No.1 Tamil Newspaper Front Page News and Headlines Online - Dinamalar
இதை எனது முதல் பக்கமாக்கு
Get Font | Sitemap |   RSS Feed
முதல் பக்க செய்திகள் 
தமிழக அணைகளில் நீர்மட்டம் உயர்வு : பரிதாப நிலையில் சென்னை
நவம்பர் 11,2009,00:00  IST

Front page news and headlines today

கூடலூர் : பெரியாறு அணை நீர்பிடிப்பில் கடந்த இரண்டு தினங்களாக பெய்த கன மழையால் அணைக்கு நீர்வரத்து வெகுவாக உயர்ந்து நேற்று காலை நிலவரப்படி 132 அடியை எட்டியது. இரண்டு தினங்களில் 11 அடி உயர்ந்துள்ளது. 10 ஆயிரம் கன அடிக்கு மேல் இருந்த நீர்வரத்து தற்போது குறைந்து 6243 கன அடியாக உள்ளது. இதனால் நீர்மட்டம் 136 அடியை எட்டுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. தமிழகப்பகுதிக்கு நீர்திறப்பு 1200 கன அடியாக உள்ளது. மழையளவு (மி.மீ.,): பெரியாறு 6.8, தேக்கடி 7, கூடலூர் 16, வைகை அணை 25, வீரபாண்டி 15, உத்தமபாளையம் 21, மஞ்சளாறு 37, சோத்துப்பாறை 75, பெரியகுளம் 26.



வைகை அணை: மூல வைகை ஆறு,பெரியாறு, முல்லை பெரியாறு, கொட்டக்குடி ஆறு ஆகியவற்றின் மூலம் வைகை அணைக்கு நீர் வரத்து உள்ளது. சில தினங்களாக தேனி மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. நவம்பர் 8 ல் 59.25 அடியாக இருந்த அணை நீர் மட்டம், நேற்று முன்தினம் மாலை 66 அடியை கடந்தது. இதனால் முதல் வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டது. நீர் வரத்து தொடர்ந்து இருப்பதால் நேற்று மாலை நான்கு மணிக்கு நீர் மட்டம் 67.95 அடியாக இருந்தது. (மொத்த உயரம் 71 அடி). நீர் வரத்து வினாடிக்கு 4,182 கன அடியாக உள்ளது. வினாடிக்கு 1960 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது. நீர் மட்டம் 68.50 அடி ஆனதும் இரண்டாம் வெள்ள அபாய எச்சரிக்கை விடப்படும். 69 அடி ஆனதும் மூன்றாம் வெள்ள அபாய எச்சரிக்கை விடப்படும்.



பாலாறு-பொருந்தலாறு: கொடைக்கானலில் பெய்துவரும் மழையால் திண்டுக்கல் மாவட்டத்தின் பெரிய அணையான பாலாறு-பொருந்தலாறு அணை நிரம்பி வழிகிறது. பாலாறு அணையின் மொத்த உயரம் 65 அடி. நேற்றைய நீர்மட்டம் 63 அடியை எட்டியது. வினாடிக்கு 3 ஆயிரத்து 182 கன அடி நீர்வரத்துள்ளது. வினாடிக்கு 2000 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது. இந்த நீரால் கீரனூர், கோரிக்கடவு, மானூரில் உள்ள குளங்கள் நிரம்புகின்றன. 20 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் உள்ள நிலங்கள் பாசன வசதி பெறும். முன்னெச்சரிக்கையாக கரையோர கிராமங்களில் வெள்ள எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.



* வரதமாநதி அணை கடந்த சில நாட்களாக நிரம்பி வழிகிறது. குதிரையாறு அணை நிரம்பியதையடுத்து வினாடிக்கு 217 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது.



