
"இந்தியாவின் இதயம் அதன் கிராமங்களில் இயங்குகிறது' என்றார் காந்தி. பல கோடி மக்கள் கொண்ட இந்தியா, பல அன்னிய ஆக்கிரமிப்புகளுக்குப் பிறகும், தனது உயிரோட்டத்தை இழக்காதிருப்பது, விவசாய மக்களின் தன்னலமற்ற உழைப்பால் தான்!இந்த உண்மையான தேச பக்தர்களுக்கு, அரசு மற்றும் அரசியல்வாதிகள் செய்த கைம்மாறு என்ன? சதா, சர்வ காலத்திற்கும் விவசாயிகள், ஏழ்மை, பசி பட்டினி, அறியாமை, நோய் நொடியில் துன்பப்பட வேண்டும் என்பது தான், இவர்களின் அந்தரங்க ஆசை போலும்.
விடுதலை பெற்று 60 ஆண்டுகள் கடந்த பின், இந்திய விவசாயிகளின் வாழ்க்கைத் தரம், இம்மியளவு கூட உயராமல் இருப்பதன் காரணம் தான் என்ன? அடுத்தடுத்து பதவிக்கு வரும் அரசியல் கட்சிகள், இந்திய மக்கள் தொகையில் 80 சதவீதத்திற்கும் மேலாக கிராமங்களில் வசிக்கும் விவசாயிகளையும், அவர்களின் பரம்பரைத் தொழிலான விவசாயத்தையும் பாழ்படுத்தியது தான், கைம்மாறு போலும்.சமீப காலத்தில், கிராமப்புற மற்றும் நகர்ப்புற ஏழை வாக்காளர்களைக் கவர்ந்து, மிக எளிதில் அவர்களின் ஓட்டுகளைப் பெற்று, பதவி சுகத்தை அனுபவிக்கவும், கோடிகள் குவிக்கவும் அரசியல்வாதிகளால் கண்டுபிடிக்கப்பட்டு, மிகச் சிரத்தையுடன் செயல்படுத்தப்பட்டு வருபவை தான், அரசின் இலவச மற்றும் சலுகைத் திட்டங்கள்.இதனால், உடலுழைப்பில், விவசாயிகள் கொண்டிருந்த அதீத நம்பிக்கையை இழக்கச் செய்துள்ளனர். "தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டம்' என்ற பெயரில், மத்திய அரசால் துவங்கப்பட்டு, கிராமப்புறங்களில் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டத்தால், கிராமங்கள் சோம்பேறிகளின் உறைவிடங்களாக மாறி வரும் சூழ்நிலை உருவாகியுள்ளது.
வருடத்தில், 100 நாட்கள் வேலை உத்தரவாதமளிக்கும் இத்திட்டத்தால், பெரும் பாதிப்புக்கு உள்ளாகியிருப்பது விவசாய வேலைகள் தான். தினக்கூலியாக 80 ரூபாய் பெறும் விவசாயி, ஆண்டுதோறும் பல ஆயிரங்கள் விவசாயத்திற்காக செலவு செய்து, இறுதியில் தான் பட்ட கஷ்ட நஷ்டங்களைத் தவிர்க்க, பரம்பரைத் தொழிலான விவசாயத்தை கைவிடும் நிலை ஏற்பட்டுள்ளது.இப்படி கிராமங்கள் தோறும் விவசாயிகள், விவசாயத்தை கைவிட முயன்றிருப்பதால், அதிவிரைவில் உணவு, தானியங்கள் பற்றாக்குறை ஏற்பட்டு, அவற்றை வெளிநாடுகளிலிருந்து பல கோடி ரூபாய் செலவு செய்து இறக்குமதி செய்யும் அவல நிலை ஏற்படும்.தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில், பொய்யான பெயர் எழுதப்பட்டு, பணம் கையாடல் செய்யப்படுகிறது. பல கிராமங்களில், 80 ரூபாய்க்கு பதிலாக, குறைவான தொகை கொடுத்து பணம் சுருட்டப்படுகிறது. இப்புகாரால், ஊராட்சித் தலைவர்கள் பதவி நீக்கமும் செய்யப்பட்டுள்ளனர்.
