஆழ்கடல் பகுதியில், வடகிழக்கில் இருந்து கிழக்கு திசையை நோக்கி மணிக்கு 45 முதல் 55 கி.மீ., வேகத்தில் பலத்த காற்று வீசலாம் என்பதால், மீனவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.இவ்வாறு ரமணன் கூறினார்.
நேற்று காலை 8.30 மணி நிலவரப்படி, அதிகபட்சமாக செங்குன்றம், சென்னை விமான நிலையம், மதுராந்தகம், சோழவரம் ஆகிய இடங்களில் 14 செ.மீ., மழை பதிவாகியுள்ளது. சென்னை நகரில் நேற்று மாலை 5.30 மணி நிலவரப்படி, 14 செ.மீ., மழை பெய்துள்ளது. பொன்னேரி, கடலூரில் 13 செ.மீ., சென்னை, பாபநாசம், மணிமுத்தாறில் 10, செய்யாறு, ஸ்ரீ பெரும்புதூர், கொரட்டூர், திருவள்ளூர், சீர்காழி, கொள்ளிடம், அம்பாசமுத்திரம் ஆகிய இடங்களில் 9, காஞ்சிபுரம், தாம்பரம், சிதம்பரம், பூண்டி, தாமரைப்பாக்கம் ஆகிய இடங்களில் 7, மயிலாடுதுறை, நாகை, வேதாரண்யம், செங்கோட்டை ஆகிய இடங்களில் 4 செ.மீ., மழை பதிவாகியுள்ளது.ராமநாதபுரம், தொண்டி, ஆயக்குடி, நாங்குனேரி, தென்காசி, சாத்தான்குளம், திருச்செந்தூர், கன்னியாகுமரி ஆகிய இடங்களில் தலா 3 செ.மீ., மழை பெய்துள்ளது.
| வாசகர் கருத்து |
மழை இறைவனின் கருணை. நிதி தமிழனின் தலைஎழுத்து. நீரின்றி அமையாது உலகு என்பதை தண்ணி கடை திறக்கணும்னு தப்பா புரிஞ்சுண்டாரோ?
|
by n karthik,nagpur (Chennai),India 11/8/2009 8:21:41 PM IST |
Even normal rainfall of a few cms is flooding the streets and rendered thousands homeless.This is recurring every year.This sorry state of affairs clearly reveals the ulterior motive of the people in power.Instead of distributing colour TVS let the state govt implement schemes to conserve water and provide toilet facilities to the poor people with running water. B.Sukumaran
|
by B Sukumaran,ernakulam,India 11/8/2009 6:07:20 PM IST |
தண்ணீரை சேகரிங்கள்!! அரசு வழிவகுத்து கொடுக்கவேண்டும்!
|
by A முருகன்,ERODE,ERODE,India 11/8/2009 4:34:19 PM IST |
At the first i want to say thanks to our CM and Dupty CM. Because they did lot of gud jobs to our middle and low class people. But Every year, Raining season our chennai become very worst. we cant to walk. We find difficult to go to office, Schools and do our day to day work. Please take some precaution action before the rain season.
|
by s Hari,Chennai,India 11/8/2009 2:51:41 PM IST |
Its all bcos of Constructing Flats, homes and Industries in Lakes n Govt Revenue Land.. Sholinganallur is d only way for SOUTH MADRAS to evacuate water into SEA.. And abt 1000''s of ACRES well Accompanied by IT CORRIDORS without water draining Facilities.. DMK is meant for CORRUPTION n did it well for transfering the GOVT REVENUE LAND to IT''s comparing to ADMK. Anyway Dis time they took some precautionary Steps n drained d water well in some Areas.. Hats off to DMK..
|
by R Jabes,Chennai,India 11/8/2009 2:27:05 PM IST |
Don''t compare the oppostion, just see how the current government is taking the efforts. If opposition is very bad, does it mean MK govt. you just take good efforts is fine? They actually need to the best ever or very good. 13 peoples died and lakhs suffering. Government knows how to collect tax only. Don''t know to solve the taxpayers (Common people) problems?