பவானிசாகர் அணைக்கு 2.56 லட்சம் கன அடி நீர்வரத்து: பவானிசாகர் அணை கட்டப்பட்டதிலிருந்து மிக அதிகபட்சமாக, நேற்று தான், 2.56 லட்சம் கனஅடி நீர்வரத்து ஏற்பட்டு வரலாற்று சாதனை படைத்தது. அணையின் நீர்மட்டம், நேற்று ஒரே நாளில், எட்டு அடி உயர்ந்தது குறிப்பிடத்தக் கது. ஈரோடு மாவட்டத்தில், பவானிசாகர் அணை நீர் மட்டம், ஜூன் மாதம் 45 அடி மட்டுமே இருந்தது. ஜூலை மாதம், கேரளாவில் பெய்த பருவமழையால், பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது. அணையின் நீர்மட்டம் 80 அடியை தாண்டியது. பாசனத்துக்காக, அணையிலிருந்து வாய்க்கால் மற்றும் ஆற்றில் தண்ணீர் 1,800 கன அடிவரை திறக்கப்பட்டது. அதனால், அணை நீர்மட்டம், நாளுக்கு நாள் குறைந்து கொண்டே வந்தது. கடந்த 1ம் தேதி, அணையின் நீர்மட்டம் 70.85 அடியாக இருந்தது. அணைக்கு நீர் வரத்து 584 கன அடி மட்டுமே இருந்தது. இருப்பினும், பருவமழையை எதிர்பார்த்து, அணையிலிருந்து ஆற்றில் 700 கன அடியும், வாய்க்காலில் 1,800 கன அடியும் தண்ணீர் திறக்கப்பட்டது.



தற்போது, தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை பெய்து வருகிறது. ஈரோடு மாவட்டத்திலும் நல்ல மழை பெய்வதால், பவானிசாகர் அணையிலிருந்து வாய்க்காலில் தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டது. ஆற்றில் மட்டும் 400 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது. பவானிசாகர் அணையின் நீர்ப்பிடிப்பு பகுதியான நீலகிரி மாவட் டத்தில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால், அணைக்கு தண்ணீர் வரத்து அதிகரித்தது. கடந்த 6ம் தேதி, அணையில் நீர்மட்டம் 69.52 அடியாக இருந்தது. அன்று அணைக்கு 2,394 கன அடி தண்ணீர் வந்தது. 8ம் தேதி அணைக்கு 24 ஆயிரத்து 190 கன அடி தண்ணீர் வந்தது. அணையின் நீர்மட்டம் 76 அடியாக உயர்ந்தது. கோவை மாவட்டம், மேட்டுப் பாளையம் அருகிலுள்ள பில்லூர் அணை நிரம்பியதால், அங்கிருந்து பவானியாற்றில் தண்ணீர் திறக்கப் பட்டது. நேற்று முன்தினம் பகல் முதல், பவானியாற்றில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. இதனால், பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரிக்க ஆரம்பித்தது.



நேற்று காலை 9 மணிக்கு, அணை வரலாற்றிலேயே அதிகபட்ச அளவாக, வினாடிக்கு இரண்டு லட்சத்து 56 ஆயிரத்து 343 கன அடி தண்ணீர் வந்தது. காலை 10 மணிக்கு சற்றே நீர்வரத்து குறைந்து, ஒரு லட்சத்து 6,576 கன அடி நீர் வந்தது. 11 மணிக்கு 58 ஆயிரம் கனஅடியாகவும், மாலை 3 மணிக்கு 36 ஆயிரத்து 819 அடியாகவும், 5 மணி நிலவரப்படி 26 ஆயிரத்து 464 கன அடியாகவும் தண்ணீர் வரத்து படிப்படியாக குறைந்தது. பவானிசாகர் அணை 1948 -1955ல் கட்டப்பட்டதில் இருந்து, மிக அதிகபட்சமாக, நேற்று தான், 2.56 லட்சம் கன அடி நீர்வரத்து ஏற்பட்டு வரலாற்று சாதனை படைத்தது. அணையின் மொத்த கொள்ளளவு 32.8 டி.எம்.சி., தற்போது 17.4 டி.எம்.சி., தண்ணீர் தேக்கி வைக்கப் பட்டுள்ளது. அணையின் மொத்த நீர்மட்டம் 105 அடியில், நேற்று 84 அடியாக நீர்மட்டம் உள்ளது. நேற்று முன்தினம் 76 அடியாக இருந்த நீர்மட்டம் நேற்று ஒரே நாளில் எட்டு அடி உயர்ந்துள்ளது. கனமழையால், பவானி ஆறு, வாய்க்கால்களில் தண்ணீர் திறப்பு முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளது.