இப்போது, 100 நாட்கள் வேலைக்கு பதிலாக, 150 நாட்களாக அதிகரிக்க இருப்பதாக, தகவல்கள் தெரிவிக்கின்றன. இது, அரசின் தொலைநோக்குப் பார்வையா அல்லது கிட்டப் பார்வையா என்பது புரியவில்லை.உடலுழைப்பின்றி, உண்ணவும், உடுக்கவும், கவலையின்றி படுத்துறங்கவும், வாய்ப்பு கிடைத்துவிட்ட நிம்மதியில், திருப்தி கண்டுவிட்ட விவசாயி, இனி உழைப்பை மூலதனமாகக் கொண்டு, வேளாண் தொழில் பக்கமே தலைவைத்து படுக்க மாட்டான்.இந்த, 100 நாள் வேலை திட்டத்தால், அரசுக் கருவூலம் காலியாவதோடு, விவசாயத்தை கைவிட்டு விட்ட விவசாயி, சோற்றுக்காக பிறரிடம் கையேந்தும் பரிதாப நிலை தான் ஏற்படும்.வேளாண் தொழில் தழைக்க, விவசாயிகள் பயனடைய, கிராமங்கள் வளர்ச்சி பாதையில் நடை போட, முதலில் சுயநலப்போக்கை கைவிட்டு, நாட்டின் மீது, நாட்டு மக்கள் மீது, அரசியல்வாதிகளும், மத்திய - மாநில அரசுகளும் உண்மையான அக்கறை கொள்ள வேண்டும். பதவியில் அமர்ந்து, மக்கள் வரிப்பணத்தை கொள்ளையடிப்பதை அறவே கைவிட வேண்டும்.வேளாண் தொழில் வளர்ச்சி காண, கீழ்கண்ட திட்டங்களை முழு மூச்சுடனும், இதய சுத்தியுடனும் செயல்படுத்த வேண்டும்.
* விவசாயத்திற்கு ஆதாரமாக இருப்பது தண்ணீர். எனவே, புதிய ஏரி, குளம், கண்மாய்கள், கால்வாய்கள் வெட்டப்பட வேண்டும். மாநிலத்தில் ஓடுகிற அனைத்து நதிகளையும் இணைத்து, மழைக்காலங்களில் கிடைக்கும் மழைநீரை கால்வாய்கள் மூலம், ஏரி, குளங்களில் நிரப்பச் செய்து, கோடையில் ஏற்படும் தண்ணீர் பற்றாக்குறையை தவிர்க்க வேண்டும்.
* தரமான நல்ல விதை, உரம், பூச்சிக்கொல்லி மருந்துகள் தட்டுப்பாடில்லாமல், விவசாயிகளுக்கு அரசு இலவசமாக அல்லது குறைந்த விலையில் வழங்க வேண்டும்.
* விவசாயிகளுக்கு வட்டியில்லா கடனும், இயற்கை இடர்ப்பாடுகள் நேரும் போது, அக்கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும்.
* வேளாண் விளைபொருட்களை விவசாயிகளிடமிருந்து அரசே நேரடியாக கொள்முதல் செய்து, ரேஷன் கடைகள் மூலம் பொதுமக்களுக்கு குறைந்த விலையில் வினியோகம் செய்ய வேண்டும்.
* வியாபாரிகளையும், இடைத்தரகர்களையும் எக்காரணம் கொண்டும் விவசாயிகளிடமிருந்து விளைபொருட்களை அடிமாட்டு விலைக்கு வாங்க, அனுமதிக்கக் கூடாது. இதற்கான சட்டத்தையும் அரசு கொண்டு வர வேண்டும்.
* விளைபொருட்களுக்கு லாபகரமான விலையை, அரசு நிர்ணயம் செய்ய வேண்டும்.
* அன்னிய செலாவணியை ஈட்டித் தரும் காட்டாமணக்கு விதை உற்பத்தி, மூலிகை செடிகள், வாசனை பூச்செடிகள் வளர்ப்பில், விவசாயிகள் ஈடுபட ஊக்குவித்து, அவற்றை சந்தைப்படுத்த, அரசே உத்தரவாதம் அளிக்க வேண்டும்.