|
by Mr Mohan,Coimbatore,India 11/8/2009 1:56:22 PM IST |
we need Kamaraj not Modi.
|
by a அரசன்,chennai,India 11/8/2009 11:42:46 AM IST |
காமராஜ் போன்ற மேதை மீண்டும் வர வேண்டுமா ?ம்...ம்.நடக்கிற காரியமா ?
|
by R BALU,boston,United States 11/8/2009 10:07:05 AM IST |
We Need to save the rain water for future.
|
by J Karnan,dubai,India 11/8/2009 9:56:05 AM IST |
due to rain ப்ளீஸ் postpaned the anna university exams...........
|
by v. சதீஸ் ,theni,India 11/8/2009 9:38:06 AM IST |
தண்ணீரை சேகரிங்கள்!! அரசு வழிவகுத்து கொடுக்கவேண்டும்! ராஜா/அமிரிக்கா
|
by T.K ராஜா குமார் ,parma,United States 11/8/2009 9:08:40 AM IST |
The doles offerd to the affected people will fecth more votes than any advance action to prvent flood . Polticians can get more money on supply water through tankers than through pipelines.Why bother about wastage of drinking water.
|
by K Lakshmanan,Chennai-40,India 11/8/2009 7:22:43 AM IST |
மழை இல்லை என்றாலும் கலைஞரை திட்டுரீங்க ! வந்தாலும் அவர திட்டுறீங்க ! சென்னைல லாஸ்ட் வருசத்த விட நல்ல மழை பெயஞ்சலும வெள்ளம் எளிதாக வடிவதற்கு காரணம அவரோட அரசு செஞ்ச முன்னேற்படுகள்தான் ! நீங்க விரும்பற அம்மா இப்பவும் கொடநாடு எஸ்டேட் பற்றித்தான் கவலை படுறாங்க ..கொஞ்சம் ஜெயா டிவி நியூஸ் அ பாருங்க.. சென்னை ரோடு ல இறங்கி பாருங்க ஸ்டாலின் அ கார் எவ்ளோ ஏரியா கவர் பண்ணி நிவாரண பணிகலை முடுக்கி விடுரர்னு therium
|
by M ராமலிங்கம்,Chennai,India 11/8/2009 7:07:08 AM IST |
ஜெய் கணேஷ், நமக்கு தேவை திரு மோடி
|
by p venkatesh,KURNOOL,India 11/8/2009 7:05:26 AM IST |
மத்தூர்ரில் நன்றக மழை பெய்யட்டும்
|
by n.c.siva N.C.சிவா,tiruttani maddur,India 11/8/2009 6:23:13 AM IST |
I appreciate Mr. JG.. Want to repeat his words, We in TN are becoming more and more backward and just one family is amassing wealth and positions at the cost of 4.5 crores Tamilians, who are suffering even for day to day living! We need a Shri. Kamaraj like person to head our state!!
|
by K Manohar,Noida,India 11/8/2009 6:06:04 AM IST |
our chief minister should take urgent top actions in conserving the rain water.Just because the earlier water conservation schemes are made by JJ he should not hesitate to implement these with more vigor.
|
by K sreenivasan,Japan,India 11/8/2009 5:39:50 AM IST |
Instead of spending money of populist schemes like color TVs the govt should have spent on revamping the Dams, lakes and small ponds. Come summer as usual we will have a huge water shortage and people will wait and walk for miles to get pots of water! This is pathetic at best. Very irresponsible Govt at best. I''m ashamed being a Tamilian and living in TN! Look at Gujarat, that man Shri.Narendra Modi despite all the controversies is leading the torch, for the whole nation to adopt! We in TN are becoming more and more backward and just one family is amassing wealth and positions at the cost of 4.5 crores Tamilians, who are suffering even for day to day living! We need a Shri. Kamaraj like person to head our state!!
|
by JG ஜெய் கணேசன்,Kumbakonam,India 11/8/2009 2:15:19 AM IST |