நொய்யலாற்றில் வெள்ளப் பெருக்கு: இருவர் பலி: நொய்யல் ஆற்றில் பெரும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதில், இருவர் பலியாயினர். நொய்யலாற்றின் குறுக் கே, ஈரோடு மாவட்டம் சென்னிமலை அருகே கட்டப்பட்டுள்ள ஒரத்துப் பாளையம் அணைக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது. அணை நீர்மட்டம் நேற்று 20 அடியாக உயர்ந் தது. நொய்யலாறு படுகையில் வெள்ளியங்கிரி மலைப்பகுதி, கோவை, திருப்பூர் மாவட்ட பகுதிகளில், பலத்த மழை பெய்து வருவதால், வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. அதனால், நொய்யல் ஆற்றில் வெள்ளநீர் கரைபுரண்டு ஓடுகிறது. திருப்பூர் பகுதியில் செயல்படும் சாயக்கழிவு நீர் சுத்திகரிப்பு செய்யாமல் ஆற்றில் வெளியேற்றப்படுவதால், ஐகோர்ட் உத்தரவுப்படி ஒரத்துப்பாளையம் அணை எப்போதும் திறந்துதான் இருக்கும். தற்போது மழை வெள்ள நீர் வந்தாலும், இதை தேக்கி வைக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. சாயக் கழிவு நீர் கலந்திருப் பதால், அணையின் நான்கு மதகுகள் வழியாக, வெள்ளநீர் அப்படியே வெளியேற்றப்படுகிறது. மழையால் அணை நீர்மட்டம் 20 அடியாக உயர்ந்தபோதும், விவசாயத்துக்கு பயன்படுத்த முடியாத சூழ்நிலை உள்ளதால், விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். நொய்யல் ஆற்றுப்படுகையில் திருப்பூர், கோவை மாவட்டத்தில் வெள்ள அபாய எச்சரிக்கை விடப் பட்டு இருந்தது.



ஆற்றின் குறுக்கே அதிகப்படியான தரைப்பாலங்கள் உள்ளன. அவை அனைத்தும் வெள் ளத்தில் மூழ்கிவிட்டன. கோவை மாவட்டம் அன்னூரைச் சேர்ந்த பழனிசாமி மகன் கார்த்தி (25). திருப்பூர் மாவட்டம் ஊத் துக்குளி தரைப்பாலத்தில், பைக்கில் வந்த இவரை வெள்ளம் அடித்துச் சென் றது. இவரது உடலை தீயணைப்பு வீரர்கள் தேடி வருகின்றனர். திருப்பூர் பகுதியில் நொய்யல் ஆற்றுப்படுகையில் விளையாடிய மணிகண்டன் (12) என்ற மாணவன், வெள்ளத்தில் இழுத் துச் செல்லப்பட் டான். சிறுவன் உடலையும் தேடும் பணி நடக் கிறது. வெள்ளம் கரை புரண்டு ஓடுவதால், தேடுதல் பணி தாமதமாகி வருகிறது.