* கிராமப்புறங்களில், விவசாய உபதொழில்கள், குடிசைத் தொழில்கள் துவங்க, அரசு நிதியுதவி செய்ய வேண்டும். இதற்கு அனைத்து கிராமப்புறங்களிலும் தேசிய மயமாக்கப்பட வங்கிக் கிளைகளை திறக்க வேண்டும்.
* கிராமப்புற இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்க, சிறிய மற்றும் நடுத்தர தொழிற்சாலைகளை அரசு நிறுவ வேண்டும்.
* ஊரக வளர்ச்சிக்குத் தேவையான உள்கட்டமைப்புகளை கிராமப்புறங்களில் அரசு உருவாக்க வேண்டும்.இவற்றையெல்லாம் நிறைவேற்றினால் மட்டுமே அரசு, தன்னை உண்மையான மக்கள் நல அரசு என்று கூறி, பெருமைப்பட்டுக் கொள்ள முடியும்.
-ஜி.கிருஷ்ணசாமி-
கூடுதல் காவல் துறை
கண்காணிப்பாளர் (ஓய்வு)
| வாசகர் கருத்து |
The Goverment Use the project to the dry placess of the country. not for the delta area.If the project will continues in the delta agriculture area.Mr.krishnamurthi point is 100% currect.
|
by s ganesan,p.velur,India 11/11/2009 11:14:13 PM IST |
அருமையான கட்டுரை. நமது அரசாங்கம் அனைத்து மக்களையும் பிச்சைகாரர்களாக மாற்றி விட நினைக்கிறது.நானும் ஒரு பரம்பரை விவசாய குடும்ப தொழிலில் இருந்து வெளியேறிய லட்சம் பேர்களில் ஒருவன்
|
by s chidambaram,abudhabi,United Arab Emirates 11/10/2009 8:12:48 PM IST |
people who come to power by giving money during election time , only rule the country like this.they are avoiding agriculture directly by implementing such schemes. all village peoples are becoming very lazy today . we the agriculturists do not want anything free because only free ties up our hands
|
by A GOVIND,coimbatore, pollachi,India 11/10/2009 6:55:49 AM IST |
மிகவும் அருமையான கமண்ட்ஸ். இப்ப உள்ள சூழ்நிலையை மிகவும் தெளிவாக சொல்லி இருகிறீர்கள். மிகவும் நன்றி. இப்படிக்கு இந்த நூறு நாள் வேலை வந்ததல் பாதிக்கப்பட்ட
|
by c venkatraman,kumbakonam,India 11/9/2009 7:36:56 PM IST |
தயவுசெது அனைவரும் இதைப்பற்றி சிந்தியுங்கள் நன்றி
|
by Nallappan,singapore,India 11/9/2009 5:08:42 PM IST |
ஊரக வேலைவாய்ப்பு திட்டம் ஒரு நல்ல திட்டமே. அனால் அதை நடைமுறை படுத்தும் முறை தான் தவறு. மற்றும் அதனை சோதிக்கும் அளவுகோல் என்ன என்பதும் ஒரு பெரிய கேள்வி குறி ஆகும். இந்த வேலை வாய்ப்பை விவசாயம் பண்ண முடியாத காலங்களில் நடைமுறை படுத்த வேண்டும், எனவே விவசாய வேலைக்கு ஆள் கிடைக்காத நிலை ஏற்ப்படாமல் தடுக்கலாம். இந்த வேலை வாய்ப்பை மழை நீர் சேமிப்பு, கால்வாய் சீரமைப்பு மற்றும் கண்மாய் தூர் வாருதல் போன்ற விவசாயம் சார்ந்த பணிகளுக்கு பயன்படுத்தலாம். எல்லாவற்றிக்கும் மேலாக இந்த பணியில் ஈடுபடும் மக்கள் தங்களுக்ககவும் தங்கள் கிராம நன்மைகளுக்க்காகவும் உழைக்கிறோம் என்ற மனப்பான்மையை உருவாக்க வேண்டும். பணத்திற்காக என்று நினைக்க கூடாது, தாங்களே பயனடைவோம் என்கிற போது அவர்கள் உண்மையாக உழைப்பார்கள். மேலும் வேலையற்ற படித்த கிராம இளைக்தர்களை இதில் பயன்படுத்த வேண்டும். எனவே அவர்கள் விவசாயத்தில் நாட்டம் உள்ளவர்களாக சிறந்த உழைப்பாளிகளாக உருவாக்க முடயும். ஏனெனில் நம் இந்திய நாட்டின் முதுகெலும்பு கிராமும் விவசாயமும் என்பதை நாம் மறந்து விடக்கூடாது. விவசாயிகளின் முன்னேடர்த்திற்கு அரசு பல உதவிகளை செய்து வருகின்றது என்பதையும் நாம் மறுப்பதற்கு இல்லை, ஆனால் அந்த உதவிகள் சரியானபடி அவர்களை சென்று சேர்வது அதிகாரிகளின் கைகளில் உள்ளது.
|
by D Anbuchelvan,Dubai,United Arab Emirates 11/9/2009 1:54:59 PM IST |
நல்ல சிந்தனை. இந்திய நாட்டின் மொத்த வர்த்தகத்தில் ஐம்பத்து சதவிகிதத்துக்கு மேலே லாபம் விவசாய பொருட்களில் இருந்து தான் கிடைக்கிறது. உள்நாட்டிலே விவசாயத்தை முடக்கி, இறக்குமதியை பெருக்கி அதில் தரகர் வேலை பார்க்கும் கட்சிகாரர்களுக்கு லாபம் ஈட்ட தான் இந்த திட்டமோ என்னவோ.. ?
|
by Mr இராமசாமி பிரபு ,US,India 11/8/2009 9:36:15 PM IST |
நானும் ஒரு பரம்பரை விவசாய குடும்ப தொழிலில் இருந்து வெளியேறிய லட்சம் பேர்களில் ஒருவன் vivasaaya kooli வேலைக்கு aallu yaarum varamaatenguranga.. மக்களை இலவசங்க்ள மூலம் ஏமாற்றி முட்டாள்களை உருவாக்கும் அரசுக்கு நல்ல உபதேசம்
|
by P Murugan,Thiruvannamalai,India 11/8/2009 7:21:26 PM IST |
சார் , நீங்க சொல்வது நூறு சதவிதிதம் உண்மை ! ஆனால் இதை ஏன் பதவியில் இருக்கும்போது சொல்ல மாட்டேங்கரீங்க ..
|
by P SARAVANAN,dammam,Saudi Arabia 11/8/2009 7:15:15 PM IST |
I noticed most of the folks mentioning about labour worker''s unavailability, that shows we are getting lazy. In this matter, I would say we should be willing to do our own household work (as Gandhiji did). W.r.t farming, I agree that the folks who made money [in last 10 yrs ..say IT/Medicine etc] should start investing in farming land to promote agriculture only this can save these lands from getting converted to industry land. Govt can say Rs. 100,000 investment made in agriculture will get tax rebate, this will definetly force lot of youngsters to invest in this field.
|
by N ராஜேஷ்,Virudhunagar,India 11/8/2009 7:09:48 PM IST |
நிலமற்ற ஏழைக்கு தான் இத்திட்டமே தவிற ! உங்களைப் போல பாசிஸ்டுகளுக்கு இல்லை// 100நாள் திட்டத்தை விவசாய பனிக்கு திருப்பலாமென்ற யோசனை திட்டத்தை விடுத்து ஏழை வயிற்றில் அடிக்காதீர்// அரசையும் குறை சொல்லாதீர்//
|
by muthu karthi,sathyamangalam,India 11/8/2009 6:57:56 PM IST |
என் மனதில் இருந்ததை அப்படியே சொல்லி விட்டீர்கள். ஒட்டுக்காக அரசியல் வாதிகள் செய்கிரர்கள். என்ன செய்ய முடியும் நம்மால் மக்களும் திருந்தவேண்டும்
|
by s ராமலிங்கம்,mysore,India 11/8/2009 6:32:05 PM IST |
நல்ல கட்டுரை ....இதுவரை நான் படித்த பதில்கள் எல்லாம் கேள்வி சாரமாகவே உள்ளன. - நம்மால் முடியுமா ? அல்லது ''இது ஒவ்வொருவர் மனதிலும் இருக்கிறது '' என்பன . அனால் இதை எப்படி செயலாக்கத்தில் கொண்டுவருவது ?