காண்டூர் கால்வாயில் நீர்வரத்து பாதிப்பு : திருமூர்த்தி அணைக்கு சிக்கல்: காண்டூர் கால்வாய் நீர்வரத்து பாதிக்கப்பட்டதால், திருமூர்த்தி அணை நிரம்புவதில் சிக்கல் ஏற்பட்டுள் ளது. திருப்பூர் மாவட்டம், உடுமலை அருகேயுள்ள திருமூர்த்தி அணைக்கு, பி.ஏ.பி., திட்ட தொகுப்பு அணைகளில் இருந்து காண்டூர் கால்வாய் வழியாக தண்ணீர் கொண்டு வரப்பட்டு, பிரதான கால் வாய் வழியாக பி.ஏ.பி., பாசனத்திற்கு தண்ணீர் வழங்கப்படுகிறது. கடந்த சில நாட்களாக பெய்த கனமழையில், பொள்ளாச்சி அருகே, 12வது கி.மீ.,ல் பாறை உருண்டு, 20 மீட்டர் நீளத் திற்கு கால்வாய் உடைப்பு ஏற்பட்டது. கால்வாயில், உடுமலை அருகே 35வது கிலோ மீட்டரில் பாறை விழுந்துள்ளது. இக்கால் வாய் மூலம், திருமூர்த்தி அணைக்கு நீர் வருவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனால், அணையின் நீர் மட்டம் உயர்வதில், சிக்கல் ஏற்பட்டுள்ளது.



நீர்ப்பிடிப்பு பகுதியில் மழை குறைவு : மெதுவாக நிரம்பும் மேட்டூர் அணை: காவிரி நீர்ப்பிடிப்பு பகுதியில், வடகிழக்கு பருவமழை குறைவாக பெய்வதால், மேட்டூர் மேட்டூர் அணை நீர்வரத்து குறைவாகவே உள்ளது. தமிழகம், கேரளா, கர்நாடகா ஆகிய மூன்று மாநிலத்தில் நீர்ப்பிடிப்பு பகுதியை கொண்டது காவிரி ஆறு. காவிரியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டால் மட்டுமே, தமிழகத்தின் மிகப்பெரிய அணையான மேட்டூர் ஸ்டான்லி அணையின் நீர்வரத்து அதிகரிக்கும்.



தமிழகத்தின் இதர அணைகளின் நீர்ப்பிடிப்பு பகுதியில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ள நிலையில், காவிரி நீர்ப்பிடிப்பு பகுதியில் குறைந்த அளவே மழை பெய்கிறது. அதனால், காவிரி மற்றும் துணையாறுகள் குறுக்கே கட்டப்பட்டுள்ள கே.ஆர்.எஸ்., கபினி அணைகளின் நீர்வரத்து அதிகரிக்கவில்லை. நேற்று முன்தினம் வினாடிக்கு 4,950 கனஅடியாக இருந்த கே.ஆர்.எஸ்., அணை நீர்வரத்து, நேற்று 6,260 கனஅடியாக இருந்தது. நேற்று முன்தினம், வினாடிக்கு 2,000 கனஅடியாக இருந்த கபினி நீர்வரத்து நேற்று 5,204 கனஅடியாக அதிகரித்தது. இரு அணைகளிலும் நீர்மட்டம் குறைவாக இருப்பதால், வினாடிக்கு 1,900 கனஅடி நீர் மட்டுமே மேட்டூர் அணைக்கு திறக்கப்பட்டது. எனினும் காவிரியின் தமிழக நீர்ப்பிடிப்பு பகுதியில் மழை பெய்ததால், நேற்று முன்தினம் வினாடிக்கு 10 ஆயிரத்து 647 கனஅடியாக இருந்த மேட்டூர் அணையின் நீர்வரத்து நேற்று 15 ஆயிரத்து 612 கனஅடியாக உயர்ந்தது.