|
by Mr அருண்,London,United Kingdom 11/8/2009 5:05:40 PM IST |
This is 100% correct. Many people who has land of 1 to 5 acres not interested to do the farming and they want to do it only for self. This is because of of not getting the daily wages employees. Everyone is asking for easy work. If any one of you aware of 100 day job. Here is the schedule which I saw it personally in many places. 10 am - go to job, 11 am get the location, 11:30 to 1:30 PM - work (mostly on non productive related to cleaning the viliage roads), 1:30 PM to 3:00 PM - lunch and rest, 3:00 PM to 4:30 PM - again cleaning. Tell me if anyone of us who is working in any part of the world will get a salary + free gas, 1 rupee Rice, free TV. Soon you will see the raise in food price because of small farmer could not get any labors for work and they want to produce only for self.
|
by K சம்பத்,Chennai,India 11/8/2009 3:50:20 PM IST |
கிருஷ்ணமூர்த்தி அய்யா அவர்களுக்கு நன்றி. ''நம்மால் முடியாதது எதுவும் இல்லை'' கடலுக்குள் தூக்கிப்போட்டால் உயிர்காதுக்கொள்ள கரையை தேடி நீந்துகிறோமே அதுபோல நாம் உழைப்பதற்கான சந்தர்பத்தை உருவாக்க வேண்டும். முதலில் நம்மால் முடியுமா? நமது நாடு திருந்துமா? என்ற சந்தேக கேள்விகளை தூக்கிபோட்டுவிட்டு நம்பிக்கை என்ற நாற்றை ஊன்றினால் தான் நாளை நாமும் கதிர் அறுக்கலாம். எதிர்மறையான கேள்விகளை தூக்கி எறிந்துதான் இன்று பலநாடுகள் முன்னுக்கு வந்துள்ளன. அதைப்போல் நாமும் விரைவில் முன்னேறுவோம்.
|
by s Bhoopathirajan,Madurai,India 11/8/2009 3:48:24 PM IST |
ரொம்ப நல்ல சொன்னிங்க கிருஷ்ணமூர்த்தி. ஆனா யாரு உங்கள கேட்க போரங்க. இன்டியாவ கடவுள்தான் காப்பாதனும்.
|
by V. Pandian,Sanaa,Yemen 11/8/2009 1:13:46 PM IST |
கிருஷ்ணசாமி அய்யா சொன்ன அனைத்தும் உன்ன்மையே. இன்று சிறு வீட்டுவேலைக்கு கூட ஆட்கள் கிடைப்பது கடினம். எனென்றால் உழைக்க யாருக்கும் விருப்பம் இல்லை.சிறு வேலைக்கு அதிக சம்பளம் கேட்கிறார்கள்.சோம்பி திரிகிறார்கள். இது மலிவு விலை அரிசயும், மலிவு கூலியும் செய்யும் வேலை .......ரகு...பெங்களூர்
|
by d ரகு,bangalore,India 11/8/2009 12:52:26 PM IST |
VERY GOOD ARTICLE, I ASK THE DINAMALAR EDITOR TO TRANSLATE AND SEND TO INDIAN GOVT. EVERY BODY SHOULD MAIL THIS ARTICLE TO CENTRAL GOVT.
|
by M FAROOQUE,dammam-saudi ,Saudi Arabia 11/8/2009 12:49:28 PM IST |
உண்மையிலேயே மிக சிறப்பான சிந்தனை , மக்களை இலவசங்க்ள மூலம் ஏமாற்றி முட்டாள்களை உருவாக்கும் அரசுக்கு நல்ல உபதேசம்
|
by P BALAMURUGAN,Bahrain ,Bahrain 11/8/2009 12:26:35 PM IST |
சார், ஒரு நல்ல கட்டுரை, ஆனால் செவிடன் காதிலே சங்கு ஊதற மாதிரி எத்தனையோ பேர் தலை<யிலே முட்டிகிட்டங்க, ஆனல் இந்த நாட்டை கபோதிங்கே கையிலே கொடுத்துட்டு இப்ப நம்மே முழிக்கிறோம். கடவுளே வந்தாலும் இந்த தேசத்தை கப்பாத்துறது ரொம்ப கஷ்டம். ஆனா ஆசைப் படறோம். சூப்பர் பவர் அஹாகணும்னு. இந்த ஜென்மத்துல விடிவு காலம் வருமோ.
|
by M ஜானகிராமன்,Coimbatore,India 11/8/2009 12:24:17 PM IST |
ஆசிரியரே, நீங்கள் எழுதிய இந்த கட்டுரை மிகவும் தவறு . இதுவும் ஒரு விவசாயியை அடிமைத்தனமாக்குகின்ற செயல் .ஏன் என்றால், நானும் ஒரு விவசாய குடும்பத்தில் இருந்து வந்தவன். இந்த அரசு ஏன் 100 நாட்கள் வேளை தருகிறது என்றாள் ஒரு விவசாயி ஆறு மாதம் மட்டும் தான் விவசாயம் செய்கிறான் .பின் மழை இருக்காது. அந்த சமயம் தான் இந்த அரசு வேலை கொடுக்கிறது. இது நல்லதுதானே . ஏன் குறை சொல்லுகிறீர்கள்.அது மட்டும் இல்லாது, அரசு நேராக கொள்முதல் செய்தால் இன்னும் விவசாயி பதிக்கப்படுவான் .ஏன் என்றால் நீங்கள் நேரடியாக அங்கே சென்று பார்த்தால் தான் தெரியும். எதோ எழுதுகிறீர்கள் ஆசிரியரே. அடுத்து இப்போ உள்ள விளைநிலங்கள் எல்லாம் குடியுருப்பு பகுதிகளாக மாறிக்கொண்டிருக்கிறது .இப்போ விவசாயம் செய்யும்போது வேலைக்கு அட்கள் கிடைப்பது மிக மிக கடினம் .ஏன் என்றால் கட்டுமான துறையில் நல்ல வருமானம் கிடைக்கிறது. அதனால் விவசாயம் பாதிக்கிறது. குறைந்து கொண்டு இருக்கிறது .எனவே நடுநிலையாக எழுதுங்கள். நீங்கள் நகரில் இருந்தால் உங்களுக்கு எப்படி தெரியும் அணைத்து நிலவரமும் .இன்னும் நிறைய இருக்கிறது. எனவே நன்றாக தெரிந்து பின் எழுதவும் .மேலே உள்ளதில் 50 சதவிகிதம் தவறு........ <ணீ>
|
by kall karim,riyadh,India 11/8/2009 11:57:18 AM IST |
vivasaaya kooli வேலைக்கு aallu yaarum varamaatenguranga...
|
by km viswanathan,Bhubaneswar,India 11/8/2009 11:21:34 AM IST |
Sir, We 100% agree with your views. we have to find a alternative solution to save our farmers /country, otherwise it wil become another africa. SAR
|
by S aliyar,U.A.E,India 11/8/2009 10:52:55 AM IST |
I was thinking to start agriculture and horticulture because you can see many of the case studies says that the demand for food will be increased in upcoming years. so we need to contribute our self to improve the village agricultural techniques. why i am saying means if you think personally definitely you might from the village or village based area so why can''t we help the people to acquire knowledge in the new agriculture system. definitely most of the people will come back to agriculture as the recession affect lot.
|
by R Jegadeeswaran,Ramanathapuram,India 11/8/2009 10:27:45 AM IST |
Farmers are not interesting now adays to cultivate bcoz they are not getting the profit in that and some one getting profit in between. Govt also not helping them and not fixing good prices particularly for paddy. Every year area of cultivation shrinking bcoz of this non profitable business and farmers wants their sons and daughters not to work in the fields. Agriculture is the difficult work and no profits in that ultimately then who will continue that. Banks are cheating mostly and not enough rain many times then how can they do. It is like gambling every year if mansoon not sufficient. Govt should plan properly to support the peoples otherwise very soon we need to import food items.