சரளை கற்களான சென்னை மாநகர சாலைகள்: பருவ மழையால் சென்னை நகரில் உள்ள பிரதான சாலைகளில், மழைநீர் பெருக்கெடுத்து ஓடியதில், சாலைகள் சரளை கற்களாக மாறி விட்டன. கடந்த சில நாட்களாக வடகிழக்கு பருவ மழை அதிகளவில் பெய்து வருகிறது. இதனால், குடிசைப்பகுதிகள் முதல் திட்டமிட்டு உருவாக்கப்பட்ட நகர் பகுதி வரை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. பல உட்புற சாலைகள் வயல்வெளி போல் சேறும், சகதியுமாக காட்சியளிக் கின்றன. போதாகுறைக்கு நூறடிச் சாலை, பூந்தமல்லி நெடுஞ்சாலை, ஆற்காடு சாலை, திருமங்கலம் சாலை ஆகியவற்றில் பல இடங்களில், கடந்த சில நாட்களாக மழை நீர் வழிந்தோட வழியின்றி அப்படியே குளம் போல் தேங்கியுள்ளது. இதனால், தார் சாலைகள் அனைத்தும், தாறுமாறாகி சரளை கற்களின் குவியல் களாக மாறி விட்டன. கோயம்பேடு, வடபழனி, திருவேற்காடு, ஜெ.ஜெ.,நகர், எம்.எம்.டி.ஏ., பஸ் நிலையங்கள், பணிமனைகள், கோயம்பேடு மார்க்கெட் ஆகியவை மினி ஏரிகளாக மாறி விட்டன. அத்துடன் அவ்வப்போது மழை வருவது போலும், வெயில் அடிப்பது போலும் வானம் கண்ணாமூச்சி காட்டியதால், பொதுமக்கள் மழை நீடிக்குமா, நிற்குமா என முடிவுக்கு வர இயலாத நிலைக்கு தள்ளப்பட்டனர். ஆனால், பெரும்பாலான சாலைகளில் போக்குவரத்து நெரிசல் காணப்பட்டது.



மழையால் நெடுஞ்சாலை காலி : தொழிற்பேட்டையில் அவதி: திருவள்ளூரில் பெய்து வரும் மழையால், காக்களூர் சிட்கோ தொழிற்பேட்டை சாலை படுமோசமாகி வருகிறது. இதனால், அங்கு பணியாற்றும் தொழிலாளர்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர். திருவள்ளூர் அருகே காக்களூரில் சிட்கோ தொழிற்பேட்டையில் மழை காரணமாக, சாலைகள் மோசமாகி விட்டன. இத்தொழிற்பேட் டையில் இருந்து புட்லூர் செல்லும் மாநில நெடுஞ்சாலையில் தார் சாலை பெயர்ந்து, குண்டும் குழியுமாக காட்சி அளிக்கிறது. ஒவ்வொரு ஆண்டும் மழைக் காலத்தில் இதே நிலை இருந்து வருகிறது. அதை தவிர்க்க தொழிற் பேட்டை நிர்வாகம் எந்த நடவடிக் கையும் எடுக்கவில்லை. இதனால், தொழிலாளர்கள் கடும் பாதிப்படைந்து உள்ளனர். பல்வேறு இடங்களில் இருந்து புறநகர் மின்சார ரயில் மூலம் புட்லூர் ரயில் நிலையத்திற்கு வரும் தொழிலாளர்கள் மற்றும் அலுவலர்கள் அங்கிருந்து நடந்தும், வாகனங்கள் மூலமாகவும் தங்கள் தொழிற்சாலைகளுக்குச் செல்கின்றனர். தற்போதைய மழைக்கு சாலை சின்னாபின்னமாகி உள்ளது. இன் னும் சிறிது நாட்கள் மழை பெய்தால் தொழிற்பேட்டைக்குள் கால் வைக்க முடியாத நிலை ஏற்படும். தொழிற் சாலை உற்பத்திப் பொருட்களை வாகனங்கள் மூலம் வெளியிடங்களுக்கு கொண்டு செல்லவும் முடியாத நிலை ஏற்படலாம். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பலரது எதிர்பார்ப்பு.