|
by விஜய்,Singapore,India 11/8/2009 10:13:41 AM IST |
நீங்கள் சொல்வது 100% உண்மை. இதை implement பண்ண உண்மையான நேர்மையான அரசு தேவை. அனால் கண்ணுக்கு எட்டிய தூரம் வரை அதற்கான வாய்ப்பு இருப்பதாக தெரியவில்லை - ரமேஷ்
|
by A Ramesh,Singapore,Singapore 11/8/2009 10:10:04 AM IST |
நல்ல நாட்டுக்கு தேவையான கட்டுரை. அரசியல்வாதிகள் படித்து திருந்த வேண்டும். இல்லையேல் சீக்கிரம் உணவு பஞ்சம் வந்து விடும், உலகுக்கு விவசாயம் கற்று கொடுத்த தமிழனுக்கு விவசாயம் மறந்துவிடும்
|
by r velu,tenkasi,India 11/8/2009 9:32:32 AM IST |
மிகவும் அருமையான கட்டுரை. வெளியிட்டமைக்கு ஆசிரியருக்கு மிக்க நன்றி . ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தின் கீழ் வேலை செய்வோரை நான் நேரடியாக பார்த்து கொண்டுதான் இருக்குறேன் . அவர்களின் வேலை பளுவே இல்லாதது . மனிதன் இலகுவாக பணம் எப்படி பெறலாம் என்றுதானே பார்ப்பான் . எப்படி எல்லாம் ஓய்வு எடுக்க முடியுமோ அப்படி எல்லாம் இந்த வேலை வாய்ப்பு திட்டத்தின் கீழ் நடந்து கொண்டுதான் இருக்கிறது .மக்கள் ஓட்டு போடும் இயந்திரம் தானே. இலவசம் என்றால் அந்த இயந்திரம் வேலை செயும் என்பது நம் அரசியல் தலைவர்களின் கணிப்பு .நன்றி கட்டுரையாளருக்கு .
|
by A Arumugham,Avinashi, ,India 11/8/2009 9:18:15 AM IST |
உங்கள் மனதில் தோன்றிய இந்த கருத்துக்கள் அனைவர் மனதிலும் இருக்கிறது. ஆனால் இது நம்மை ஆழ்கின்றவர்கள் மனதில் இல்லையே. ஆனாலும் உங்களின் இந்த கருத்துக்கு நன்றி .
|
by durairaj,singapore,India 11/8/2009 8:44:05 AM IST |
migavum arumaiyana sinthanai aanal enna seivathu makkal aanaivarum uzhipinri sugamaga vazhvathu eppadi endru thane ninaikirargal
|
by N VAIRAVAMOORTHI,singapore,Singapore 11/8/2009 5:40:05 AM IST |
அருமையான கட்டுரை. நமது அரசாங்கம் அனைத்து மக்களையும் பிச்சைகாரர்களாக மாற்றி விட நினைக்கிறது.எவன் ஒருவன் உழைப்பில்லாமல் சாபிடுகிறனோ அவன் வாழ்கையில் உயர மாட்டன். உதாரனமாக அனைத்து சலுகைகளும் பெரும் சமூகங்களை விட ,சலுகைகள் பெறாத சமூகங்கள்தான் இன்று உயர்ந்து உள்ளன. இந்தியா இனி வல்லரசு ஆகா முடியாது. வளராத அரசுதான் ஆகா முடியும். நன்றி G. Krisnasamy அவர்களே.
|
by A Ram,SINGAPORE,Singapore 11/8/2009 3:13:10 AM IST |
சார் , நீங்க சொல்வது நூறு சதவிதிதம் உண்மை ! ஆனால் இது நடக்குமா நம்ம நாட்டில் ?
|
by M Ilangovane,Viry chatillon,France 11/8/2009 1:32:43 AM IST |
சரியாக சொல்லியுள்ளிர்கள். நானும் ஒரு பரம்பரை விவசாய குடும்ப தொழிலில் இருந்து வெளியேறிய லட்சம் பேர்களில் ஒருவன். விரைவில் பட்டினி இறப்பு உறுதி . ஆனால் .., <-இந்தியன்
|
by v chandrasekar,COIMBATORE,India 11/8/2009 12:46:51 AM IST |