கழிவுநீர் புகுந்ததால் மக்கள் தவிப்பு : பெரம்பூர், அருந்ததி நகரில் பரிதாபம்: பெரம்பூர், அருந்ததி நகரில் பாதாள சாக்கடை அடைப்பு ஏற்பட்டதால் சாலையில் பெருக் கெடுத்து ஓடிய கழிவுநீர் குடியிருப்புகளில் புகுந்தது. பெரம்பூர், அருந்ததி நகரில் நூற்றுக்கணக் கானோர் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் உள்ள பாதாள சாக்கடையில், அடிக்கடி அடைப்பு ஏற்பட்டு வந்தது. இதனால், அப்பகுதி மக்கள் பாதிக்கப்பட்டு வந்தனர். தற்போது, பெய்து வரும் தொடர் மழையால், அங்கு தாழ்வான பகுதியில் உள்ள வீடுகளில் மழைநீர் புகுந்தது. நேற்றுமுன்தினம் முதல் அருந்ததி நகரில், பாதாள சாக்கடையில் அடைப்பு ஏற்பட்டது. மழைநீருடன் கழிவுநீர் கலந்து தெருக்களில் ஓடுகின்றன. பல குடியிருப்புகளிலும் கழிவுநீர் புகுந்து துர்நாற்றம் வீசுகிறது. இதனால், சுகாதார சீர்கேடு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து, அப்பகுதி பொதுமக்கள் கூறுகை யில், "அருந்ததி நகரைப் பொறுத்தவரை பாதாள சாக்கடையில் அடிக்கடி அடைப்பு ஏற்படுவது வழக்கம். மழைக்காலம் ஆரம்பிக்கும் முன் மாநகராட்சி அதிகாரிகளிடம் புகார் செய்தோம். நடவடிக்கை எடுக்கவில்லை' என்றனர்.

நகல் எடுக்க         |    எழுத்தின் அளவு: Decrease font Enlarge font   |  More Picture
  மின்னஞ்சல்  |   RSS  |  Bookmark and Share


வாசகர் கருத்து
 Nalla sonniga Gopal 
by r raju,Coimbatore,India    11/11/2009 7:41:53 PM IST
 வருண பகவான் சென்னைக்கு அள்ளி கொடுத்துள்ளான். இனி ரோட்டிலே குளிக்கலாம் வாருங்கள்  
by R Gopal,Koaymbedu,India    11/11/2009 3:40:16 PM IST
 பாலிமர் கான்கிரீட் கொண்டு ரோடு போட்டால் தாங்கும் . அனால் அதில் கொள்ளை அடிக்க முடியாது . அது ஒன் டைம் முதலீடு  
by p dinesh,hyderabad,India    11/11/2009 3:19:03 PM IST
 It''s always happening during the season. We can''t stop rain or natural calamities because it is very powerful in the earth,
But we and the government should have taken necessary precaution before the season starts,If you have good roads the loss will be low.
We are using the latest technology and systems in all the fields, why can''t we implement the same against these disaster
Our roads are always worrying. No one can do with these roads until properly set down in all the areas.
 
by M Thiyagu,Chennai,India    11/11/2009 8:55:39 AM IST
 Mr. Stalin,

instead of making flyovers, better concentrate in Drainage sysem to avoid the probelms in the rainy season, as well as, from the unknown diseases. try to change the city plan, as per the present population in chennai, if not, the probelm never been solve. while you people are going to abroad, try to learn how the city has made in what population in the past and the present, what would be in the future. try to do the analysis in each and every sector, if you could''nt do better you take rest, give the lead to the youngsters which i mean below 35 yearls old.  
by s kumar,Dubai,United Arab Emirates    11/11/2009 8:37:11 AM IST
 Many roads in Chennai do not serve even for a year or two probably due to poor quality of materials used in laying and inefficient work. In the future it should be made obligatory to the contractor to guarantee quality for a prescribed number of years and the authorities who supervised the work to account for any lapse. 
by A.M.V Alagappan,Chennai,India    11/11/2009 7:22:11 AM IST
 Helllooo Road CONTRACT-ors its your turn for Enjoyment!!! Roads are not finished well at the end sides and many of our Chennai roads/streets are like with big holes, cracks and almost unsafe for the riders who r first time ride on the particular roads without know pre-history condns. of the ROAD. What about RD units & roadways unit doing for the perfect road developments? Govt. only should take the necessary actions.  
by Mr. G. Madeswaran,Chennai,India    11/11/2009 5:55:27 AM IST
Post Your Comments for the Article

 

Your Name  :
Initial : Name :
Your Email Id :
Your city (or) location  :  
Your country  :  
Your Comment:
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)


மேலும் முதல் பக்க செய்திகள்
» தினமலர் முதல் பக்கம்
  இ-பேப்பர்